தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அமிதாப்பச்சன், நேற்று ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ என்ற இந்திப்படத்தின் சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஒரு போர்க்கள காட்சி ஒன்று அப்போது படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது தனது தோள்பட்டை கடுமையாக வலிப்பதாக அவர் கூறியதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
எனவே அவருடைய தனி டாக்டர்கள் 3 பேர், மும்பையில் இருந்து விசேஷ விமானத்தில் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர்.
அவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது அவரது நன்றாக குணமாகி உடல்நிலை முன்னேறி வந்தாலும், அவர் சில நாட்கள் முறையாக ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமிதாப் விரைவில் நலம் பெற நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்வதாக நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Amitabh Bachchan Admitted in Hospital Now he is Recovering