தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் !!

தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.

“ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது ‘கடவர்’. நான் இந்த படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்
உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்” என்றார்.

இந்த படத்தின் ஒரு இணை தயாரிப்பாளராக மாறியது குறித்து அமலா பால் கூறும்போது, “இந்த படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, ஏனெனில் பல காரணிகள் உள்ளன. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையை வைத்திருந்த என் தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். என்னை ஒரு இணை தயாரிப்பாளராக ஏற்றுக் கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி. நாங்கள் பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. நல்ல கதை மற்றும் தயாரிப்பில் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் பல படங்களை இணைந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். எங்களது முதல் தயாரிப்பு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளை செய்யும் என நிச்சயமாக சொல்ல முடியும். இப்படி ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பளித்த APJ ஃபிலிம்ஸ் அஜய் பணிக்கர் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் பிரதீப் ஆகியோருக்கு நன்றி” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அமலா பால்.

இந்த படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார் அமலா பால்.

அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் (ராட்சசன் புகழ்) மற்றும் சில பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். துருவங்கள் 16 புகழ் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராட்சசன் புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராகுல் கருப்பையா கலை இயக்குனராக பணிபுரிய, விக்கி (உறியடி, ராட்சசன்) சண்டைப்பயிற்சி அளிக்கிறார்.

கோலிவுட் ஸ்பீடு டைரக்டருடன் இணையும் ஜெயம் ரவி..?

கோலிவுட் ஸ்பீடு டைரக்டருடன் இணையும் ஜெயம் ரவி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director hariபத்து நிமிட காட்சிகளை ஒரு நிமிடத்தில் சொல்லி முடிப்பவர் டைரக்டர் ஹரி. இதனால் இவருக்கு கோலிவுட்டில் ஓவர் ஸ்பீடு டைரக்டர் என்ற பெயரும் உண்டு.

மேலும் டாடா சுமோ இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது எனவும் கூறியிருந்தார். குறைந்த பட்சம் 50 கார்களையாவது பறக்க விடுவார்.

விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக ஜெயம் ரவியை இயக்கவுள்ளாராம்.

சிங்கம் பட பாணியில் அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படம் ஜூன் 21-ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு தனி ஒருவன் 2.. அதன்பின்னர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என கூறப்படுகிறது.

Director Hari and Jayam Ravi team up for new venture

அஜித் படம் அவ்வளவுதான்; தல ரசிகர்களை வியக்க வைத்த வினோத்!

அஜித் படம் அவ்வளவுதான்; தல ரசிகர்களை வியக்க வைத்த வினோத்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vinoth completed Ajiths Nerkonda Paarvai shoot within 42 daysஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ என்ற படத்தை ‘நேர் கொண்ட பார்வை’ என்ற பெயரில் இயக்கி வருகின்றனர்.

அஜித், வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க வினோத் இயக்கி வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

பெரும்பாலும் இப்பட சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் நடைபெற்றது.

கிட்டதட்ட 42 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்களாம்.

எனவே அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இவ்வளவு சீக்கிரம் அஜித் படத்தை வினோத் முடித்துள்ளதால் தல ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம்.

Vinoth completed Ajiths Nerkonda Paarvai shoot within 42 days

ரசிகர்கள் தொல்லையால் பிரச்சினைக்குள்ளாகும் விஜய் படங்கள்

ரசிகர்கள் தொல்லையால் பிரச்சினைக்குள்ளாகும் விஜய் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to fans crowd Vijay movies getting into troublesசர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் வெளிநாட்டில் படிக்கும் தன் மகனைப் பார்க்க விஜய் சென்றதால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

முக்கியமான காட்சிகளை சென்னையில் படமாக்கி வந்தனர். ஆனால் ரசிகர்களின் அன்புத் தொல்லையால் சூட்டிங்குக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறதாம்.

எனவே பிரம்மாண்ட் செட்டுக்களை ஸ்டூடியோக்களில் அமைத்து வருகிறார்களாம்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாக அமைத்திருந்தார்களாம்.

இவ்வாறாக செட்டுகளை அமைத்து வருவதால் படத்தின் பட்ஜெட்டும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறதாம்.

விஜய் படங்கள் நன்றாக வசூலித்தாலும் இதுபோன்ற திட்டமிட படாத செலவுகளால் பட்ஜெட் அதிகமாக லாபம் குறைந்து வருகிறதாம்.

Due to fans crowd Vijay movies getting into troubles

மொத்த தொகுதிலயும் ‘ஒத்த செருப்பு’டன் நிற்கும் பார்த்திபன்

மொத்த தொகுதிலயும் ‘ஒத்த செருப்பு’டன் நிற்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் முடிவுகளை இந்திய தேசமே ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு பலரும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “இந்தத் தேர்தலில் நான் ஆதரிக்கப்போகும் சின்னத்தை (தேர்ந்தெடுக்க) வெளியிடுகிறேன்” என தெரிவித்து இருந்தார்.

ஒருவேளை நடிகர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்கப் போகிறாரா? என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் அடுத்த இயக்கவுள்ள “ஒத்தசெருப்பு சைஸ் 7” என்ற படம் பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஒத்த கால் செருப்பு போட்டோவை போட்டு வாக்களிப்பீர், ஒத்த கால்ல நிக்கிறோம்…. மொத்த தொகுதிலயும்! இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு உதவியாக அரசியல் களத்தில் ஸ்ருதிஹாசன்..?

கமல்ஹாசனுக்கு உதவியாக அரசியல் களத்தில் ஸ்ருதிஹாசன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

மக்களவை தேர்தலில் தன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் தந்தையின் அரசியல் பயணம் குறித்து கூறியதாவது…

என் தந்தை மக்களுக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர்.

நான் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆனால் என் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்வேன்” என கூறியுள்ளார்.

More Articles
Follows