சிகரெட் ஸ்மோக்கிங்..: ரஜினி ஸ்டைலை பாலோ பண்ணும் அல்லு அர்ஜுன்

சிகரெட் ஸ்மோக்கிங்..: ரஜினி ஸ்டைலை பாலோ பண்ணும் அல்லு அர்ஜுன்

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல் என்றால் அதில் அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலும் அடங்கும்.

பல படங்களில் பல விதமாக ஸ்டைல் ஸ்டைலாக தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பார். இதெல்லாம் 2K கிட்ஸ்க்கு பெரிதாக தெரிய வாய்ப்பில்லை.

ரஜினி ஸ்டைலால் அவரது மார்கெட்டும் எகிறியது. சில ரசிகர்களும் அவரது ஸ்டைலை பின்பற்றி சிகரெட்டை ஊதித் தள்ளினர்.

பாபா படத்தில் தான் இறுதியாக புகை பிடித்தார். அப்போது ரஜினியிடம் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரும் அப்போதைய மத்திய அமைச்சருமான அன்புமணி வைத்த வேண்டுகோளின் படி புகைப்பிடிப்பதை நிறுத்தினார்.

பின்னர் தன் ரசிகர்களையும் சிகரெட் பிடிக்க வேண்டாம் என அட்வைஸ் செய்தார்.

தற்போது அவரது பாணியில் நடிகர் அல்லு அர்ஜுனும் புகைப் பிடித்தலுக்கு எதிராக தன் ரசிகர்களிடமும் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதன் விவரம் வருமாறு…

கொரோனா காலத்தில் புகை பிடிப்பதன் கெடுதல்கள் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமும் கூட. புகை பிடிப்பவர்கள் கொரோனவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாற்றத்தைத் தூண்டுவதற்கு நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இதை கடைபிடித்து தற்பொழுது நடிகர் அல்லு அர்ஜுன் புகை பிடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மேலும் அவரது ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதை பற்றி அல்லு அர்ஜுன் கூறுகையில்…

“புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன்.

90களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.

தற்பொழுது 2021-ல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது .

இதற்க்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன்.

சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மை சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்லும் நான் நம்புகிறேன்,” என்றார்.

அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இத்திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

Allu Arjun follows Super Star Rajinikanth’s way

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *