தனுஷ்-அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் அக்‌ஷராஹாசன்

தனுஷ்-அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aksharahassan joins with Vikram after Ajithஷமிதாப் என்ற இந்திப் படத்தில் அமிதாப் மற்றும் தனுஷுடன் நடித்து தன் சினிமாவை பயணத்தை ஆரம்பித்தார் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை கன்னடத்தில் தொடங்கவிருக்கிறார்.

நாகசேகர் இயக்கும் கன்னட படத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் எனும் அறிமுக ஹீரோவுடன் நடிக்கிறார்.

இவர் கன்னட சினிமாவின் கிரேஸி ஸ்டார் என்றழைக்கப்படும் ரவிச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Aksharahassan joins with Vikram after Ajith

விவேகம் படத்தில் அஜித் பெயர்; மெர்சல் படத்தில் விஜய் பெயர் இதுதான்

விவேகம் படத்தில் அஜித் பெயர்; மெர்சல் படத்தில் விஜய் பெயர் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vivegamசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விவேகம் படத்தின் சூட்டிங் இன்றோடு முடிந்துவிட்டது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் விவரங்கள் கிடைத்துள்ளன.

இப்படம் 2 மணிநேரம் 20 நிமிட ஓடக்கூடியதாம்.

இப்படத்தில் அஜித் கேரக்டரின் பெயர் AK என கூறப்படுகிறது. (ஏகே என்றாலும் அஜித்குமார் என்றேதான் வரும்)

அனிருத்தின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளதாகவும், முறையான மூன்று ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தில் விஜய் கேரக்டர் பெயர் உறுதியாகியுள்ளது.

மெர்சல் படத்தின் முதல் பர்ஸ்ட் லுக்கில் வந்த கேரக்டர்தான் மருத்துவர் திலகம் மாறன்.

இத்தகவலை நாம் சென்ற மாதமே தெரிவித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்யின் மற்ற இரண்டு கேரக்டர்களில் ஒருவர் மேஜின் மேனாகவும், மற்றொருவர் பஞ்சாயத்து தலைவராகவும் நடிக்கின்றனர்.

Ajith name in Vivegam and Vijay name in Mersal movie revealed

இதோ அதற்கான லிங்க்…

https://www.filmistreet.com/cinema-news/sathyaraj-arrested-vijay-atlee-3-movie-updates/

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Today Ajith fans got double happinessகடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் வெளியானது.

2016ஆம் ஆண்டில் அவரது எந்த படமும் வெளியாகவில்லை.

அதனையடுத்து தொடங்கிய விவேகம் படத்தின் சூட்டிங் வெகு நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த செய்தி வந்த அதே நேரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனது என்ற தகவலும் வந்துள்ளது.

எனவே மற்ற ரசிகர்களுடன் இணைந்து அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Today Ajith fans got double happiness

ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் தியேட்டரில் படம் பார்க்கலாம்

ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் தியேட்டரில் படம் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 cinemas will be opened from tomorrow Protest against tax additional to GST is cancelledமத்திய அரசின் ஜிஎஸ்டி 28% மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி 30% ஆகியவற்றுடன் சேர்த்து, சினிமா டிக்கெட் மீது விதிக்கப்பட்டது.

எனவே தமிழக அரசின் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள 1100 மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன.

இதனால் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் சற்றுமுன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டாலும் நஷ்டத்தை கணக்கில் கொண்டு தியேட்டர்களை நாளை முதல் திறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தற்காலிக ஸ்டிரைக் வாபஸ் எனவும் கூறப்படுகிறது.

எனவே நாளைமுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ரூ. 100க்குள் டிக்கெட் கட்டணமிருந்தால் 18% ஜிஎஸ்டியும், ரூ. 100க்கும் மேல் டிக்கெட் இருந்தால் 28% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்பட உள்ளது.

திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க கமிட்டி  ஒன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியில்  மொத்தம் 12 பேர் இருப்பார்கள். அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள் மீதி 6 பேர் திரைத்துறையை சார்ந்தவர்கள். திரைத்துறை சார்பில்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், Hon. செயலாளர் கதிரேசன் , பொருளாளர் எஸ். ஆர். பிரபு , தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும்  திருப்பூர் சுப்பிரமணியன் , அருள்பதி ஆகியோர் இடம்பெறுவர்.

இந்த கமிட்டி தமிழக அரசோடு இணைந்து டிக்கெட் கட்டணம் மற்றவையை முடிவு செய்யும்..

1000 cinemas will be opened from tomorrow. Protest against tax additional to GST is cancelled

தமிழக நடிகர்களில் இப்போ தனுஷ்தான் டாப்

தமிழக நடிகர்களில் இப்போ தனுஷ்தான் டாப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush welcomeதன் இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ்.

இன்று கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தன் நடிப்பால் கலக்கி வருகிறார்.

மேலும் பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து பிஸியாக இருக்கிறார்.

இவையில்லாமல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் 50 லட்சத்தை (5 மில்லியன்) எட்டியுள்ளார்.

ட்விட்டரில் உள்ள ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை கடந்து தனுஷ் தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Only Tamil Actor Dhanush crossed 5 millions followers in twitter

எத்தனை நாளைக்குத்தான் விஜய்-அஜித் இப்படியே இருப்பாங்க.?

எத்தனை நாளைக்குத்தான் விஜய்-அஜித் இப்படியே இருப்பாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When will Ajith Vijay break their silence on TN Govt Tax on Cinemaதமிழக அரசின் 30% வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

தற்போதும் இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகள் தமிழக அரசுடன் நடைபெற்று வருகிறது.

விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சில நேரங்களில் விஜய்யாவது ஏதாவது பேசுவார். ஆனால் பெரும்பாலும் எந்த விஷயத்திலும் அஜித் பேசவே மாட்டார்.

அவர்கள் சம்பந்தப்பட்ட சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? என அவர்களின் ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர்.

When will Ajith Vijay break their silence on TN Govt Tax on Cinema

More Articles
Follows