அறிவிப்புக்கு முன்பே ட்விட்டரில் விஸ்வாசம் கொண்டாட்டம்

Ajiths Viswasam tops Twitters influential moments in 2019 நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் இந்தாண்டு 2019 பொங்கல் சமயத்தில் வெளியான படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியதால் இந்த படம் கவனம் பெற்றது.

இந்த நிலையில் ட்விட்டரில் விஸ்வாசம் ஒன்று சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியானது.

அதாவது 2019ம் ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் முன்னணியில் இருந்த ட்ரெண்டுகள் வெளியாகியுள்ளது.

இதில் முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதான் இறுதியான ரிசல்ட்டா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajiths Viswasam tops Twitters influential moments in 2019

Overall Rating : Not available

Related News

"நாளை உனக்கொரு காலம் வரும்" என்ற…
...Read More
திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி…
...Read More
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா…
...Read More

Latest Post