உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்துக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் ஒரு சில ரசிகர்களை வெறியர்கள் என்று கூட சொல்லலாம்.

இதில் பிரகாஷ் என்ற ரசிகரை ‘அஜித் பக்தன்’ என்றும் கூட சொல்லலாம்.

தன் உடல் முழுக்க அஜித் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதாவது டாட்டூஸ் போட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன்… அஜித்தின் அவதாரங்களை (Photographer Bike & Car Racer, Aero Modellor….. MJJ Professor என அனைத்தையும் தன் உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள்… தல பிரகாஷ்.. RIP Prakash என ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

என் #தாய் என்னை பத்து மாதம் #சுமந்தாள்
#தாயை_போல_தலஎன்பதால் #ஆயுள்_முழுக்க
என் #அண்ணனை_நான்_சுமக்கின்றேன்என்றும்
#விஸ்வாசமாக_தல_பிரகாஷ்❤️ https://t.co/EVlFUTHZbk

Ajith’s die hard fan commits suicide

Ajith fan prakash (2)

நெட்டிசன்களை கிக் ஏற்றி தள்ளாட வைத்த நடிகை தர்ஷா குப்தா

நெட்டிசன்களை கிக் ஏற்றி தள்ளாட வைத்த நடிகை தர்ஷா குப்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darsha Gupta‘முள்ளும் மலரும்’ மற்றும் ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

சின்னத்திரையில் பிரபலமாகிவிட்டாலே அவர்களின் அடுத்த டார்கெட் வெள்ளித்திரை தான்.

எனவே இவரும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என எண்ணி் ரசிகர்களை சூடேற்றும் அளவுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்தும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் அந்த புகைப்பங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது செம செக்ஸியாக ஒரு லுக் விட்டு ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் செம போதை ஏறியதை போல தள்ளாடி வருகின்றனர்.

நீங்களே அந்த புகைப்படங்களை பாருங்களேன்..

Fans comment on Dharsha’s recent pic

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..; காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..; காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith (2)கடந்த வாரம் நடிகர் அஜித் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைஃபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அந்த போட்டோக்களையும் அந்த வீடியோக்களையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக இன்று காலை பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு (வாடகை காரில்) வந்தார்.

அப்போது அங்கு எஸ்.ஐ. தேர்வுக்கான நேர்முக தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த நபர்கள் அஜித்தை பார்க்க திரண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அருகே இருந்த ரசிகர்கள் பலரும் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அஜித்துடன் செஃல்பி எடுக்க நீண்ட நேரமாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார் நடிகர் அஜித்.

அதன் பின்னர் வெளியே வந்து ரசிகர்களிடம் கை அசைத்து காரில் ஏறி சென்றுவிட்டார் அஜித்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் அஜித்துடன் செர்ஃபி எடுக்க முடியாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Fans disappoints over ajith’s reaction

ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ படத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்

ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ படத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pambattam (2)ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார்.

மற்றும் இவர்களுடன் ஆசிஷ்வித்யார்த்தி, முக்கிய கதாாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – பா.விஜய், யுகபாரதி, விவேகா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – A. பழனிவேல்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

நடனம் – தினேஷ், சிவசங்கர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

இணை தயாரிப்பு – பண்ணை A இளங்கோவன்

தயாரிப்பு – V.பழனிவேல்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

Bollywood actress Mallika Sherawat joins Jeevan film

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு.; மீண்டும் ‘எம்டன் மகன்’ கூட்டணி

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு.; மீண்டும் ‘எம்டன் மகன்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu rj balajiசின்னத்திரை டிவி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்த இயக்குனர் திருமுருகன் வெள்ளித்திரையில் கலக்கிய படம் ‘எம்டன் மகன்’.

பரத், கோபிகா, நாசர், சரண்யா நடித்திருந்த இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது.

பின்னர் டிவி சீரியல்களில் பிஸியாகி விட்டார் திருமுருகன்.

தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்க இருக்கிறார்

இவருடன் முக்கிய வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க போகிறாராம்

இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vadivelu and RJ Balaji joins for Thiru Murugan’s next

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாணியில் யோகி பாபு நடிக்கும் ‘கங்கா தேவி’

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாணியில் யோகி பாபு நடிக்கும் ‘கங்கா தேவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu‘ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்கா தேவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.

‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால்…

”ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம்.

குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும்.

குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார்.

அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்!” என்றார்.

Yogi Babu’s next film is titled Ganga Devi

More Articles
Follows