JUST IN புரிந்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.; தந்தையை இழந்த நடிகர் அஜித் அறிக்கை

JUST IN புரிந்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.; தந்தையை இழந்த நடிகர் அஜித் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணி என்ற எஸ் மணி இன்று காலமானார்.

தந்தையை இழந்த அஜித்திற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் & அவரது சகோதரர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில்….

எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

அனுப் குமார்
அஜீத் குமார்
அனில் குமார்

Ajith statement regarding his father death

ரிலீஸ் அப்டேட்.: ரஜினி படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்

ரிலீஸ் அப்டேட்.: ரஜினி படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ரஜினி”

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதி – மனோ V.நாராயணா

கலை – ஆண்டனி பீட்டர்

நடனம் – செந்தாமரை

எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்

புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – V.பழனிவேல், கோவை பாலசுப்ரமணியம்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்

படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…

“ரஜினி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன்.

ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்.

அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.

படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Vanitha Vijayakumar is part of Rajini the movie

வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் ஜெய் – அருண்ராஜா காமராஜ்

வித்தியாசமான படத்தலைப்பில் இணையும் ஜெய் – அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நெஞ்சுக்கு நீதி’ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டது. நெஞ்சுக்கு நீதி பட இயக்குனர் தனது அடுத்த படத்திற்காக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்துள்ளார்.

ஜெய், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய ஹாட்ஸ்டார் ஒரிஜினல் தொடரை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார். இதற்கு ‘லேபிள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Director Arun Raja Kamaraj’s next with Actor jai

JUST IN நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் காலமானார்

JUST IN நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவர் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம். இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அஜித்தின் தந்தை சுப்ரமணியம்.

எனவே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார்.

சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் காலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Ajith Kumar’s father P Subramaniam passes away at 84

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங் டார்கெட் & க்ளைமாக்ஸ் அப்டேட் இதோ..

விஜய்யின் ‘லியோ’ பட சூட்டிங் டார்கெட் & க்ளைமாக்ஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும், படக்குழு விரைவில் சென்னை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

அதன்பிறகு ஒரு இடைவேளைக்குப் பிறகு சென்னையில் ஒரு ஷெட்யூலை நடத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை ஷெட்யூலைத் தொடர்ந்து, ‘லியோ’ படக்குழு அடுத்ததாக ஹைதராபாத் சென்று ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளது.

மேலும், ‘லியோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay’s ‘Leo’ climax sequence is to be shot at Hyderabad

மாஸ்கோ திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’.; சிலிர்க்கும் சீனு ராமசாமி

மாஸ்கோ திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’.; சிலிர்க்கும் சீனு ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படம் கடந்த ஆண்டு ஜூன் 2022 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் சிறந்த விமர்சனங்களுடன் தொடங்கி உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றது.

சமீபத்திய தகவலின்படி, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

ஏப்ரல் 20 முதல் 27 வரை நடைபெறவுள்ள 45வது மாஸ்கோ திரைப்பட விழாவிற்கு ‘மாமனிதன்’ அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு திரைப்பட விழாக்குழுவினர் முறைப்படி கடிதம் ஒன்றை அனுப்பி இயக்குநரின் படத்தை உறுதி செய்துள்ளனர்.

மாமனிதன்

‘Maamanithan’ to be screened at the Moscow Film Festival

More Articles
Follows