தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் மக்களின் வரவேற்பை பெற்று இன்னும் தியேட்டரிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை அடுத்து போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அஜித்.
இது ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு தற்காலிகமாக தல 59 என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்க யுவன் இசையமைக்கிறார்.
இப்படத்தை அடுத்து தல 60 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.
இந்த தல 60 படமானது அஜித் ரசிகர்களை கவரும் வகையில் மாஸ் மற்றும் கமர்ஷியலாக இருக்கும் என கூறப்படுகிறது.
Ajith starrer Thala 60 movie news updates