தன் PRO தாயாரின் மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்

தன் PRO தாயாரின் மரணத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Pro Suresh Chandras mother passed awayநடிகர் அஜித்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா.

இவரின் தாயார் திருமதி. சத்யவதி சுதர்சன் அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவரது மரணத்தை அறிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Ajith Pro Suresh Chandras mother passed away

ரஜினியுடன் அஜித் மோதியதால் விஜய்யுடன் மோதும் ஹீரோக்கள்

ரஜினியுடன் அஜித் மோதியதால் விஜய்யுடன் மோதும் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta and Viswasam clash formula continuing to Bigil clashரஜினி படங்கள் ரிலீஸாகும் போது தங்கள் படங்களை மற்ற நடிகர்கள் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் சந்திரமுகி ரிலீஸ் சமயத்தில் சச்சின் படத்தை வேண்டுமென்றே ரிலீஸ் செய்தார் விஜய்.

ஆனால் சச்சின் படம் படுதோல்வி அடைய அதன்பின் மற்ற ஹீரோக்கள் எந்த படங்களையும் ரிலீஸ் செய்யவில்லை. அதன்பின்னர் இந்தாண்டு 2019 ரஜினியுடன் பேட்ட படத்துடன் மோதினார் அஜித். தன் விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்தார்.

பொங்கல் தினம் என்பதால் நிறைய விடுமுறை நாட்கள் வரவே இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டையாடியது.

இதனையடுத்து தற்போது மற்ற ஹீரோக்களும் இதே பார்முலாவில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது வருகிற தீபாவளி பண்டிகை சமயத்தில் விடுமுறை தினங்கள் வருவதால் அந்த சமயத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வருகிறது. அத்துடன் கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Petta and Viswasam clash formula continuing to Bigil clash

கேன்சரால் பாதிக்கப்பட்ட விஜய் பட இயக்குனரை கேவலப்படுத்திய போலீஸ்

கேன்சரால் பாதிக்கப்பட்ட விஜய் பட இயக்குனரை கேவலப்படுத்திய போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thirumalai director Ramana is insulted by Police on Publicதொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு திருமலை படம் மூலம் பெரிய பிரேக் கொடுத்தவர் இயக்குனர் ரமணா.

அவர் தற்போது தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து போராடி மீண்டு கொண்டிருப்பவர். அவர் ஒரு போலீசரால் அவமதிக்கப்பட்டதை பகிர்ந்துள்ளார். அந்த பதிவுதான் இது…

காவல்துறையில் களைகள்

கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்…

இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள்.

இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.

சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார்.

ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார். அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.

அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.

அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது… உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்… என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஒரு கான்ஸரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட…

அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்… நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு… என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட…வாக்குவாதம் நீடிக்க… பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா… நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்…

ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.

குறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்… சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொடிக்கும் எங்களைப்போன்ற கேன்ஸர் போராளிகளிள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை… ஆனால்,
இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்… என்றும் கண்ணியமில்லாத வார்தைகளை சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம்.

செய்வார்களா…?

வேதனையுடன்
ரமணா

Vijays Thirumalai director Ramana is insulted by Police on Public

*பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கதிரவன் இணையும் புதியப்படம்*

*பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கதிரவன் இணையும் புதியப்படம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 23ம் தேதி காலை 10 மணியளவில் பிரபல *சக்ஷ்டி* தயாரிப்பில் பழம்பெரும் நடிகர் *தியாகராஜன்* நல்லாசியுடன் நடிகர் *கதிரவன்* கதையின் நாயகனாக நடிக்கும் *வன்முகம்* பைலட் படத்தின் பூஜை மிக சிறப்பாக படக்குழுவினருடன் நடைபெற்றது.

படத்தை *ரஞ்சித் பால்ராஜ்* இயக்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் *ராஜேஷ்*, படத்தொகுப்பாளர் *ஜெயவினோ*, இசையமைப்பாளர்கள் *பாலசுந்தர் & டேனி*, மற்றும் பல படக்குழுவினர்கள்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுச்சேரி மாநில பகுதிகளில் நடைபெற உள்ளது.

இச்சமுதாயத்தில் நடைபெறும் சில அவளநிலைகளை பற்றி எடுத்துரைக்கும் ஒரு நல்ல படமாக இது இருக்கும். இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.

*நடிகர் தியாகராஜன்* அவர்கள் இந்த படக்குழுவினர்களை அழைத்து பாராட்டியுள்ளார் என்பது தனி பெரும் சிறப்பு.

வழக்கறிஞரை அடுத்து மீண்டும் போலீசாகும் அஜித்

வழக்கறிஞரை அடுத்து மீண்டும் போலீசாகும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)வினோத் இயக்கிய ‛நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீலாக நடித்திருந்தார் அஜித்.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இது அஜித்தின் 60வது படமாக உருவாகவுள்ளது.

பெரும் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் தலைக்கு டை அடித்து இளமையாக நடிக்கிறார்.

ஏற்கனவே, ‛ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் போலீஸாக நடித்திருந்தார் அஜித்.

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் இத்தனை ஹீரோக்கள் மோதலா?

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் இத்தனை ஹீரோக்கள் மோதலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 Kollywood heros may clash with Vijay on Diwali release விஜய் நடித்து வரும் பிகில் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர்.

அந்த தேதியில் வேறு எந்த படங்களும் வெளியாகாது என பிகில் டீம் நினைத்திருந்தனர்.

ஆனால் தற்போது கிட்டதட்ட பிகில் படத்துடன் 3 படங்கள் மோதும் எனத் தெரிகிறது.

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி, ஆகிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இத்துடன் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆனால் அசுரன் படமும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்பதால் பட்டாஸ் தள்ளி போக வாய்ப்பு இருக்கலாம்.

3 Kollywood heros may clash with Vijay on Diwali release

More Articles
Follows