தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவைத் தாண்டியும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.
அதற்கு காரணம் அவரது உழைப்பு, வளர்ச்சி, நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவைத்தான்.
ஆனால் சில காலமாக தான் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தோ விழாக்களிலோ அல்லது தமிழர்களின் நலனுக்காக நடைபெறும் நிகழ்வுகளிலோ அவர் கலந்துக் கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சநித்து வருகிறது.
ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் அஜித் மௌனம் கலையவில்லை.
ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்திய போது கூட ஒன்றும் பேசாமல் கலந்துக் கொண்டு சென்றார்.
அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் கலை விழா, சங்க கட்டிட பூஜை என எதிலும் கலந்துக் கொள்ளவில்லை.
நடிகர் சங்கத் தேர்தலிலும் அவர் வாக்களிக்க வரவில்லை.
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்துக் கொண்டே அவர் எதிலும் கலந்துக் கொள்வதிலை.
இவை ஒரு புறம் இருந்தாலும் அவரை வாழவைத்த தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.
இது மக்கள் மத்தியில் அவர் மீதான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஓர் அறிக்கை கூட அஜித் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை அவரது ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.