அரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி

actor aari and ajithநடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா காலம் தொட்டே இது நடந்தேறி வருகிறது.

கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

அண்மைக் காலமாக ரஜினி, விஜய் ஆகியோர் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரக்கூடும் என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள விசிறி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஆரி பேசியதாவது…

அஜித் அரசியலுக்கு வருவாரா? எனத் தெரியவில்லை. ஆனால் அவர் இப்போதே தமிழ் நாட்டின் வரைப்படத்தை வைத்து நலத் திட்டங்களை தீட்டி வருகிறார்.

தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற வேண்டும் என அவர் திட்டம் வைத்திருக்கிறார். இதை அஜித்துக்கு நெருங்கிய நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

வெளியே சொல்லக்கூடாது என்றார். ஆனால் இப்போது சொல்லிவிட்டேன். என அஜித் ரகசியத்தை போட்டு உடைத்தார் நடிகர் ஆரி.

Overall Rating : Not available

Latest Post