ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் விஸ்வாஸம்

ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் விஸ்வாஸம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith in viswasamஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“திரு.அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் ‘விஸ்வாஸம்’ படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது தான். ஆனால், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது என்கிறார் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் பிரசாந்த். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நாடுகளில் நம் திரைப்படங்களின் வரவேற்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், “பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி நல்ல கதையுள்ள படங்களால் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், இங்குள்ள ரசிகர்கள் தொழில்நுட்ப ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உணர்வுள்ள நல்ல குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படங்களையும் கூட மிகவும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக, குடும்ப உணர்வுகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். மேலும், தமிழ் பேசும் நாடுகளை தாண்டி, அஜித்குமாரின் பல திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து, அவருக்கென ஒரு வலுவான ரசிகர் தளம் இந்த நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விஸ்வாஸம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார்.

அஜித் படத்தை முடித்துவிட்டு ரஜினி-தனுஷை இயக்கும் வினோத்

அஜித் படத்தை முடித்துவிட்டு ரஜினி-தனுஷை இயக்கும் வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

H Vinothகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தை 2019 ஜனவரி 10ஆம் தேதி வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இப்படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இப்படத்தை லைகா தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இதே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 59 படத்தையும் வினோத் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் அரசியல் களத்தில் குதிக்க முடிவு

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் அரசியல் களத்தில் குதிக்க முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanth and vijaya prabakaranதேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என தண்டையார் பேட்டையில் நடந்த கிருஸ்மஸ் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் புனித நற்செய்தி அருளப்பர் தேவாலயத்தில் தேமுதிக சார்பில் கிருஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து கருணாலயா இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கிருஸ்துமஸ் பலகாரம் மற்றும் உணவுகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதல் மகனான விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது…

“கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிகவை பொறுத்தவரை கட்சியில் எந்த குளறுபடியும் இல்லை.

நான் அரசியலுக்கு வருவதில் எந்த கட்டுபாடும் இல்லை. தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும்.” என அவர் தெரிவித்தார்.

இந்துக்கள் எதிர்ப்பை அடுத்து ஹன்சிகாவை முஸ்லீமாக மாற்றிய ஜமீல்

இந்துக்கள் எதிர்ப்பை அடுத்து ஹன்சிகாவை முஸ்லீமாக மாற்றிய ஜமீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hansika maha posterநடிகை ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’ படத்தை இயக்கி வருகிறார் ஜமீல்.

இந்த பட போஸ்டர்கள் சில நாட்களாகவே சர்ச்சையாகி வருகிறது.

இந்து பெண் துறவி போல கஞ்சாவை புகைத்துக் கொண்டு அந்த போஸ்டர்களில் ஹன்சிகா இருந்தார்.

இதனால் இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் உருவானது.

மேலும் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் என்பவர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்து, இயக்குநர் மற்றும் நடிகை மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இப்படத்தின் 2வது போஸ்டரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் டைரக்டர் ஜமீல்.

அதில்… ஒரு முஸ்லிம் பெண் போல வேடமிட்டு தொழுகையில் ஈடுபடுகிறார் ஹன்சிகா. பின்னணியில் ஹன்சிகாவின் நிழல் துப்பாக்கி ஏந்தியபடியே நிற்கிறார்.

இதுகுறித்து ஜமீல் கூறியதாவது : ‘ ‘மஹா’ படத்தில், ஹன்சிகா, இந்து பெண்மணியாக இருந்து முஸ்லிம் பெண்மணியாக மாறுவது போல காட்சி அமைப்புகள் உள்ளன.

எந்த மதத்தையும் இழித்தோ, பழித்தோ செய்வது போல, எதையும் செய்யவில்லை. எல்லா மதங்களும் எனக்கு ஒன்றுதான். கோடை விடுமுறையின் மஹா படம் வெளியாகும்”. எனத் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையில் கமல்-விக்ரம் வைக்கும் மெகா விருந்து

கோடை விடுமுறையில் கமல்-விக்ரம் வைக்கும் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vikramதமிழகத்தில் பரமக்குடி என்ற கிராமத்தில் பிறந்த கமல்ஹாசன் மற்றும் விக்ரம் இருவரும் தமிழ் சினிமாவை பெருமைப்பட வைத்த கலைஞர்களில் மிக முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரும் தற்போது ‘கடாரம் கொண்டான்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமும், கமலின் மகள் அக்ஷராஹாசனும், இணைந்து நடித்து வருகின்றனர்.

நாசரின் மகன் அபி மெய்தி ஹாசன், ‘8 தோட்டாக்கள்’ பட நாயகி மீரா மிதுன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கி வரும் இப்பட சூட்டிங்கை 2019 ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே 2019 கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடும் முடிவில் இருக்கிறார்களாம்.

விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

விஜய்யால் நஷ்டம்; தனுஷ் படத்தை நிறுத்திய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vijayவிஜய் நடித்த மெர்சல் படத்தை தங்களது 100வது படைப்பாக பிரம்மாண்டமாக தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

‘மெர்சல்’ படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும் அது தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்சுக்கு லாபமாக அமையவில்லை என்பதே உண்மை.

எனவே இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

அதுவும் அவர்களுக்கு லாபமாக அமையவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையில் நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்தை தாங்கள் தயாரிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க, இதை சரித்திர காலப் படமாக தனுஷ் இயக்கவிருந்தார்.

செப்டம்பரில் சூட்டிங்கை ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார்.

ஆனால் சில நாட்களாக சூட்டிங் நடக்கவில்லை.

ஏனென்றால் தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக சூட்டிங்கை நிறுத்திவிட்டதாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.

தனுஷின் பட பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் அந்த படத்தை கைவிடும் அளவுக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

More Articles
Follows