குழந்தையாக நடித்து ரஜினிக்கே ஜோடியான மீனாவைப் போல் சூர்யாவுக்கு ஜோடி போட ஆசைப்படும் ஷ்ரியா

குழந்தையாக நடித்து ரஜினிக்கே ஜோடியான மீனாவைப் போல் சூர்யாவுக்கு ஜோடி போட ஆசைப்படும் ஷ்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya shriya sharma40 வருடங்களுக்கு முன்பு ஓரிரு படங்களில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் மீனா.

பின்னர் 20 வருட இடைவெளியில் ரஜினிக்கே ஜோடியாக.. எஜமான், வீரா, முத்து படங்களில் நடித்தார்.

தற்போது அண்ணாத்த படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் மீனா.

தற்போது இதே வரிசையில் சூர்யா & ஷ்ரியா இணையவுள்ளனர்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா – ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தவர் ஷ்ரியா ஷர்மா .

இவர் தற்போது நாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார்.

தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்… சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார் ஷ்ரியா.

Actress Shriya Sharma wants to act with suriya

Shriya-Sharma-hot-pic

தூள் பட டிடிஆர்… கில்லி பட கபடி நடுவர் நினைவிருக்கா..? நடிகர் ரூபன் மரணம்

தூள் பட டிடிஆர்… கில்லி பட கபடி நடுவர் நினைவிருக்கா..? நடிகர் ரூபன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghilli dhool actor rubenஎழுத்தாளராகவும், நடிகராகவும் பொது வாழ்வில் அறிமுகமானவர் ரூபன் ஜே.

இவர் விக்ரம் நடித்த தூள் படத்தில் டிடிஆராகவும், விஜய்நின் கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராகவும் நடித்திருப்பார்.

அண்ணாமலை சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.

இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு திருச்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (21/09/2020) ரூபனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டடு மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Ghilli & Dhool fame actor Ruben Jay passes away due to covid 19

கமலுக்காக ஆட்டம் போடும் சஞ்சீவ் & ஆல்யா மானஷா ஜோடி.; விஷயம் அதுவா?

கமலுக்காக ஆட்டம் போடும் சஞ்சீவ் & ஆல்யா மானஷா ஜோடி.; விஷயம் அதுவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanjeev alya manasaகுளிர் 100 டிகிரி படத்தில் நடித்தவர் சஞ்சீவ்.

ஆனால் அந்த படத்தை விட விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார்.

இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானஷா நடித்திருந்தார்.

எனவே இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார் சஞ்சீவ்.

இந்த நிலையில் இந்த தம்பதிகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில்… கமல் சாருக்காக நாங்கள் இருவரும் இணைந்து பாடலுக்கு ஆட போகிறோம்.. காணத் தவறாதீர்கள்.. காத்திருங்கள்.. என பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்பாக ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுடையே எழுந்துள்ளது.

Sanjeev and alya dance for kamal

கடவுள் முருகனுக்கே ரொமாண்டிக் சாங் போட்ட பாடகர் க்ரிஷ்

கடவுள் முருகனுக்கே ரொமாண்டிக் சாங் போட்ட பாடகர் க்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer krishமுருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில், முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார், பிரபல பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ்.

“வெற்றி வேலா” ஆல்பம் குறித்து பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது…

சமீப காலமாக முருகர் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளார். பல்லாண்டுகளாக முருகர் பாடல்கள் பலவற்றை நாம் கேட்டு வருகிறோம்.

ஆனால் அதில் முருக கடவுள் அதிகமான ஆக்ரோஷம் கொண்டவராக காட்டப்படுவதாக எனக்கு தோன்றியது. முருகு என்றாலே அழகு என்று தான் அர்த்தம்.

முருக கடவுள் எப்போதும் அமைதியும் அழகும் நிறைந்தவர். மனதை சாந்தப்படுத்துபவர். முருகர் பற்றிய பாடல் ஏன் மெல்லிய வடிவில் மனதை சாந்தப்படுத்தக்கூடாது எனத் தோன்றியது.

இசையை கேட்கும் பழக்கமுள்ள அனைவரும் நல்ல மெல்லிய மெலோடி இசையை கேட்ட பிறகே தூங்குவார்கள்.

நம் அனைவருக்குமே இருக்கும் பழக்கம் அது. அந்த வகையில் முருகர் பாடலை கேட்டுவிட்டு தூங்கினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் உருவானது தான் இந்த ஆல்பம்.

கடவுள் முருகனுக்கு ரொமாண்டிக் பாடல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த ஆல்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது முழுக்க ரொமாண்டிக் பாடல் அல்ல மென்மையான மெலோடி வடிவில் முருகனை கொண்டாடுவதே இந்த ஆல்பம்.

முருகனின் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக கொண்டு திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் பழனி, சிவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் அமைந்துள்ளது.

எனது மகள் ஷ்வியா பாடும் ஆசையில் இருந்ததால் பழனி பாடலை அவரை பாட வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் இந்த ஆல்பத்தில் முருகனின் படத்துடனும், அதன் கீழே மற்ற விபரங்களும் இருக்கும்படி அமைக்கப்பெற்றிருக்கும்.

எல்லோரும் விரும்பும்படி, அனைவரும் ரசிக்கும்படி இந்த ஆல்பத்தை அமைத்திருக்கிறேன். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் கடவுள் இல்லாமல் கடவுளை காட்டும் முயற்சியாக வெறும் வேல் மட்டுமே வைத்து வடிவமைத்தோம். இந்த ஆல்பம் எங்களின் மனமார்ந்த முயற்சி.

இந்தியாவின் மிகப்பெரும் இசை நிறுவனமான சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் இந்த ஆல்பத்தினை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் இந்த ஆல்பம் பிடிக்கும், மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – க்ரிஷ்

பாடல்கள் – வெ. மதன் குமார்

1.திருப்பரங்குன்றம்

பாடியவர்கள் : க்ரிஷ் & ப்ரியா மாலி

2.திருச்செந்தூர்

பாடியவர்கள் : ப்ரியா மாலி

3.பழனி

பாடியவர்கள் : க்ரிஷ் & ஷிவியா

4.சுவாமிமலை

பாடியவர்கள் : க்ரிஷ்

5.திருத்தணி

பாடியவர்கள் : க்ரிஷ் & S.சாய் சாதனா

6.பழமுதிர்ச்சோலை

பாடியவர்கள் : க்ரிஷ்

இசை கலைஞர்கள்

ரிதம் – டெரிக்

ப்ளூட் – A.சதீஷ்

வீணை – ஶ்ரீமதி T. வீணா காயத்திரி ராஜ்

நாதஸ்வரம் – பாலா

பின்னணி இசை கருவிகள் – செந்தில் தாஸ், ஷாம் கீர்தன் & வேலு

Singer Krish about his new album

பாலா நெற்றியில் முத்தமிடுவதாக மிஷ்கின் சொன்னது ஏன்..?

பாலா நெற்றியில் முத்தமிடுவதாக மிஷ்கின் சொன்னது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala mysskinகடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம்,

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் டைரக்டர் பாலா தயாரித்திருந்தார்.

2014ல் வெளியான பிசாசு படம் வெற்றி பெற்றது. இதில் ராதாரவி மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு பிசாசு படம் இரண்டாம் பாகம் தயாராகிறது.

முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.

ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், டைரக்டர் பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ பட டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து மிஷ்கின் டுவிட் செய்துள்ளார்.

அதில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா.

‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.

Mysskin thanked director bala for title

நவம்பர் 2ல்… ஷாரூக்கான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அட்லி.; ஏன்.?

நவம்பர் 2ல்… ஷாரூக்கான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அட்லி.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SRK Atleeராஜா ராணி என்ற ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்தார் அட்லி.

இப்படத்தை அடுத்து விஜய்யின் 3 படங்களை இயக்கிவிட்டார் அட்லி.

ஷங்கரின் உதவி இயக்குனராக ‘நண்பன்’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த விஜய்யின் அறிமுகமே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

விரைவில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம்

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் ஷாருக்கான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

SRKs film with Atlee to start in november ?

More Articles
Follows