தொடர் தோல்வி படங்களால் ஷாம்லி கவலை; அஜித் காப்பாற்றுவாரா..?

Actress Shamili and her movie updatesகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஷாம்லி.

இவரின் அக்கா ஷாலினி நடிகர் அஜித்தின் மனைவி என்பது தங்களுக்கு தெரியும்தானே..

குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிய ஷாம்லி தற்போது நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

அண்மையில் நாகசவுரியாவுடன் ஷாம்லி நடித்த அம்மம்மாகரிலு என்ற தெலுங்கு படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இது ஷாம்லிக்கு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளதாம்.

இனி தல அஜித் அவரது படத்தில் கைகொடுத்தால்தான் உண்டு என நலம் விரும்பிகள் கூறி வருகின்றனர்.

தல என்ன செய்வார் என்பதை பார்ப்போம்.

Actress Shamili and her movie updates

Overall Rating : Not available

Latest Post