சேத்தன் சீனுவை நிர்வாணமாக்கி படமெடுக்கும் நடிகை காவேரி கல்யாணி

சேத்தன் சீனுவை நிர்வாணமாக்கி படமெடுக்கும் நடிகை காவேரி கல்யாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் ப்ரீ லுக் மற்றும் காதலர் தின சிறப்பு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ப்ரீ லுக் போஸ்டர், கையில் ரோஜாவோடு மரத்தின் பின்னால் மறைந்தபடி கதாநாயகன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை இன்னமும் ஈர்த்தது.

கதாநாயகனின் காதல் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பதைக் குறிப்பது போல சேத்தன் சீனு ஒரு குளியலறையில் நிர்வாணமாக சோகமாக உட்கார்ந்திருப்பது போன்று அது அமைந்திருந்தது.

இந்த இரண்டு போஸ்டர்களும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் போன்ற பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் நடித்த காவேரி கல்யாணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான K2K புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக கொண்டது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிக விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும், அதைத் தொடர்ந்து வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

சுகாசினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி, ஷக்கலக்க ஷங்கர், விடிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை ஆல்பி ஆன்டனி மற்றும் சக்தி சரவணன் கையாள, அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைக்கிறார். முரளி மற்றும் ஜீத்து இப்படத்திற்கு கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தோற்றத்தில் சேத்தன் சீனு வெளியிட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காவேரி கல்யாணி இயக்கத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை K2K புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

Actress Kaveri Kalyani making her debut as a director in Chethan Cheenu film

விஜய்யின் சகோதரி மகனும் சினிமாவில் நடிக்கிறார்..; இனி ‘ரங்கோலி’ தான்

விஜய்யின் சகோதரி மகனும் சினிமாவில் நடிக்கிறார்..; இனி ‘ரங்கோலி’ தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. .

மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு- மருதநாயகம். மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Gopuram studios K.Babu Reddy and G.Satish Kumar are producing a refreshingly new Tamil, Telugu bilingual film named “Rangoli”.

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏராளமான திறமைசாலிகள் நிறைந்திருக்கும் தமிழ் திரைஉலகில் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும் என நடிகர் சின்னிஜெயந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடைசி பஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘ நிக்குமா நிக்காதா? ‘என்கிற குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த குறும்படத்தில் நடிகர் ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை தமிழரசி நடித்திருக்கிறார் இவர்களுடன் நடிகர் ராம்குமார் பழனி, ‘சிரிக்கோ’ உதயகுமார் கார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்கலையும், லிப் டு லிப் கிஸ்ஸையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த குறும்படத்தை கடைசி பஸ் கார்த்திக் இயக்கியிருக்கிறார்.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும், கதாசிரியரும், வசனகர்த்தாவான லியாகத் அலிகான், இயக்குநர் கஸாலி, தயாரிப்பாளர் கே. ராஜன், பாடலாசிரியர் முருகன் மந்திரம்,
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன்,
நடிகர்கள் சாம்ஸ், ரோஷன் ராஜ் கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சம்பத்ராம் , தேவன், நாயகன் ஆதேஷ் பாலா, நடிகை தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் சாம்ஸ் பேசுகையில்,
” நிக்குமா நிக்காதா’ வில் நடித்திருக்கும் ‘குறும்பட உலக கமல்ஹாசன்’ ஆதேஷ் பாலாவுக்கும், ‘குறும்பட உலக சுருளிராஜன்’ உதயகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். விக்கல் நிக்குமா நிக்காதா? என்பதை மையமாக வைத்து இந்த குறும்படத்தை சுவாரஸ்யமாக உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு காட்சியில் தப்பித்த ஆதேஷ் பாலா, மூன்றாவது காட்சியில் லிப் டு லிப் கிஸ் அடித்திருக்கிறார். குறும்படத்தில் ஒரு துணிகரமான முடிவை எடுத்திருக்கிறார்கள். இதுவே இணையத்தில் வைரலாகி விடும். பேசப்படும் விசயமாகவும் இருக்கிறது. ஏனெனில் இது மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்திருக்கும் நடிகர் ரோஷன் ராஜ் கண்ணா இதை காணப் பொறுக்கமுடியாமல், அவர் பேசும்போது ஆதேஷ் பாலாவிற்கு முத்தம் கொடுத்தார். இந்தப் படத்தைப் பார்வையிட்ட பாடலாசிரியர் முருகன் மந்திரம், இந்த படத்தில் இரண்டு பாடல்களை இந்த இடத்தில் வைக்கலாம் என்று ஐடியா கொடுத்து, தனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் நாயகனுக்கு அண்ணன், தம்பி என ஏதேனும் கதாபாத்திரம் இருந்தால், அதில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போதைய சூழலில் கையில் செல்போன் வைத்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான கன்டென்ட்டை யோசித்து அசத்தி வருகிறார்கள். அதனால் இந்தக் குறும்படம் திரைப்படமாக உருவாகும் போது நிறைய மெனக்கெட வேண்டும். அப்போதுதான் ஏராளமானவர்களின் மனதைக் கவர இயலும். இதை இந்த படக்குழுவினர் சாதிப்பார்கள் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் சின்னிஜெயந்த் பேசுகையில்,

” என்னுடைய நண்பர்களுக்காக இவ் விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்திய திரையுலக சரித்திரத்தில் ஒரே ஒரு நடிகரின் மகன் தான் ஐஏஎஸ் ஆகியிருக்கிறார். அதுவும் என் மகன்தான் என டெல்லியிலிருந்து சிலர் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்த போது, உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன். தந்தையாக அல்ல. தமிழ் நடிகர் ஒருவரின் வாரிசு என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் சிவகுமார் என்னிடம் சினிமாக்காரர்களுக்குப் படிக்கவும் தெரியும் என்பதை உனது மகன் நிரூபித்து விட்டான் எனப் பாராட்டினார். அவனை பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி 2’ படத்தில் நடிகராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் நடிப்பதில் விருப்பமில்லை தொடர்ந்து படிக்கிறேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.

நிக்குமா நிக்காதா? படத்தின் டைட்டில் கவர்ச்சியாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும் நன்றாக இருக்கிறது. இன்று முதல் இந்த படத்தினை நான் என்னுடைய நண்பர்களிடம் விளம்பரப்படுத்த தொடங்கி விடுவேன். இதனை முழுநீளத் திரைப்படமாக உருவாக்கினால், இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வெற்றி பெறலாம்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஏராளமானவர்கள் இயக்கம், இசை, நடிப்பு, கேமரா, தொழில்நுட்பம் என பல துறைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் யாரும் ஃபிலிம் மார்க்கெட்டிங் என்ற துறையில் அடியெடுத்து வைப்பதில்லை. எம்பிஏ பட்டதாரிகளெல்லாம் ஃபிலிம் மீடியேட்டராக மாற வேண்டும். இவர்களெல்லாம் விநியோகஸ்தராகவும் பணியாற்ற வேண்டும். இளைய தலைமுறை திரைத்துறையில் திரைப்படத்தை சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் இந்தத் துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சாதாரண இளைஞர்கள் கூட கையில் லேப்டாப்புடன் தங்களது மார்க்கெட்டிங் பணியினை நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். எம் பி ஏ படித்த பட்டதாரிகள் ஃபிலிம் மார்க்கெட்டிங் துறையில் ஈடுபட்டால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறார்கள். ” என்றார்.‌

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில்,

” திரையுலகில் என்னை நடிகராக அறிமுகம் செய்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதும், இயக்குநர் கே. பாக்யராஜ் அவருடைய ‘கதையின் கதை’ என்ற தொடரில் நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இயக்குநர் தியாகராஜன்,’ மம்பட்டியான்’ படத்தில் நல்லதொரு வேடத்தை வழங்கி என்னுடைய வளர்ச்சிக்கு வித்திட்டார். என்னுடைய தந்தையின் அறிமுகத்தை வைத்து பாக்யராஜ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானேன். அதன்பிறகு எனக்கு திரைத்துறையில் போலீஸ் மற்றும் அடியாள் வேடத்தில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இத்தகைய வேடங்கள் கிடைத்து வந்ததால், மாற்றத்திற்காக என்னை நானே நாயகனாக நடிக்க விரும்பி அதற்கான தேடலில் ஈடுபட்டேன். என்னுடைய அம்மாவின் கனவும் இதுதான். அதனால் அதனைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இயக்குநர் கார்த்திக் என்னுடைய ஏழாண்டு கால நண்பர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு என்னை சந்தித்து நிக்குமா நிக்காதா? கதையைச் சொன்னார். ஆனால் இந்தக் கதையில் இடம்பெறும் முத்தக் காட்சியில் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போதும் தயக்கம் இருந்தது. இயக்குநர் முத்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து இதனை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்றதும் என்னுள் உதறல் எடுத்தது. பயமும் ஏற்பட்டது. ஆனால் இயக்குநர் எனக்கு நம்பிக்கை அளித்தார். இதற்காக இயக்குநருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த ‘சிரிக்கோ’ உதயகுமாருருக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்ரி உண்டானது. நான் திரைத்துறையில் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.” என்றார்.

நடிகை தமிழரசி பேசுகையில்,

” இயக்குநர் கார்த்திக் என்னை சந்தித்து கதையை விவரித்தபோது முத்தக்காட்சியைப் பற்றி குறிப்பிட்டார். முதலில் நடிக்கத் தயங்கினேன். பிறகு கதைக்கு அவசியம் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர், நடிகர் ஆதேஷ் பாலா மற்றும் படக்குழுவினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த காட்சிகள் இயல்பாக நடித்தேன்.” என்றார்.

இயக்குநர் கார்த்திக் பேசுகையில்,

” நடிகர் ஆதேஷ் பாலா என்னுடைய நண்பர். அவருக்கு ஒரு நாள் போன் செய்து, நிக்குமா நிக்காதா? கதையை சொல்லி, நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றேன். வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கு விக்கல் நிற்கவில்லை. அவர் விக்கலை நிற்க வேண்டுமானால் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட வேண்டும் என்று விவரித்தபோது, அவர் முதலில் தயங்கினார். பிறகு அவர் தனது அம்மாவுடன் விவாதித்து நடிக்க ஒப்புக் கொண்டார். கிளைமாக்ஸில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரது தோற்றத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முழு மனதுடன் ஒப்புக் கொண்டார். 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த குறும்பட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தியதற்கு தமிழ் சினிமா கம்பெனி நிறுவனத்திலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்,

” நிக்குமா நிக்காதா? என்ற தலைப்பு நன்றாக இருக்கிறது குறும்படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டபோது விக்கலைப் பற்றியது என்றார். நம்முடைய பெரியோர்கள் விக்கலை நிறுத்துவதற்கு, ஆச்சரியமான விசயத்தை சொல்வார்கள். அதைக் கேட்டவுடன் விக்கல் நின்றுவிடும். ஆனால் இயக்குநர் கடைசி பஸ் கார்த்திக் விக்கலை நிறுத்துவதற்கு வித்தியாசமான மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார். முத்தம் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த குறும்படத்திற்கு என்னை நாயகனாக நடிக்க வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நிதி உதவியும் செய்திருப்பேன். குறும்படமாக இருந்தாலும் வித்தியாசமான சிந்தனையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நிக்குமா? நிக்காதா? அமைதியாக இருந்த நாட்டில் திடீர் திடீரென்று மதக்கலவரங்கள் உருவாகிறதே. இது நிக்குமா நிக்காதா? அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் லஞ்சம் லாவண்யம் நிக்குமா? நிக்காதா.? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகளிடம் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணம் மற்றும் அது தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படாமால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே. இந்த அக்கிரமம் நிக்குமா நிக்காதா?

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள், மதிய வேளையில் நெய்வேலியிருந்து வலுக்கட்டாயமாக சென்னைக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். அந்தப் பயணத்தின் போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிகர் விஜய் மத்திய அரசை விமர்சித்தோ. ஜிஎஸ்டி குறித்தோ இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்கள் நிக்குமா நிக்காதா? கட்சியில் ரவுடிகளை சேர்த்துக் கொள்கிறீர்கள். இதனால் அராஜகம் உருவாகுமே. இந்தப் போக்கு நிக்குமா நிக்காதா? 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே.. இது நிக்குமா நிக்காதா? பால்ய வயது சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நிக்குமா நிக்காதா?

இதுபோன்ற நியாயமான கேள்விகளை எழுப்புவதால் இந்த படத்தின் தலைப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தால், அதில் கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு 20 முதல் 25 சதவீதம் தான் சம்பளம் தருவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 50 முதல் 60% சம்பளமாக தரவேண்டிய நிலை இருக்கிறது. எனவே குறும்படமான இந்தப் படத்தை திரைப்படமாக உருவாக்கும்போது முறையான திட்டமிடலுடன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் இன்று சினிமா பிசினஸ் என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒவ்வொரு படக்குழுவினரின் சாமர்த்தியத்தால் தான் வெற்றி பெற வேண்டியதிருக்கிறது. இந்த குறும்படத்தில் நடித்திருக்கும் மறைந்த நடிகர் சிவராமனின் வாரிசு ஆதேஷ்பாலாவும், மற்றொரு நகைச்சுவை நடிகர் சந்திரன் பாபுவின் மகனான உதயகுமாரும் திரையுலகில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் நிக்குமா நிக்காதா? குறும்படத்தை தயாரிப்பாளர் கே ராஜன் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

Actor Aadhesh Bala speech at NIKKUMA NIKKATHA SHORT FILM

கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்!

கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலுக்குக் கிடைத்த பெருமைகள் நடிகா் ஸ்ரீராமுக்கும் கிடைத்து வருகின்றன!

குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றது , சிறுவயதிலேயே தேசிய விருது வாங்கியது, மலையாளத்தில் முதல் படத்திலேயே நேரடி கதாநாயகன் ஆனது இப்படிப்பட்ட பெருமைகள் உலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கையில்தான் வாய்த்துள்ளன. அவரது பரம ரசிகனான ஒரு நடிகருக்கும் அதே பெருமை வந்துள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள்.

அந்த நடிகர் தான் ஸ்ரீராம். இவரும் ‘பசங்க ‘படத்தின் மூலம் 2009-ல் தேசிய விருதை வென்றார்.

அண்மையில் ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘நவரசா’ படத்தில் இடம்பெறும் ‘ரௌத்திரம் ‘ நாயகனாக முத்திரை பதித்தார்.அந்த ஸ்ரீராம் மலையாளத்தில் இப்போது நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு இப்படி மலையாளத்தில் நேரடி கதாநாயகனாக அறிமுகமானவர் கமல்ஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அபிமான நட்சத்திரத்தின் அடிச்சுவட்டில் பயணம் செய்வதில் பெருமைப்படுகிறார் ஸ்ரீராம்.

ப்ளூம் இண்டர்நேஷனல்

(Bloom International) என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட் ‘( EXIT) எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் மலையாளத்தில் தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஜனவரி 15 ஆம்தேதி தைப்பொங்கல் முதல் கேரளாவின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும் பாலக்காட்டிலும் தொடர்ந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படபிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே ஸ்ரீ ராமின் தனது கதாபாத்திரத்துக்கான மெனக்கெடலைக் கண்டு வியந்த தயாரிப்பாளர் , மற்றும் இயக்குநர் , ‘எக்ஸிட்’ திரைப்படத்தை… ஒரே நேரத்தில் மலையாளம் மட்டுமல்லாது, தமிழிலும் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர். திட்டமிட்ட 45நாள் படப்பிடிப்பில் தற்போது 25 நாட்கள் முடிந்த நிலையில் மீதம் உள்ள நாட்களையும் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க முடிவு செய்து இடைவிடாது தொடர்ந்து படபிடிப்பு நடந்து வருகிறது.

வளர்ந்து வரும் தமிழ் நடிகர் ஒருவருக்கு வெளிப்புறப் படபிடிப்புத் தளத்தில் கேரள மாநிலத்தின் மக்கள் கொடுக்கும் வரவேற்பைக் கண்டு அந்தப் படத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.

ஸ்ரீராமின் தந்தை சிவ.ராமகிருஷ்ணா மலையாளத் திரைப்பட உலகில் மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக மோகன்லால் மீனா நடிப்பில் வர்ணப்பகிட்டு, குஷ்பு, சுரேஷ்கோபி நடிப்பில் அனுபூதி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் வெளிவந்த “பாபநாசம்” திரைப்படத்தில் கமலின் உதவியாளராக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படித் தந்தையின் மலையாளப் பரிச்சயத்தால்
ஸ்ரீராமினால் சரளமாக மலையாளம் பேச முடிகிறது.

“நவரசா”வில் … நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “ரௌத்திரம்” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீ ராமை வைத்து தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் “Zee 5″ற்காக புதிய வெப்சீரிஸ் ஒன்றைத் தனது வழக்கமான பாணியில் பெரிய அரங்குகள் அமைத்து பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கியுள்ளார்.

‘டான்சிங் டீன்ஸ்'(Dancing Teen’s)எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வெப்சீரிஸ் நடிகர் ஸ்ரீ ராமிற்கு மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப்சீரிஸில் “லட்சுமி” படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தியா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெப் சீரிஸில் மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி ஸ்ரீராமின் முன் புதிய புதிய வாய்ப்பு வாசல்களைத் திறந்து கொண்டே இருக்கின்றன.

இந்த 2022 அவருக்குப் புதிய வெளிச்சத்தைத் தேடித் தரும் என்று நம்புகிறார்.

Actor Sri Ram follows Kamal Haasan’s way

உலகளவில் ஹிட்டான ‘மாடர்ன் லவ்’ தொடரின் இந்தியத் தழுவல்

உலகளவில் ஹிட்டான ‘மாடர்ன் லவ்’ தொடரின் இந்தியத் தழுவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாடர்ன் லவ்: மும்பை (இந்தி), மாடர்ன் லவ்: சென்னை (தமிழ்) மற்றும் மாடர்ன் லவ்: ஹைதராபாத் (தெலுங்கு) ஆகியவற்றுடன் காதல் அனைவரின் இல்லங்களிலும் அடி எடுத்து வைக்கிறது, இது பிரபல நியூயார்க் டைம்ஸ் கட்டுரைகள் மற்றும் சர்வதேசத் தொடர்களின் அடிப்படையிலான மாடர்ன் லவ்வின் உள்ளூர்மயமாக்கப்பட்ட இந்தியப் பதிப்பாகும்.

2022-இல் 240+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடர் காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் பல்வேறு கதைகளைக் கொண்டிருக்கும்.

மும்பை, இந்தியா, பிப்ரவரி-14, 2022— சர்வதேச ஹிட் தொடரான ‘மாடர்ன் லவ்’-இன் இந்தியத் தழுவல் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் Amazon Prime Video இந்த ஆண்டு உங்கள் இல்லங்களை அன்பால் நிரப்பத் திட்டமிட்டுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவுள்ள இத் தொடருக்கு ‘மாடர்ன் லவ்: மும்பை’, ‘மாடர்ன் லவ்: சென்னை’ மற்றும் ‘மாடர்ன் லவ்: ஹைதராபாத்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல பத்திரிகையில் வந்த கட்டுரைகளைத் தழுவி உருவாகியுள்ள இத் தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் காதல், ஈர்ப்பு, சுய பக்தி, குடும்ப பாசம், நண்பர்கள் மீதான அன்பு வரை பல மனித உணர்வுகளைக் கதைகள் மூலம் வெளிப்படுத்தும் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்பட உள்ளது.

Amazon Studios, லோக்கல் ஒரிஜினல்ஸ் துறைதலைவர் ஜேம்ஸ் ஃபாரெல் கூறுகையில், “காதலுக்கு எல்லைகள் இல்லை, இது உலகளாவிய மொழி. மாடர்ன் லவ் ஆனது காதலின் பல்வேறு வடிவங்களின் கவிநயம் சார்ந்த வெளிப்பாடாகும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் எங்கள் அமெரிக்க நிகழ்ச்சியின் கதைகளுடன் தங்களைத் தொடர்புபடுத்தி ரசிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம், இந்தத் தொடருக்கு இயல்பாகவே கைகொடுக்கிறது. இந்தியத் தழுவல்களும் அதேபோன்று எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு நல்லுறவை தொடும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்கிறார்.

Amazon Prime Video இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறுகையில், “இந்தியா அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டுக்குப் பெயர் பெற்ற தேசம் – எங்கள் இந்தியத் தழுவல்களுடன் இந்திய மண்ணில் வேரூன்றியிருக்கும் காதல் கதைகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல மொழிகளில் உருவாகும் இந்தத் தொடர், காதலின் பற்பல வடிவங்களை அலசுவதாக இருக்கும். இந்த மனதைக் கவரும் கதைகள் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டாலும், இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு உள்ளன, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்கள் இதற்குச் சரியாகப் பொருந்துகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த நம்பமுடியாத கதைகளைக் கொண்டு வருவதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

தி நியூயார்க் டைம்ஸில் மாடர்ன் லவ் பத்திரிகையின் ஆசிரியர் டேனியல் ஜோன்ஸ் கூறுகையில்: “காதல் இந்திய கலாச்சாரக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளது. எங்களின் இக்காதல் கதைகள் இந்திய மண்ணுக்கு ஏற்ப தழுவி எடுக்கப்பட்டுள்ளதை அறிவது உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. மாடர்ன் லவ் தொடர் உலகளவில் பெற்ற பாராட்டுக்களால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இந்திய தழுவல்கள் உலகளாவிய காதல் உணர்வுகளை இந்நாட்டுக்கு வெளிப்படுத்தும் ஒரு காதல் வெளிப்பாடாக அமையும்.” என்றார்.

Amazon Prime Video Announces Local Indian Adaptations of International Hit Series Modern Love

உள்ளுர் அழகி வேண்டாம்..; சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் அழகி

உள்ளுர் அழகி வேண்டாம்..; சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் அழகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது முதன்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

அவரின் 20வது படமாக உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது.

தமன் இசையமைத்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா என்பவர் நடிக்கிறாராம்.

இந்தியாவிற்கு டூர் வரும் ஓர் அழகான பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் ரொமான்ஸ்தான் இப்படத்தின் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

Ukraine model to romance Sivakarthikeyan for her next

More Articles
Follows