கந்துவட்டி சிக்கலில் சிவகார்த்திகேயன் பட நாயகி? போலீஸில் புகார்

Actress Anandhi files a complaint about Kanthuvattiசின்னத்திரை நடிகை ஆனந்தி. இவர் கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரின் உதவியுடன் கந்துவட்டிக் கும்பல் என் தாயாரின் வீட்டை எழுதி வாங்கிவிட்டதாகவும் தன் சகோதரனைக் கொலை செய்துவிட்டதாகவும் சென்னைக் காவல்துறை ஆணையரிடம் சின்னத்திரை நடிகை ஆனந்தி புகார் அளித்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில் இவர் கூறியுள்ளதாவது…

சின்னத்திரையில் துணை நடிகையாக வேலை பார்க்கும் நான், என் தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக உறவினரான சித்தி ரங்கநாயகி, அவர் மகன் தினேஷ் என்ற தேசய்யா ஆகியோரிடம் 2014-ம் ஆண்டு 5 லட்சம் மூன்று தவணையாக 2 சதவிகிதம் மற்றும் 3 சதவிகிதம் என வாங்கினேன்.

இவற்றில் வட்டியாக ரூ. 1,80,000 செலுத்தியுள்ளேன். மீதித் தொகைக்கு அசல் மற்றும் வட்டிக்கு என் அம்மாவின் வீட்டை ராணிப்பேட்டை காவல் நிலையம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

பிறகு என்னையும் என் கணவரையும் மிரட்டி ராணிப்பேட்டை ஐ.ஓ.பி வங்கியின் மூன்று காசோலையில் கையெழுத்து வாங்கிச் சென்றுவிட்டனர். பின்னர் அந்தக் காசோலையில் 30 லட்சம் எனத் தனித்தனியாக எழுதிக்கொண்டனர்.

பின்னர், வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டதாகவும் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

ஆனால் தற்போது அந்த பணத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு ரூ. 30 லட்சத்தை அடைக்க வேண்டும் என சித்தி தன்னை வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடியாட்களை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்.

ஆனால் இது திருவண்ணாமலையில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கமிஷ்னர் புகாரை ஏற்க மறுப்பதாகவும், இவரை அலைக்கழிப்பதாகவும் மீடியாவில் தெரிவித்திருக்கிறார்.

Actress Anandhi files a complaint about Kanthuvatti

Overall Rating : Not available

Latest Post