எவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salemசென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலையானது தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த அமைகிறது.

தற்போது கூட சென்னையிலிருந்து சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும்.

இதனால் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது பயண நேரம் சுமார் 7 மணி நேரம் ஆகிறது.

புதிய பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும்.
கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நிறைய பேர் வாட்ஸ் அப்பில் கண்டிருக்கலாம்.

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salem

Overall Rating : Not available

Latest Post