தளபதி 60 அப்டேட்ஸ்… மூன்று முகம் காட்டும் விஜய்..!

தளபதி 60 அப்டேட்ஸ்… மூன்று முகம் காட்டும் விஜய்..!

actor vijayபரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்காலிமாக தளபதி 60 என பெயரிடப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக விஜய், தன் உடல் எடையை பத்து கிலோ குறைத்து நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஒரே வேடம் என்றாலும் மூன்று விதமான கெட்டப்புகளில் விஜய் தோன்றுவார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பாளருடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்..!

தனுஷ் தயாரிப்பாளருடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்..!

gv prakash stillsவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்தவர் கதிரேசன்.

இவர் தற்போது தயாரிக்கவுள்ள படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதற்கான பூஜை நேற்று போடப்பட்டது.

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஆர்ஜே அஜய், ஆர்ஜே பிளேடு சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.

படத்தின் நாயகி மற்றும் மற்ற கலைஞர்களின் தேர்வு முடிவானவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

மலர்’ கேரக்டரில் தாவணி கட்டி அசத்த வரும் ஜனனி ஐயர்..!

மலர்’ கேரக்டரில் தாவணி கட்டி அசத்த வரும் ஜனனி ஐயர்..!

janani iyerஅவன் இவன் மற்றும் தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி ஐயர்.

தற்போது விஜய்சேதுபதியுடன் ‘உல்டா’, கலையரசனுடன் ஒரு படம், டார்லிங் 2′ படப்புகழ் ரமேஷ் ராஜாவுடன் ஒரு படம் என கைவசம் படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின் ஜோடியாக ‘தொல்லைக்காட்சி’ படத்தில் நடித்து வருகிறார் இவர்.

இப்படத்தில் இவரது கேரக்டர் பெயர் மலர்.

இதில் பாவாடை தாவணி கட்டிய பக்கா தமிழ்ப்பெண்ணாக நடித்து வருகிறாராம் ஜனனி.

பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர் கேரக்டர் போல் இந்த மலரும் மனங்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசிகருக்கு இரங்கல் தெரிவித்து உருகிய சூர்யா..!

ரசிகருக்கு இரங்கல் தெரிவித்து உருகிய சூர்யா..!

actor suriyaதமிழகத்தை தாண்டியும் சூர்யாவுக்கு ஆந்திராவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் சினிமாவை தாண்டியும் இவர் தன் அகரம் பவுண்டேஷன் மூலமாக நற்பணிகளை செய்து வருகிறார்.

எனவே இவருக்கு சினிமாவை தாண்டியும் மக்கள் செல்வாக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில், சூர்யா ரசிகரான சபரீசன் என்பவர் சென்னையில் நடந்த ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இதனையறிந்த சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் ரசிகருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனுடன் இணைந்த கயல் சந்திரன்!

பார்த்திபனுடன் இணைந்த கயல் சந்திரன்!

parthiban and kayal chandranகயல் படத்தின் நாயகி ஆனந்தி போன்றே இளம் ரசிகைகளை கவர்ந்தவர் கயல் சந்திரன்.

இவர் தற்போது நடிகர் பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதில் ஐடி துறையில் பணிபுரியும் இளைஞராக நடிக்கிறாராம் சந்திரன்.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து இதிலும் பார்த்திபன் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் சுதர்சன் இயக்கவிருக்கிறார்.

விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

ஆர்யா – அமீர் கூட்டணியில் சந்தன தேவன்..!

ஆர்யா – அமீர் கூட்டணியில் சந்தன தேவன்..!

arya and ameerஇயக்குனர் அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார் என்ற செய்திகள் வெகுநாட்களுக்கு முன்பே பேசப்பட்டது.

தற்போது இச்செய்தி சற்று வேகம் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் வேளையில் இப்படத்திற்கு தற்போது சந்தன தேவன் என தலைப்பிட்டுள்ளனர்.

ஏம்.ஆர். ராதா நடித்த ஒரு படம் இதே பெயரில் பல வருடங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows