டீகே-வைபவ் இணையும் காட்டேரி பூஜையுடன் தொடக்கம்

டீகே-வைபவ் இணையும் காட்டேரி பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

katteri movie poojaசூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’.

இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத்.

இவர் ‘யாமிருக்க பயமே’ என்றபடத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். கலை இயக்குநராக செந்தில் பணியாற்றுகிறார்.

காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகவிருக்கும் இப்படத்தின் தொடக்கவிழா இன்று ஸ்டீடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.

இதன் போது, இயக்குநர்கள் கே வி ஆனந்த், புஷ்கர் காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், ரவிமரியா, நடிகர்கள் ஜீவா, வைபவ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன், தயாரிப்பாளர்கள் சி வி குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன் ஆகியோர்களுடன் நாக் ஸ்டூடியோஸ் கல்யாண், வி ஜே ரம்யா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கவைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யா மோதலை தவிர்த்து ஜெயம்ரவியுடன் மோதும் விஷால்

சூர்யா மோதலை தவிர்த்து ஜெயம்ரவியுடன் மோதும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and jayam raviசூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதே நாளில் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படமும் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தின் வெளியீட்டை 2018 ஜனவரி 26க்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதே நாளில்தான், ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் என்ற படமும் வெளியாகவுள்ளது.

ஆனவே விஷாலுக்கும் ஜெயம்ரவிக்கும் குடியரசு தினத்தில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக சூர்யாவுக்காக தானா சேர்ந்த (பெண்கள்) கூட்டம்

முதன்முறையாக சூர்யாவுக்காக தானா சேர்ந்த (பெண்கள்) கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TSK posterஒரு நடிகருக்கு ஆண்களும் பெண்களும் ரசிகர்களாக உள்ளனர்.

தங்கள் அபிமான நடிகரின் படங்கள் வெளியாகும் சமயத்தில் ஆண் ரசிகர்கள் மட்டுமே படங்களை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

மேலும் முதல் காட்சி ரசிகர்களின் சிறப்பு காட்சியாக இருக்கும்.

இந்நிலையில் முதன்முறையாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ரிலீஸ் அன்று பெண்களுக்கு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயம் வருவார் காத்திருங்கள்… ரஜினி அரசியல் பற்றி சத்தியநாராயணராவ்

நிச்சயம் வருவார் காத்திருங்கள்… ரஜினி அரசியல் பற்றி சத்தியநாராயணராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth with his brotherநேற்று 12.12.2017 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

காலையில் கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்ற ரஜினிகாந்த், மாலையில் போயஸ் கார்டன் திரும்பினார். நேற்றைய தினம் ரசிகர்கள் அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சத்திய நாராயணராவ் கூறியதாவது..

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரே அறிவிப்பார். அதற்கு இது சரியான சமயம் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அஜித்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யை நெருங்கும் சூர்யா

அஜித்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யை நெருங்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith suriyaதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர்.

எனவே இவர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் இவர்களது படங்களுக்கு அதிக ஒப்பீடு இருக்கும்.

மேலும் யுடிப் டீசர் மற்றும் டிரைலர் சாதனைகளை ஆகியவற்றையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் ‘விவேகம்’ பட டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

‘விவேகம்’ டீசர் 606,903 லைக்ஸ் பெற்று இருந்தது. இதை ‘தானா சேர்ந்த கூட்டம்‘ டீசர் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

முதல் இடத்தில் இருப்பவர் விஜய்தான். இவரது ‘மெர்சல்’ டீசர் 1 மில்லியன் லைக்ஸுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பிறந்தநாள் அன்று இரவு நேரத்தில் கமல் வாழ்த்தியது ஏன்..?

ரஜினி பிறந்தநாள் அன்று இரவு நேரத்தில் கமல் வாழ்த்தியது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and kamal haasanநடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் நேற்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா, தலைவா அரசியலுக்கு வா, என்றே பல வார்த்தைகள், டிசைன்கள் காணப்பட்டன.

இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் நேற்று இரவு 9 மணிக்கு மேல் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

” Kamal Haasan‏Verified account @ikamalhaasan

சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்” என்று பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows