ஸ்கூல் டாய்லெட்டுகளை புதுப்பித்து பராமரிக்க சூர்யா திட்டம்

Actor Surya helps to develop and maintain Tamilnadu School Toiletsஅகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார் நடிகர் சூர்யா.

மேலும் இந்த அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கல்விக்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்துக்கு 10 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புதுப்பிக்க முடிவு செய்திருக்கிறாராம் சூர்யா.

கழிப்பறைகளை புதுப்பிப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

இதற்காக சூர்யாவின் ரசிகர் மன்றங்கள் 40 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 40 மாவட்ட ரசிகர் மன்றங்களுக்கும் தலா 10 அரசுப்பள்ளிகள் குறிப்பாக பெண்கள் பள்ளிகளாக பார்த்து ஒதுக்கப்பட்டுள்ளன.

அவர்கள் இந்த பணியை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Actor Surya helps to develop and maintain Tamilnadu School Toilets

Overall Rating : Not available

Latest Post