தன்னை சந்திக்க விரும்பிய தினேஷின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

தன்னை சந்திக்க விரும்பிய தினேஷின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaநடிகர் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய அளவில் உள்ளனர்.

திரையுலகைத் தாண்டியும் இவர் சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருவதால், இவரின் மீதான நன்மதிப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சூர்யாவை பார்க்க வேண்டும் என ஒரு சிறுவன் ஆசைப்பட்டுள்ளான்.

அந்த சிறுவனம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

சிறுவனின் ஆசையை அறிந்த சூர்யா அவனை தன் வீட்டிற்கு அழைத்து அவனிடம் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

சிறுவனுக்காக சிவகுமார் தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

அப்போது சூர்யாவுடன் அவரது தம்பி நடிகர் கார்த்திய்யும் இருந்துள்ளார்.

மேலும் அந்த சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் தான் ஏற்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்

மீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and yuvan shankar rajaவிஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை மித்ரன் இயக்கியிருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெறவே மித்ரனின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்வி நெடு நாட்களாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அதிரடி அறிவிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 15வது படத்தை மித்ரன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்படத்தை சீமராஜா படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.

தற்போது இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டங்கை செய்யவுள்ளார்.

படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார்.

2013ல் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருந்தார். அதுபோல் இரும்புத்திரை படத்திற்கும் யுவனே இசை.

தற்போது 2வது முறையாக சிவா மற்றும் மித்ரனுடன் யுவன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஅடுத்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? என இந்திய தேசமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்த செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம்.

வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவில்லை; பெரிய அளவில் வீச்சு இருக்க வேண்டும் என கருதுகிறோம். ” என்றார்.

*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா

*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arvind Swamy and Regina Cassandra teams up for Rajapandis Kallapartவிக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.

என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ , தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வசனம் – ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா
இசை – நிவாஸ் கே.பிரசன்னா
கலை – மாயபாண்டி
எடிட்டிங் – இளையராஜா
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்
தயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.
திரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.

Arvind Swamy and Regina Cassandra teams up for Rajapandis Kallapart

குற்றவாளிகளை உருவாக்கும் அதிகாரம்; *துப்பாக்கி முனை* பற்றி டைரக்டர்

குற்றவாளிகளை உருவாக்கும் அதிகாரம்; *துப்பாக்கி முனை* பற்றி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Dinesh Selvaraj talks about Vikram Prabhu starring Thuppakki Munai60 வயது மாநிறம்” படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”.

இந்தத் திரைப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார்.

கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், “துப்பாக்கி முனை” படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.

“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன்.

முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது.

தேச தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது எனக் கொண்டார் ஸ்பெஷலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..? பெற்றது என்ன..? என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.

மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபாத்திரத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்தியாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்கதாக ராமேஸ்வரம், தனுஷ் கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.

இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்.

“துப்பாக்கி முனை”யின் முக்கிய கதாபாத்திரங்களில் வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரசமாதி’யும் இசையை மாபெரும் இசை மேதை எல்.வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்துகணேஷ்’ம், படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

“கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..

இந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவரும் இந்த திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

Director Dinesh Selvaraj talks about Vikram Prabhu starring Thuppakki Munai

 

Exclusive உறியடி2 படத்தில் சூர்யா; விஜயகுமார் நடித்து இயக்குகிறார்!

Exclusive உறியடி2 படத்தில் சூர்யா; விஜயகுமார் நடித்து இயக்குகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya will produce Uriyadi 2 and it will be directed by Vijayakumarகடந்த 2016ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் உறியடி.

இப்படத்தை தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார் விஜயகுமார்.

தன் முதல் படத்திலேயே அனைத்தையும் செய்து இவரே இப்படத்தின் பின்னணி இசையையும் மேற்கொண்டு இருந்தார்.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த முறை இப்படத்தை தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த விஷ்மயா என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

சுதாகர் என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

தென்காசியில் இதன் சூட்டிங்கை நாளை தொடங்குகின்றனர்.

Suriya will produce Uriyadi 2 and it will be directed by Vijayakumar

More Articles
Follows