குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaதூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது.

இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது.

பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு முன்னிறுக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

மஹாராஷ்டிரா நிராகரித்த ஆலை

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக்கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலப் போராட்டம்.

மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

“ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ்டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது.

மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

குப்பைத்தொட்டியா தமிழகம்?

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது.

தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன.

நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியின் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிற ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ’நியூட்ரினோ திட்டம்’ என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படையில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள்.

தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக்கூடைக்குள் தூக்கி எறிவதைப்போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டங்களை “பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை” என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம்.

உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?

மக்களுக்கு மதிப்பளியுங்கள்

ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது.

ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம்.

‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!”

என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சூர்யா.

சாமி ஸ்கொயர் படத்திற்காக காத்திருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் ரசிகர்கள்

சாமி ஸ்கொயர் படத்திற்காக காத்திருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vikramஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

இவரது இசை ப்ரியர்கள் இவரை டிஎஸ்பி என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.

இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்துள்ளார்.

சீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul and Naniநாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும்“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்..

இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது கதை.

இதில் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகனை பரவசப் படுத்தும் .

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

பாடல்கள் – கானாபாலா, கவிதா தண்டபாணி

எடிட்டிங் – எஸ்.என்.பாசில்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் பி.சமுத்திரக்கனி

தமிழ்நாடே எரியுது; டைரக்டர் ஷங்கர் செய்த காரியத்தை பார்த்தீர்களா?

தமிழ்நாடே எரியுது; டைரக்டர் ஷங்கர் செய்த காரியத்தை பார்த்தீர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director shankarதூத்துக்குடியில் நடைபெற்று வரும் கலவரத்தால் தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது.

போலீசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அப்பாவி மக்கள் 10 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

ரஜினி, கமல் முதல் பல்வேறு தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் படங்களில் மிகப்பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லும் டைரக்டர் ஷங்கர் அவர்கள் இன்று நடைபெற்ற ஐபிஎல் மேட்ச் & சிஎஸ்கே அணி பற்றி புகழ்ந்துள்ளார்.

இதற்கு பெரும்பாலோனோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஊருக்கு மட்டும் சினிமாவில் உபதேசம் பண்ற லட்சணம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்ததால் சில மணி நேரங்களுக்கு பிறகு ஷங்கர் அந்த பதிவை நீக்கி விட்டார்.

அதன்பின்னர் கலவரத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் தல-தளபதியின் ராசி ஹீரோயின்

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் தல-தளபதியின் ராசி ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simran likely to teams up with Rajini for Karthik Subbaraj movieரஜினியின் நடிப்பில் காலா மற்றும் 2.0 படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க, ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்று பல யூகங்கள் தோன்றின. அதாவது அஞ்சலி, திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால் காலா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது லிங்கா படத்தில் ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என ரஜினிகாந்த் பேசினார்.

எனவே இனி அதுபோன்ற சின்ன வயது பெண்களுடன் ரஜினி நடிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் சிம்ரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலிலி நடித்திருக்க வேண்டியவர் சிம்ரன்தான்.

அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.

தற்போது சிம்ரன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்ரன் புகழின் உச்சத்தில் இருந்த போது, விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு ராசியான நாயகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran likely to teams up with Rajini for Karthik Subbaraj movie

மனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்

மனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannanin leelai single from Vanjagar Ulagam goes viralஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்’.

காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

படத்தில் இருந்து `கண்ணனின் லீலை’ என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannanin leelai single from Vanjagar Ulagam goes viral

More Articles
Follows