தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் ஆகிய முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளவர் சிவ நாராயணமூர்த்தி.
இவர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் நிறைய படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
66 வயதான இவர் தன் உடல் அமைப்பு மற்றும் முக பாவணைகளால் போலீஸ், கிராமத்து பண்ணையார் உள்ளிட்ட வேடங்களில் நடித்து வந்தவர்.
இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று 07.12.2022 இரவு 8.30 மணியளவில் காலமானார்.
இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்கு சென்று தன் குடும்பம் உறவினர் மற்றும் நண்பர்களுடன் வசிப்பது வழக்கம். அதன்படி சொந்த ஊர் சென்றவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரின் வாழ்க்கை குறிப்பு…
இயக்குநர் விசுவால் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
விஜய்காந்த் நடித்த ‘பூந்தோட்டம்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் சிவ நாராயணமூர்த்தி.
இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.
இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் டிசமரபர் 8ம் தேதி மதியம் 12 மணி மேல் நடைபெறும்.