சொத்துக்களை மக்களுக்கு எழுதிவச்சிட்டு அரசியலுங்க வாங்க ரஜினி… – சிங்கமுத்து

சொத்துக்களை மக்களுக்கு எழுதிவச்சிட்டு அரசியலுங்க வாங்க ரஜினி… – சிங்கமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and singamuthuபோர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை முறைமுகமாக தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர் ஸ்டைலில் சொன்னால் பத்த வச்சிட்டியே பரட்டை என்பதுபோல அவரின் பேச்சு இன்றுவரை அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காமெடி நடிகர் சிங்கமுத்து அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருப்பதாவது..

“இளமையாக இருக்கும்போது நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இப்போது வயதாகி விட்டது. இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை.

இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்.

மக்களுக்காக அவர் இதுவரை என்ன செலவு செய்துள்ளார்?

ரஜினி நடிக்கலாம்; சம்பாதிக்கலாம்; ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படக்கூடாது.

தனது சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்” என சிங்கமுத்து கூறியுள்ளார்.

ஆர்ட் டைரக்டர் ஜிகே (எ) கோபிகிருஷ்ணா காலமானார்

ஆர்ட் டைரக்டர் ஜிகே (எ) கோபிகிருஷ்ணா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

art director GKபிரபல திரைப்பட கலை இயக்குனர் GK என்கிற கோபிகிருஷ்ணா இன்று காலமானார்.

இருதய பிரச்சனை காரணமாக கடந்த 14.9.2017 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் செப். 21ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு காலமானார்.

அண்ணாருக்கு வயது 60
மனைவி நாகேஸ்வரி.
ஒரு மகன் கிருஷ்ணா.
ஒரு மகள் ஹேமச்சந்திரா,
ஆகியோருடன் வசித்துவந்தார்

முகவரி:-
எண் 16, அன்பு நகர் பிரதானசாலை குப்பம்
வளசரவாக்கம்
சென்னை 87.

100 நொடிகள்; 3 விஜய்; ஒரே பன்ச்… மெர்சல் டீசர் அப்டேட்ஸ்

100 நொடிகள்; 3 விஜய்; ஒரே பன்ச்… மெர்சல் டீசர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalஇன்று மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் வெளியாகிறது.

எனவே இதனை வரவேற்க காலை முதலே சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் டீசர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இது ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதால் டீசர் 100 நொடிகள் ஓடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் 3 விஜய் கேரக்டர்கள் இருக்கும்.

மேலும் ஒரே ஒரு பன்ச் டயலாக் இடம் பெறும் எனவும் தெரிய வந்துள்ளது

வேலைக்காரன் உடன் மோதும் வேட்டை நாய்

வேலைக்காரன் உடன் மோதும் வேட்டை நாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velaikkaran and vettai naaiமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் இன்னும் மற்ற படங்களும் இந்த நாளில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள வேட்டை நாய் படம் அன்றைய தினத்தில் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

ஜெய்சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சுபிக்ஷா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி, ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்க, இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

விஜய் ரசிகர்களுக்கு இன்று மெர்சல் ட்ரீட்; நாளை டபுள் ட்ரீட்

விஜய் ரசிகர்களுக்கு இன்று மெர்சல் ட்ரீட்; நாளை டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் டீசர் வெளியாகிறது.

இதனை கொண்டாட பல நாட்களாகவே விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்றைய கொண்டாட்டத்தை தொடர்ந்து நாளையும் விஜய் ரசிகர்கள்ளுக்கு இரண்டு விருந்துகள் காத்திருக்கிறது.

விஜய் ரசிகர்களை மையப்படுத்தி 3 ரசிகர்கள் (தமிழ்) மற்றும் போக்கிரி சைமன் (மலையாளம்) ஆகிய இரண்டு படங்கள் நாளை ரிலீஸ் ஆகிறது.

விஜய்க்கு தமிழகத்திலும் கேரளாவிலும் நல்ல மவுசு உள்ளதால் இந்த இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DKET9FkV4AErp9x

DKLS1i_U8AAMruW

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு; ஆம் ஆத்மியில் இணையும் கமல்?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு; ஆம் ஆத்மியில் இணையும் கமல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kama lhaasan arvind kejriwalநடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார்.

எனவே அண்மைகாலமாக அரசியலில் இறங்க தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இடையே அரசியல் கற்க கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வந்தேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு நடைபெறவுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் கமலை ஆம் ஆத்மி கட்சியில் இணைய முதல்வர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.

More Articles
Follows