தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிங்காங்.
இவர ரஜினிகாந்த், ஷோபனா நடித்த சிவா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கிங்காங் போடும் குட்டி டான்ஸ் பலரையும் கவர்ந்திருந்தது.
இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் வடிவேலுடன் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். அந்த காம்போவில் நடித்த காமெடி காட்சிகள் ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து நேற்று முன் தினம் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.
கடந்த 2009ல் தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது வரை அவரிடம் வாழ்த்து பெற முடியவில்லை என பதிவு செய்திருந்தார்.
ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியை அதிகமாக பகிரவே இது ரஜினிகாந்துக்கு தெரிய வந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் கிங்காங்கை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களைச் சந்தித்திருப்பேன்; ஆனால் இந்தத் தகவல் எனக்கு தெரியவில்லை மன்னித்துவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துகள். நிச்சயமாக ஒரு நாள் நாம் சந்திக்கலாம். உங்களை அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் கிங் காங்கிற்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Rajinikanth fulfills the wish of comedian king kong