தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ், உபாசனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த ‘லோக்கல் சரக்கு’ என்ற படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 12 சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகி உபாசனா பேசுகையில்…
“இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இது காமெடி ஜானர் படம் என்று சொன்னதோடு, காமெடி ஜானர் படத்தில் எப்படி மெசஜ் சொல்ல முடியும் என்று கேட்டார்கள். ஆனால், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காமெடி படமாக இருந்தாலும் அதில் நல்ல மெசஜை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். பொதுவாக படங்களில் ஹீரோவுக்கு தான் பலமான வேடம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பலம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புக்கொண்ட தினேஷ் மாஸ்டருக்கு நன்றி. நாங்க எல்லோரும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை பண்ணியிருக்கோம். அதனால், நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் சார், ராஜேஷ் சாருக்கு நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பேசுகையில்…
“இங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தெரியும், ‘லோக்கல் சரக்கு’ படம் தொடர்பாக இதுவரை பத்து விழாக்கள் நடந்திருக்கும். ஆனால், இன்று நடக்கும் விழா மிகவும் முக்கியமானது. இது வெளியீட்டுக்கான விழா. படத்தை பார்த்துவிட்டு ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லி வினோத் சார் படத்தை வாங்கி விட்டார். எனவே, படம் விரைவில் வெளியாக உள்ளது.
வினோத் சார் மிகவும் நேர்மையானவர், அவர் படத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு செய்த ஒவ்வொரு விஷயமும் நேர்மையாக இருந்தது. அவருக்கும், என் குடும்பத்தினருக்கும் நன்றி. ஏன் இந்த படம் வெளியாக காலதாமதம் ஆனது என்று யோசிப்பீர்கள். ஆனால், படத்தை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள், அந்த அளவுக்கு படம் வந்திருக்கு. படத்தில் நடித்த தினேஷ் மாஸ்டர், யோகி பாபு, உபாசனா ஆகியோருக்கு நன்றி.
வினோத் சார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார், அதுபோல் படத்தில் நடித்த நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது இந்த படத்திற்கு மட்டும் அல்ல, இதுபோன்ற சிறிய படங்கள் அனைத்துக்கும் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் அது படத்திற்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். என் அடுத்த படமான ‘கடைசி தோட்டா’ படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. படம் முடியும் தருவாயில் உள்ளது, அந்த படம் குறித்த நிகழ்ச்சிகளும் விரைவில் நடைபெறும்.
இந்த படம் மட்டும் அல்ல, என்னுடைய இசை ஆல்பங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் என்னுடன் உறுதுணையாக பயணிக்கும் மக்கள் தொடர்பாளர் கிளாமர் சத்யா சாருக்கும் நன்றி. அவரால் எது முடியும், எது முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறார்.
ஆனால், நிகழ்ச்சிக்கு வந்து பார்த்தால், முடியாது என்று சொன்ன விசயங்களை கூட செய்துவிடுவார், அவருக்கு என் குடும்பம் சார்பாக நன்றி. வனிதா அக்காவுக்கும் நன்றி. எங்கள் படம் ’கடைசி தோட்டா’-வின் முக்கியப்புள்ளி அவங்க தான். வரலாற்று சரித்திர கதை கொண்ட பிரமாண்டமான தெலுங்குப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்காங்க. அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுகிறது.
ஆனால், எங்கள் படத்திற்காக அங்கு செல்லாமல் இங்கு வந்திருக்கிறார். எங்கள் படத்தை முடித்துக்கொடுத்து விட்டு தான் செல்வதாக சொன்னார், அவருக்கு மிகப்பெரிய நன்றி.” என்றார்.
We can give message even in comedy movie says Uppadana