மீண்டும் அஜித்துக்கு வில்லனாக பவர்புல் ஹீரோ..!

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக பவர்புல் ஹீரோ..!

actor ajith kumarசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் நடைபெறவுள்ளது.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, கருணாகரன், தம்பி ராமையா நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகை ஸ்னேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காகதான் சில நாட்களுக்கு முன்பு பிரசன்னாவின் சிக்ஸ்பேக் போட்டோக்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்திலும் ஹீரோவாக இருந்த அருண்விஜய் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்பத்திரியில் கமல் அனுமதி.. தள்ளிப்போகும் சபாஷ் நாயுடு..!

ஆஸ்பத்திரியில் கமல் அனுமதி.. தள்ளிப்போகும் சபாஷ் நாயுடு..!

kamalhaasan stillsநடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி வரும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து விழுந்துள்ளார்.

அப்போது அவருக்கு முதுகு தண்டுவடத்திலும் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என்றும் அவருக்கு சில வாரங்கள் ஓய்வு தேவை எனவும் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்ததையொட்டி லண்டனில் நடைபெறுகிற இந்திய திரைப்படவிழாவில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவந்துள்ளது.

அங்கு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் நாயுடு படத்தின் 42 நிமிட காட்சிகள் தயாராகி இருக்கிறது.

விரைவில் ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

“படைப்பாளிகள் மக்களை குறை சொல்லக் கூடாது” – சமுத்திரக்கனி

“படைப்பாளிகள் மக்களை குறை சொல்லக் கூடாது” – சமுத்திரக்கனி

actor samuthirakaniசமுத்திரக்கனி தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் அப்பா.

இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சமுத்திரக்கனி கூறியதாவது…

“நல்ல படங்களுக்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருக்கும். அதற்கு அப்பாவின் வெற்றியே சாட்சி.

நல்ல படங்களை கொடுக்காமல் மக்களை படைப்பாளிகள் குறை சொல்லக் கூடாது.” என்றார்

திரையுலகையே மிரள வைக்கும் கபாலி ரிலீஸ்…!

திரையுலகையே மிரள வைக்கும் கபாலி ரிலீஸ்…!

kabali movie stillsகபாலி படத்திற்கு சென்சார் கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு.

அந்த நொடி முதல், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் மீடியாவை ஆக்ரமித்து வருகின்றன.

ஒவ்வொரு மொழியிலும் எத்தனை அரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

உலகம் முழுவதும் சுமார் 10,000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதுவரை தமிழ் மொழியே தெரியாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

இதனால் கபாலி ரிலீஸை திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

கபாலி கன்பார்ம் ஆச்சு…. தனுஷ் படத்தின் ரிலீசும் உறுதியானது.?

கபாலி கன்பார்ம் ஆச்சு…. தனுஷ் படத்தின் ரிலீசும் உறுதியானது.?

actor dhanushகபாலி படத்திற்கு முன், கபாலி படத்திற்கு பின் என படங்களின் ரிலீசை பிரித்து விடலாம்.

அப்படி ஒரு எதிர்பார்ப்பின் உச்சமாக சுனாமி அலையை எழுப்பியது கபாலி.

கபாலி படம் ஜீலை இறுதிக்கு தள்ளிப்போகவே, இம்மாத முதல் பாதியில் மட்டும் பத்து படங்கள் வெளியாகிவிட்டன.

தற்போது கபாலி ஜீலை 22ஆம் தேதி ரிலீஸ் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ஆந்திராவில் அதிக விலைக்கு போன சூர்யாவின் சிங்கம் 3

ஆந்திராவில் அதிக விலைக்கு போன சூர்யாவின் சிங்கம் 3

s3 movie stillsதமிழகத்தை போன்றே ஆந்திராவிலும் சூர்யாவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

எனவே ஆந்திராவிலும் இவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது விசாகபட்டினத்தில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இதன் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

More Articles
Follows