உதவியாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுத்த பிரகாஷ்ராஜ்.; ஏன் தெரியுமா.?

Actor Prakash Raj kindness towards his employeesகொரானா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் என்பதால் அனைத்து நடிகர்களுக்குமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் தன் உதவியாளர்கள் பலருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது..

“நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை இப்போதே கொடுத்துவிட்டேன்.

என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. ” என கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் இந்த செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Actor Prakash Raj kindness towards his employees

Overall Rating : Not available

Latest Post