ஆசிரியர் – ஆன்மீகம் போர்வைகளில் அத்துமீறல்கள்.; இறைவன்-பக்தர்கள் இடையில் இடைத்தரகர் ஏன்.? – MS பாஸ்கர் வேதனை

ஆசிரியர் – ஆன்மீகம் போர்வைகளில் அத்துமீறல்கள்.; இறைவன்-பக்தர்கள் இடையில் இடைத்தரகர் ஏன்.? – MS பாஸ்கர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ms bhaskarகடந்த சில தினங்களாக கொரோனா செய்திகளை விட பாலியல் வன்கொடுமை செய்திகளே நம்மை ஆக்ரமித்துள்ளன.

பிரபல பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைப் போல பிரபல சாமியாரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனருமான சிவசங்கர் பாபாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி சர்ச்சைக்குள்ளான யூடியூபர் மதனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

வணக்கம் . நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

என்ன நடக்கிறது! ஒன்றுமே புரியவில்லை!

‘ஆசிரியர்’ என்ற போர்வையிலும், ‘ஆன்மீகம்’ என்ற போர்வையிலும் அத்துமீறல்கள்.

ஏற்கனவே ‘கரோனா’ பெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா?

பள்ளிக்கூடம்….

சென்றுதான் ஆக வேண்டும். குழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும். தொற்றின் தீவிரத்தால் ‘ஆன்லைன்’ வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு. கைது செய்யப்பட்ட ஆசிரியர் “பல ஆண்டுகளாக இது நடக்கிறது… நான் மட்டும் இல்லை… இன்னும் பலரும் உண்டு”… என்கிறார். ஒரு பள்ளி மட்டுமல்ல. பல பள்ளிகளில் இதே தவறு நடக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம்…

புனிதமான விஷயம். அது எந்த ‘மார்க்கமாயினும்’ (மதம்)சரி..

‘குரு’ என்ற ஒருவர் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் ‘குரு’ என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவரா என்பதை அறிதல் அவசியமன்றோ?

இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு?

‘இவர் மூலமாகத்தான் நீ என் அருளைப் பெற முடியும்’ என்று இறைவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று எதற்காக ஒருவனின் கால்களில் விழ வேண்டும். அவனை கடவுள், தெய்வம், சாமீ என்று ஏன் துதிக்க வேண்டும்!

“நரிக்கு நாட்டாம குடுத்தா… கெடைக்கு ரெண்டு குட்டி கேக்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல்தானே இருக்கிறது இந்த ஈனச்செயல். உண்மையான ஞானியோ, சித்தனோ தன்னை ஒருபோதும் விளம்பரப் படுத்திக்கொள்வதில்லை.

இவர்களுக்கு கூட்டம் கூடுவதும், இந்தக் கோமாளிகள் வேஷம் போட்டு ஆடுவதும், பிறகு சுயரூபம் தெரிந்தவுடன் தப்பித்து ஓடுவதும், ‘முடிந்தால் கண்டுபிடி’ என்று கண்ணாமூச்சி விளையாடுவதும்

ஆன்மீகத்தையே அசிங்கப்படுத்தும் இழிசெயலன்றோ?

இவர்களால் உண்மையான குருமார்களுக்கும்… ஏன் இறைவனுக்குமே பழிச்சொல் வராதா? இறை நம்பிக்கை உடையவர்களை மற்றவர்கள் கிண்டலும் , கேலியும் செய்ய வழி வகுக்காதா?

அரசாங்கத்திற்கு இவர்கள் பின்னாலேயே அலைவதா வேலை? ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமித்து கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? ஏற்கனவே அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.

மாண்புமிகு. பிரதமர் அவர்களும், மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துத்துறை சார்ந்தவர்களும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தத் ‘தலைவலி’வேறு!

ஆக…..

கல்வியையும், ஆன்மீகத்தையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளிகளை கழிவுகளாக எண்ணி, சிந்தை தெளிந்து மக்களாக விலகிவருவதே நாட்டுக்கும் நல்லது. நம்பிக்கைக்கும் நல்லது.

– வேதனையுடன் எம்.எஸ். பாஸ்கர்.

Actor MS Bhaskar talks against on sexual harrasment

பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வியா.? 50 பைசா செலவில் எதிர்ப்பு தெரிவியுங்கள்.. – தங்கர் பச்சான்

பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வியா.? 50 பைசா செலவில் எதிர்ப்பு தெரிவியுங்கள்.. – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thangar bachanமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான்.

அவரது அறிக்கையில்…

“கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும், பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக அனுபவித்தார்கள்.

இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கல்விகூட முழுமையான தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத்தரப்படும் தரமற்ற கல்வியாகவே உள்ளது.

இந்நிலையில் உயர் கல்விக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நீட் (NEET) எனும் தகுதித்தேர்வை உருவாக்குகிறோம் என இந்திய ஒன்றிய அரசு உருவாக்கியது.

பணவசதி படைத்தவர்கள் மட்டும் பணம் கொடுத்து உயர்கல்வியை விலைபேசி உயர்பதவிகளை அடைந்து விடுகின்றார்கள் எனும் காரணம் கூறித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தினார்கள்.

ஆனால் இதன்மூலம் உயர்கல்வியை இழந்து வருபவர்கள் முதல் தலைமுறைக் கல்வியை இன்னும் கடக்காத வறுமை கோட்டிற்குக்கீழே வாழும் கிராமம் மற்றும் ஏழை மாணவர்கள்தான்.

கல்வி என்பது நம்நாட்டில் ஒரு பெரும் வணிகமாகிப் போன நிலையில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே பாதுகாப்பு தமிழ்நாடு அரசு மட்டும்தான்.

இவ்வாண்டு முதல் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசு பதிலளிக்காத நிலையில் தமிழக அரசு நீதியரசர் A.K.Rajan அவர்களின் தலைமையில் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது.

பொது மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என தமிழகத்திலுள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறோம் எனும் காரணங்களை உடனடியாக எழுதி பின் வரும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (EMAIL) அனுப்ப வேண்டுகிறேன்.

ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதியரசர் பானுமதி அவர்கள் 15 பைசா அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் வழக்கு ஒன்றில் நீதி வழங்கினார் எனும் செய்தியை இந்நேரம் நம் மாணவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி. இங்கே அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான நீதி கிடைக்க வேண்டும். இத்தனைக் காலங்கள் எங்களுக்கு கல்வியைத் தராமல் அதுவும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என தரம் பிரித்து வழங்குகிறீர்கள்.

அனைவருக்கும் சமமான தரமான ஒரே கல்வியை வழங்காமல் எவ்வாறு எங்களுக்குத் தகுதித் தேர்வை நடத்துவீர்கள். முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை எங்களுக்கு வழங்குங்கள்.

அதன்பின் தகுதித் தேர்வை (NEET) நடத்துங்கள். அதுவரை நீட் தேர்வு நடத்துவது எங்களுக்கு இழைக்கும் அநீதி” என அனைத்து மாணவர்களும் உடனே 50 பைசா அஞ்சல் அட்டை வாங்கி எழுதி அனுப்புங்கள். எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். நமக்கான நீதி கிடைக்க உடனே செயல் படுங்கள்.

கடிதம் அனுப்ப கடைசித்தேதி: 23.06.2021

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

நீதியரசர் மாண்புமிகு A.K.ராஜன் குழு
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
(மூன்றாம் தளம்)
கீழ்ப்பாக்கம்,
சென்னை- 600010

மின்னஞ்சல் (EMAIL ID): [email protected]

Film director Thangar Bachan on Neet issue

பாண்டிச்சேரியை பரிதாபசேரியாக்கும் பாஜக..; ஆபிஸ் உடைப்பு.. அமைச்சர் பதவி கேட்டு ஜான்குமார் ஆதரவாளர்கள் மறியல்

பாண்டிச்சேரியை பரிதாபசேரியாக்கும் பாஜக..; ஆபிஸ் உடைப்பு.. அமைச்சர் பதவி கேட்டு ஜான்குமார் ஆதரவாளர்கள் மறியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி கவிழ்த்தவர் ஜான்குமார் எம்எல்ஏ.

அதன் பின்னர் ஏற்கெனவே பேரம் பேசி வைத்தபடி பாஜகவில் இணைந்தார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுப்படி புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்றார் ரங்கசாமி.

சட்டமன்றத் தேர்தலில் காமராஜ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜான்குமார்.

இவரது மகன் ரிச்சர்ட் நெல்லித்தோப்பு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

எனவே ஒரே குடும்பத்தில் 2 சட்டமன்றத் உறுப்பினர்கள் தேர்வானதால் நிச்சயம் ஒரு அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்ற ஆசையில் தந்தையும் மகனும் இருந்தனர்.

ஆனால் என்ஆர்காங் – பாஜக தரப்பில் இதற்கான உடன்பாடு எட்டப்படவில்லை.

பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் பதவிதான் என்பதில் என்ஆர் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அதனடிப்படையில் சபாநாயகர் பதவியை பாஜக எம்எல்ஏ செல்வம் பெற்றார்.

இந்த நிலையில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. அமைச்சர் பதவி வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததால் அவரது ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

இதனால் புதுச்சேரி பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

பாஜக அலுவலக பேனரை கிழித்தனர். அலுவலகத்தை சூரையாடினர் ஜான்குமார் ஆதரவாளர்கள். மேலும் சாலை மறியலும் செய்தனர்.

இதனிடையில் அமைச்சர் பதவி கேட்டு சிபாரிசு செய்ய சொல்லி டெல்லி சென்றுள்ளார் ஜான்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரியின் தற்போதைய நிலையை பார்த்தால் பரிதாபசேரியாகத்தான் தெரிகிறது.

Pondy BJP MLA John Kumar’s supporters stage protests

bjp mla john kumar

மாணவர்கள் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வு.. கல்வி மாநில உரிமை..; மீண்டும் சூடான சூர்யா

மாணவர்கள் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வு.. கல்வி மாநில உரிமை..; மீண்டும் சூடான சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஓரிரு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டார் நடிகர் சூர்யா.

அப்போதே அது சர்ச்சையானது. தற்போது மீண்டும் சூடான ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதன் விவரம் வருமாறு..:

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் ‘நீட் தேர்வின்’ பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க உதவி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர்.

தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.

‘நீட் நுழைவுத்தேர்வு’ வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது.

அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு, ‘நீட் தேர்வின்’ பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, ‘நீட் தேர்வின்’ பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், [email protected] எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தர தீர்வு. ‘கல்வி மாநில உரிமை’ என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அகரம் அறக்கட்டளை சார்பில் சூர்யா தெரிவித்துள்ளார்.

Neet exam affects the future of many poor people – Suriya On Twitter

FILMISTREET செய்தி எதிரொலி.: ஜீ தமிழ் சேனலில் சிம்புவின் Survivor ஷோ..; தனித்தீவில் தங்கி ஜெயிப்பது யார்.?

FILMISTREET செய்தி எதிரொலி.: ஜீ தமிழ் சேனலில் சிம்புவின் Survivor ஷோ..; தனித்தீவில் தங்கி ஜெயிப்பது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூன் 16ல் ‘சர்வைவர்’ என்ற பிரபலமான சர்வதேச ரியாலிட்டி தமிழ் பதிப்பு நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல்களை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் அது தற்போது உறுதியாகி வருகிறது.

அதன் விவரம் வருமாறு…

*சர்வைவர் – Survivor*

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கு.

ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது “சர்வைவர்”(Survivor).

இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் இதை அறிமுகப்படுத்துகிறது.

இதில் என்ன ஸ்பெஷல் என கேட்குறவங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தனி தீவில் எந்த ஒரு செட் இல்லாமல் இருப்பதால் போட்டியாளர்களின் செயல்கள் நம்பகத்தன்மையுடன் இதில் இருக்கும், நாம் இதுவரை கண்டிருந்த பிக் பாஸ் போன்ற செட்டில் நடக்கும் ரியாலிட்டி ஷோவிற்கு நடுவே இது உண்மையிலே கண்ணுக்கு விருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை.

15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் தங்கி, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

போட்டியாளர்களுக்கு எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்பட மாட்டாது. அதே நேரம் நிகழ்ச்சியில் சவால்கள் நிறைய உண்டு.

சவால்களை எதிர்கொண்டு, எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் ஒருவரே டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவிருக்கிறார்.

ஜீ தமிழ் இந்த நிகழ்ச்சி மிகவும் பிராமாண்டமாய் நடத்தவிருக்கிறது, இதற்கென போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை சேனல் சார்பில் துவங்கிவிட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு மனித உணர்வுகளை தொடுவதாக இருக்கும் என்று நம்பபடுகிறது.

இதற்கெனவே இந்த பிரமாண்டமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் ஆங்கர் யார், என்ற எதிர்பார்ப்பும் துவங்கியுள்ளது ? இப்போதைக்கு மூன்று பேர் ரேஸில் இருக்கிறார்கள்- சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்.

இவர்களில் சிம்பு முந்தியுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

Reality show Survivor to be launched in Tamil soon

IMG-20210619-WA0034 (1)

போலீஸ் எல்லாம் ச்சும்மா ப்ரோ.; ஆபாச பேச்சு கீர்த்திகாவை தொடர்ந்து யூடியூபர் மதனும் கைது

போலீஸ் எல்லாம் ச்சும்மா ப்ரோ.; ஆபாச பேச்சு கீர்த்திகாவை தொடர்ந்து யூடியூபர் மதனும் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமான முறையில் விளையாடியவர் மதன்.

இவரது பெயரிலேயே யூ-டியூப்மும் நடத்தி வந்துள்ளார். அதில் 8 லட்சம் பேர் பாலோயர்களாக உள்ளனர்.

பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசுவது இவரது பாணி. இவர் உடனே பெண் குரலும் ஆபாசபாக பேசும். அது இவரது மனைவி கீர்த்திகாவின் குரல்.

இவர்களின் யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது.

காதுகளே கூசும் அளவுக்கு அறுவறுக்கத் தக்க வகையில் இவர்களது பேச்சுக்கள் இருக்கும்.

இவர்களின் ஆபாச பேச்சு வலையில் விழும் வசதியான பிள்ளைகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். அவர்களும் இவர்களிடம் தொடர்ந்து பணம் கொடுத்து விளையாடி வந்துள்ளனர்.

இதன்பின் மதனின் மேல் சில புகார்கள் குவியத் தொடங்கியது.

சென்னை சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உயிரையே பறிக்கும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் எனவும் புகார்கள் குவிந்தன.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் கிரைம் பிரிவு போலீசார்.

எனவே விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

கடந்த 14ஆம் தேதி சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்ற போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கினர்.

மேலும் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று அவரது மனைவி கீர்த்திகாவை பிடித்தனர்.

கீர்த்திகாவை கைது செய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மதன் தலைமறைவாக உள்ளார்.

கீர்த்திகாவிடம் நடத்திய விசாரணையில் 2 பி.எம்.டபில்யூ கார்கள், ஆடி கார் ஆகியவை உள்ளன.

இவையில்லாமல் பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் என உல்லாசத்துடன் இருந்துள்ளனர். இத்துடன் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

மதனுடன் ஆன்லைன் கேம் விளையாடும் போது..”மற்றவர்களிடம் போலீசெல்லாம் நமக்கு ச்சும்மா ப்ரோ.. ஒன்றும் பண்ண முடியாது.” என ஓவர் கெத்தாக பேசுவாராம் மதன்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீசிடம் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என காலில் விழுந்து அழுது கெஞ்சியதாகவும், அவன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மதனுக்கு உதவிய நண்பர்கள் & அவனது தோழிகளை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Madan a PUBG player turned YouTuber was arrested.

#PUBG #pubgmadan #pubgmadhan #YouTube #YouTuber #Madan #toxicmadan

More Articles
Follows