பாலாஜி உருவாக்கிய ‘பானிபூரி’யில் எனக்கான கேரக்டர்.. – லிங்கா

பாலாஜி உருவாக்கிய ‘பானிபூரி’யில் எனக்கான கேரக்டர்.. – லிங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் லிங்கா, சாம்பிகா, குமரவேல், வினோத் சாகர், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த சந்திப்பில் நடிகை சாம்பிகா பேசியதாவது…

“ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட், ஷார்ட்ஃபிலிக்ஸ் மற்றும் பாலாஜி வேணுகோபால் சாருக்கு முதலில் எனது நன்றி. இது போன்ற கதாபாத்திரத்தை எனக்கு நம்பி கொடுத்துள்ளார். எனது சக நடிகர்களுக்கும் நன்றி. எங்களுக்குப் பிடித்தது போலவே உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

நடிகர் லிங்கா பேசியதாவது…

“’பானிபூரி’யில் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. என்னுடன் நடித்த சக நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், வாங்க முன்வந்த ஷார்ட்ஃபிலிக்ஸ் இவர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவால்தான் நாங்களும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Actor Linga speech at Paani Poori press meet

மிர்ச்சியில் தொடங்கி ‘பானி பூரி’ வரை தொடரும் நட்பு… – வினோத் சாகர்

மிர்ச்சியில் தொடங்கி ‘பானி பூரி’ வரை தொடரும் நட்பு… – வினோத் சாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் லிங்கா, சாம்பிகா, குமரவேல், வினோத் சாகர், கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் நவநீத் சுந்தர் பேசியதாவது…

“நடிகர்கள் வினோத், குமரவேல், சாம்பிகா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இசையமைக்கவும் மிகவும் ஆர்வமான ஒரு கதையாக இருந்தது.

பாலாஜியும் நானும் நண்பர்கள் என்பதால் வேலை செய்வது ஒரு பாசிட்டிவான சூழலாக அமைந்தது. அதுவே உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இதற்கு முன்பு படங்கள் இசை அமைத்திருந்தாலும் வெப் சீரிஸ் ஆக எனக்கு முதல் கதை இதுதான். பாலாஜியின் வரிகளில் டைட்டில் பாடல் நான் பாடியிருப்பேன்.

இந்த எபிசோடுகளில் சில டியூன்கள் உங்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம். அது நான் ஐபேடில் உருவாக்கி இசையமைத்தது தான்'” என்றார்.

நடிகர் வினோத் சாகர் பேசியதாவது…

”பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது. ‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி”.

நடிகர் கோபால் பேசியதாவது…

“பாலாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பு மிகப் பெரியது. எந்த ஒரு காதல் கதையை எடுத்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பார்ப்பது கடினம். அதற்குள் இந்த கதையை வெற்றிகரமாக அவர் செய்துள்ளார். அதனால், என்னை விட அவருக்குதான் இது முக்கியமான நாள். கதையில் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருக்கும்” என்றார்.

Actor Vinoth Sagar speech at Paani Poori press meet

20 வருட வெற்றிப் பாதையில் ஜெயம் ரவி.; கைவசம் அசத்தலான 6 படங்கள்.!

20 வருட வெற்றிப் பாதையில் ஜெயம் ரவி.; கைவசம் அசத்தலான 6 படங்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக 2-3 தெலுங்கு படங்களில் நடித்தவர் ரவி.

2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ரவி.

இப்படத்தை ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெறவே ‘ஜெயம்’ என்ற அடைமொழியை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

அன்று முதல் இன்று வரை அந்த பெயருக்கு ஏற்ப ஜெயம் என்ற வெற்றியுடன் வலம் வருகிறார் ரவி.

தற்போது 2023ஆம் ஆண்டு வரை 20 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவி இதுவரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் காதல் நாயகனாகவும் ஆக்சன் நாயகனாகவும் பாசக்கார இளைஞனாகவும் சமூக போராளியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதில் எம் குமரன், பேராண்மை, தனி ஒருவன், நிமிர்ந்து நில், பொன்னியின் செல்வன், மிருதன், போகன், மழை, வனமகன், தீபாவளி, கோமாளி ஆகிய படங்கள் ஜெயம் ரவியின் நடிப்புக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்தன.

இவரது படங்கள் இந்த வயதினருக்கு மட்டும் தான் என்றில்லாமல் அனைத்து தரப்பு வயதினரும் ரவியின் படத்தை பார்க்கும் வகையில் கதைகளை தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு 2023 ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது்

ஆனால் தற்போது அவரது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அதில் ‘இறைவன்’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

மேலும் ஜன கன மன என்ற படத்திலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

இத்துடன் ‘தனி ஒருவன் 2’ மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சினிமாவில் 20 வருடங்களில் நிறைவு செய்துள்ள ஜெயம் ரவியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் ரவி நடித்து அனைத்து மாநில மக்களையும் கவர்வார் என எதிர்பார்க்கலாம்.

Jayam Ravi completed 20 years of Cinema journey

தமிழ் சினிமாவுக்கு புதிய மேக்கிங்கை காட்ட நினைத்தோம்… – விமலா ராமன்

தமிழ் சினிமாவுக்கு புதிய மேக்கிங்கை காட்ட நினைத்தோம்… – விமலா ராமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகை விமலா ராமன் பேசியதாவது…

“இயக்குநர் தருணுடைய கனவை அனைவரும் நிறைவேற்றியுள்ளதற்கு வாழ்த்துகள்! லாக்டவுண் சமயத்தில் தருணுடைய இந்த ஷார்ட்ஃபிலிம் பார்த்தபோதே எனக்கு பிடித்திருந்தது.

ஒரு இயக்குநருக்கு என்ன தகுதி வேண்டுமோ அவை அனைத்தும் தருணுக்கு இருந்தது. இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

வசந்த், சரஸ், முரளி, உதய் என நாங்கள் அனைவரும் குடும்பமாக வேலை பார்த்தோம். விஜய் சித்தார்த்தின் இசை எனக்கு பிடித்திருந்தது. சரியான இசையைக் கொடுத்துள்ளார்.

லண்டனில் நாங்கள் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினோம். யாருமே முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தனர். தமிழ் சினிமாவுக்கு வேறு விதமான மேக்கிங்கை காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குமே இருந்தது.

இதை சாத்தியமாக்கிய பாபி சார், சக்தி சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறோம்”. என்றார்.

Asvins will show you different movie making says Vimala Raman

இந்த ஜானரில் படங்கள் நடிப்பேன் என நினைக்கவில்லை.. – சரஸ்வதி மேனன்

இந்த ஜானரில் படங்கள் நடிப்பேன் என நினைக்கவில்லை.. – சரஸ்வதி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகை சரஸ்வதி மேனன் பேசும்போது…

“இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் தருணுக்கு நன்றி. ஹாரர் படங்கள் கூட பார்க்காத நான் அதுபோன்ற ஜானரில் படங்கள் நடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

தயாரிப்பாளர் பாபி சார், நடிகர்கள் வசந்த் ரவி, விமலா ராமன் அனைவருக்கும் நன்றி. முரளி, விஜய் சித்தார்த் என நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இங்கு வந்துள்ளோம்.

படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. கொரோனா சமயத்தில் படம் வெளியாகுமா எனத் தெரியாமல் நம்பிக்கையோடு அனைவரும் வேலை பார்த்தோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”. என்றார்.

I never expected that i will do movie in this journal says saraswathi

நான் பிரம்மித்து பார்க்கிற ஒருவர் சக்தி.. ‘அஸ்வின்ஸ்’ என் படமல்ல – வசந்த் ரவி

நான் பிரம்மித்து பார்க்கிற ஒருவர் சக்தி.. ‘அஸ்வின்ஸ்’ என் படமல்ல – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அஸ்வின்ஸ்’.

இப்படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது…

“இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

அப்படி தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம்தான் ‘அஸ்வின்ஸ்’. ஹாரர் செய்ய வேண்டாம் என்று இருந்த என்னை இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று தோன்ற வைத்தது.

’தரமணி’, ‘ராக்கி’ படங்களுக்கு தந்த ஆதரவு போலவே, இந்தப் படத்தையும் நீங்கள் உங்கள் படமாக எடுத்துப் போய் மக்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவேன். ஏனெனில் படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது.

இப்படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், ‘ஏ’ கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் நெகட்டிவிட்டி குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என அவர்களுக்கான மெசேஜ்தான் இது.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பாபி சாருக்கும் இது முக்கியமான படம். நிறைய தயாரிப்பாளர்கள் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்.

விமலாராமன், சரஸ்வதி, முரளி என அனைவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய்தான். அவருக்கு நன்றி. இந்த சினிமாத் துறையில் நான் பிரம்மித்து போய் பார்க்கிற ஒருவர் என்றால் அது சக்திவேலன் சார்தான்.

இவருடைய பேனரில் போனால் எல்லாப் படங்களும் ஹிட். சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற சின்ன படங்கள் எல்லாவற்றையும் ஹிட்டாக்குவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வரிசையில், ‘அஸ்வின்ஸ்’ படமும் அவர் பிடித்து வெளியிட்டுள்ளார். ’அஸ்வின்ஸ்’ என் படம் கிடையாது, உங்கள் படம்”. என்றார்.

Asvins is not my movie says Vasanth Ravi

More Articles
Follows