20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர வனத்துறை.; உண்மையை சொல்லும் RED SANDAL WOOD

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர வனத்துறை.; உண்மையை சொல்லும் RED SANDAL WOOD

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “RED SANDALWOOD.

இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடிக்கு நாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா, விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

RED SANDAL WOOD

இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி
கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – குரு ராமானுஜம்.

RED SANDAL WOOD

படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் பகிர்ந்தவை….

இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
புனையப்பட்டது.

படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார்..

அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார் . அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி.

RED SANDAL WOOD

அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் .

கடத்தல் காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள் ? என்கவுண்டர் செய்ய சொன்னது யார் ? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி . இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும்
என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.

RED SANDAL WOOD

படபிடிப்பு ரேணிகுண்டா , தலக்கோணம், தேன்கணி கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது.

படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் K.ரவி வெளியிடுகிறார்.

RED SANDAL WOOD

Vettri Starrer Red sandalwood movie based on True incident

ஒரே சூப்பர் ஸ்டார்தான்.; நிலாவில் ‘லியோ’ விழா.; ‘ஜெயிலர்’ ஓடி இருக்காது.; ரஜினி காலில் விழுந்ததை கண்டித்த மன்சூர் அலிகான்

ஒரே சூப்பர் ஸ்டார்தான்.; நிலாவில் ‘லியோ’ விழா.; ‘ஜெயிலர்’ ஓடி இருக்காது.; ரஜினி காலில் விழுந்ததை கண்டித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் தன்யா நடித்துள்ள ‘கிக்’ படத்தின் இசை விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் விழா முடிந்ததும் வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது..

“ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது.. “அவர் வரட்டும்” என்றார்.

‘லியோ’ படத்தின் இசை வெளியீடு எங்கே நடக்கும் என்று கேட்டபோது அது நிலாவில் நடக்கும் என கலாய்த்து பேசினார்.

அதன் பின்னர் யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது குறித்து பேசிய போது.. அவர் காலில் ரஜினி விழுந்திருக்கக் கூடாது. அவர் மாண்புகளை எல்லாம் மறந்துவிட்டார். என்ன செய்வது அவருக்கு வயசாகிவிட்டது.

அவர் ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே யோகி காலில் விழுந்திருந்தால் ‘ஜெயிலர்’ படம் ஓடி இருக்காது” என்றார்.

Mansoor Alikhan speaks about MGR Rajini and Vijay

அரச உடையில் மோகன்லாலின் அசத்தலான ‘விருஷபா’ பர்ஸ்ட் லுக்

அரச உடையில் மோகன்லாலின் அசத்தலான ‘விருஷபா’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்கள் மத்தியில், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ‘விருஷபா’ படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஆகஸ்ட் 24 அன்று, விருஷபா முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவித்தனர்.

மேலும் ‘விருஷபா’ படத்திலிருந்து, மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில், கையில் வாளுடன், தீவிரமான பார்வையுடன், மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார்.

மோகன்லாலின் அரச அவதாரம் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லாலின் சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. . மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு, படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.

விருஷபா படத்தில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும்.

‘விருஷபா’ படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்) (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

விருஷபா

Mohanlals look in Vrushabha gets thumbs up from fans

த்ரிஷா நயன்தாராவை அடிக்கடி பார்க்கலையா.? வேண்டாம் என்றாலும் கொடுத்த கடவுள் சுபாஸ்கரனுக்கு நன்றி – லாரன்ஸ்

த்ரிஷா நயன்தாராவை அடிக்கடி பார்க்கலையா.? வேண்டாம் என்றாலும் கொடுத்த கடவுள் சுபாஸ்கரனுக்கு நன்றி – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற ராகவா லாரன்ஸ் பேசுகையில்…

” மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் .

இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பர். அவர்களிடத்தில் திரிஷா. நயன்தாரா.. நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே.. அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே.! எனச் சொல்வேன்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ.. கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.

என்னை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதில் சிலரை தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் என்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. வாழ்கிறவன் மனிதன். வாழ வைப்பவன் கடவுள் என்று சொல்வார்கள். எங்கள் மாணவர்களை வாழ வைத்த சுபாஸ்கரன் எங்களுக்கு கடவுள்.

என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.

வேண்டாம் என்று சொல்லும் போது.. கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.

இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.

சந்திரமுகி படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு முறை சந்திக்கலாமா..? என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர். ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்.. என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும். அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக் கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார்.

அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவரிடம் அதே விருந்தோம்பலும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.

அப்போதுதான் எனக்கு வள்ளலார் சொன்னது.. பட்டினத்தார் சொன்னது.. நபிகள் நாயகம் சொன்னது.. ஜீசஸ் சொன்னது.. நினைவுக்கு வந்தது. இந்த உலகத்தை கட்டி போட வேண்டும் என்றால், அதனை அன்பால் மட்டும் தான் முடியும். இத்தகைய அன்பை சுபாஷ்கரனிடம் அன்றும் பார்த்தேன். இன்றும் பார்த்தேன். உங்களின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் பிரம்மாண்டமான லைக்கா நிறுவனத்தில் நானும் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் வாசு மற்றும் நான், சந்திரமுகி 2 படத்தின் பாடலை கேட்பதற்காக காத்திருந்தோம். நான் அப்போது சந்திரமுகி 2 படத்தின் பாடல்களை வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில் உழைக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால் கம்போசிங் தொடங்கும் முன் இயக்குநர் வாசுவும், இசையப்பாளர் கீரவாணியும் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய எம்ஜிஆர் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். டீ சாப்பிடுகிறார்கள். போண்டா சாப்பிடுகிறார்கள். நானும் சந்திரமுகி 2க்கான மெட்டை கேட்க ஆவலாக காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு அருகில் இருக்கிற கீபோர்டில் அமர்ந்து கைவிரல்களை அசைத்தார் ஒரு மெட்டு வந்தது. அதனை வாசு சார் கேட்டார். உடனே ஓகே சொன்னார். அதுதான் நீங்கள் கேட்ட குடும்ப பாடல். அவருடைய கம்போசிங் முழுவதும் சுகிசிவம் சொன்ன குட்டிக்கதை போல் இருந்தது. வேலைய விளையாட்டா பண்ணா ஈஸியா இருக்கும் என்கிறத இவங்க மூலம் எனக்குத் தெரிந்தது.

நான் திரைத்துறையில் நடன கலைஞராக பணியாற்றியபோது பி வாசு இயக்குநர். உதவி நடன இயக்குநராக நான் பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் நடன இயக்குநராக பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் வில்லனாக நடித்த போதும் அவர் இயக்குநர். அதன் பிறகு நான் இயக்குநராக மாறிய போதும்,, அவர் இயக்குநராக இருந்தார். நான் நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் இயக்குநராகவே இருக்கிறார். இந்த படத்தை நான் இயக்குவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அவர் இயக்கிருக்கிறார்.

தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பி வாசுவின் இயக்கத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்த படத்தில் நான் வேட்டையனாக நடித்திருக்கிறேன். வேட்டையன் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புகழ் அனைத்தும் இயக்குநர் பி. வாசுவைத் தான் சாரும்.

என்னுடைய டென்ஷன் அனைத்தையும் குறைப்பவர் வடிவேலு அண்ணன். அவருடைய காமெடிகள் தான் என்னை என் டென்ஷனை குறைக்கும். அவரை இயக்குநர் பி வாசு சார் டாக்டர் என்று சொன்னது மிகச் சரி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.

சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்.. என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ..! என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே… எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன்.

இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. ‘அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்’ என விளக்கம் சொன்னார். அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார்.

அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். ” என்றார்.

இதனிடையே ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே ஏழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Lyca Subaskaran donated 1 Cr to Actor Lawrence Trust

‘சந்திரமுகி’ கேரக்டரை கேட்டு வாங்கிட்டேன்.; பாலிவுட் நடிகை கங்கனா பரவசம்

‘சந்திரமுகி’ கேரக்டரை கேட்டு வாங்கிட்டேன்.; பாலிவுட் நடிகை கங்கனா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில்…

‘ அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு தளத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார்.. என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்படத்துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குனராகவும்.. பிறகு நடிகராகவும்.. பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர். அவர் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார்.

நான் வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.

இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில்…

” ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார். ” என்றார்.

Myself asked Chandramukhi character says Kangana

வேட்டையன் மட்டுமில்ல… இன்னொருத்தனும் இருக்கான்..; வாசு வைத்த ‘சந்திரமுகி2’ ட்விஸ்ட்

வேட்டையன் மட்டுமில்ல… இன்னொருத்தனும் இருக்கான்..; வாசு வைத்த ‘சந்திரமுகி2’ ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் பி. வாசு பேசுகையில்..

” நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ…! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரே காணும் போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.

இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான் . இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.

நான் எப்போதுமே ஓம் என்று எழுதி தான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சிஇஓ தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.

அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம்.

அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.

ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது சந்திரமுகியை தவிர. சந்திரமுகி நடிக்கவிருப்பது யார்?என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார்? என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன்.

ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.

இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும் போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார்.

“அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

நான் எப்போதும் படத்தை தொடங்கும் போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்‌.

ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.

சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”என்றார்.

Not only Vettaiyan one more character is there says Vasu

More Articles
Follows