தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நேற்று, மார்ச் 15ல் திங்கள்கிழமை, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தனக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இவரது மொத்த சொத்து மதிப்பு மொத்தம் 176.93 கோடி ரூபாய்.
இத்துடன் தனக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் தனது வேட்புமனுவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Actor KamalHaasan reveals his total assets, liabalities and family details during nomination