திருமண செய்தியை அறிவித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.; மணமகள் யார்?

திருமண செய்தியை அறிவித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.; மணமகள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இவர் 2010-ல் ரீலீசாகி சரச்சையை ஏற்படுத்திய ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை அமலா பாலும் இதில் தான் அறிமுகமானார்.

இதன் பின்னர் ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து அவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் குவிந்தன.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ரைசாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹரிஷ் கல்யாண். இந்த படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மேலும் ‘இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.

மேலும் தான் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

மணப்பெண்ணின் பெயர் நர்மதா உதயகுமார் எனவும் இவர் ஹரிஷின் நீண்ட நாள் தோழி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Yes its official the most eligible bachelor of our film industry Actor @iamharishkalyan is going to get hitched soon… Here is the press note regarding the same #HK #HarishKalyan #harishkalyan #Narmada #HarishNarmada #HN

@devarajulu29 @DoneChannel1 https://t.co/vm8KjB0c8d

‘குளவி’ படத்தில் இணையும் RK சுரேஷ் & அமீரா வர்மா

‘குளவி’ படத்தில் இணையும் RK சுரேஷ் & அமீரா வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் C.முருகன் அன்னை K.செந்தில்குமார் இருவரும் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘குளவி’ என்று பெயரிட்டுள்ளனர்.

R.K. சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக ‘அயோத்தி’ படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல்கள் – கபிலன், மோகன்ராஜ்
எடிட்டிங் – மு. காசிவிஸ்வநாதன்.
நடனம் – ராதிகா, சக்தி ராஜு.
ஸ்டண்ட் – ஹரி முருகன், ஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – நிமல்
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – V.S.செல்வதுரை.

இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குனர்கள் A.R.முருகதாஸ் , சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் V.S.செல்வதுரை கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம்.

குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது.

நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் V.S. செல்வதுரை.

‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்; தீபாவளிக்கு இல்லையாம்.!

‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்; தீபாவளிக்கு இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோரும் நடிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பிம்பிலிக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

அக்டோபர் 24ல் தீபாவளியன்று படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வைகை புயல் நடிகர் வடிவேலு படங்களின் ரிலீஸ் அப்டேட்

வைகை புயல் நடிகர் வடிவேலு படங்களின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் வடிவேலு தற்போது ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார்.

இதனையடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் லாரன்ஸ் உடன் ‘சந்திரமுகி 2’, உதயநிதியுடன் ‘மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இவை இல்லாமல் கதையின் நாயகனாக ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற வருகிறது.

இதனையடுத்து தீபாவளிக்கு பின்னர் நவம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என தகவல் வந்துள்ளன. முதலில் தியேட்டரில் வெளியாகி சில வாரங்களுக்கு பின்னர் ஓடிடி தளங்களில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vadivelu Movies Release Update

Lights On Media தயாரிப்பில் உண்மை சம்பவத்தை வைத்து உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

Lights On Media தயாரிப்பில் உண்மை சம்பவத்தை வைத்து உருவான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவான திரில்லர் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’.

Lights On Media வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் இந்த ஊர்க்குருவி பறக்க தயாராகியுள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில் …

“கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்” என்றார்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய
தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – AIM சதீஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘பிக் பாஸ்’ தாமரைச் செல்வி அறிமுகமாகும் தமிழ் படம்

‘பிக் பாஸ்’ தாமரைச் செல்வி அறிமுகமாகும் தமிழ் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 5’ பார்வையாளர்களுக்கு சில ஆச்சரியங்களை அளித்தது, ஏனெனில் அறியப்படாத பிரபலங்கள் ரியாலிட்டி ஷோவில் ஆதிக்கம் செலுத்தினர்.

அவர்களில் ஒருவர் கிராமிய நாடக நடிகை மற்றும் நாட்டுப்புற பாடகி தாமரைசெல்வி .

தாமரைச்செல்வி தனது போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் நன்றாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது ஒரு புதிய படத்தில் பெரிய திரையில் அறிமுகமாக இருப்பதாக தாமரை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதில் ரோபோ ஷங்கர், சிங்கம் புலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

More Articles
Follows