டேய் மண்டையா.. நான் உசுரோடுதான் இருக்கேன்.. – கவுண்டமணி

டேய் மண்டையா.. நான் உசுரோடுதான் இருக்கேன்.. – கவுண்டமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goundamaniதமிழ் சினிமாவின் எத்தனையோ காமெடி நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி.

இவரின் காமெடி ஜோடி செந்திலை இவர் அவ்வப்போது மண்டையா.. கோமுட்டி தலையா என திட்டுவது வழக்கம்.

1980 மற்றும் 90களில் கவுண்டரின் காமெடியை மிஞ்ச நடிகர்களே இல்லை எனலாம். எனவே ஹீரோவுக்கு இணையாக இவரது வேடங்கள் திரைப்படங்களில் அமைந்தன.

அண்மையில் இவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து அவரது பாணியில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வாட்சப் வந்தாலும் வந்தது அதில் வதந்திகளை ஏற்படுத்துவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அவர் வீட்டில் நலமாக இருப்பதாகவும் விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ACTOR GOUNDAMANI’S HEALTH RUMOURS DISPELLED; OFFICIAL STATEMENT HERE

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jeyakumarஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் ஜெயக்குமார்.

அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.

ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்.

செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு உணவு கொடுப்பது, சாலையில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் நடந்தால் மேடையில் அவரே பாடுவது, நடனமாடுவது, இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, ஆழ்கடலில் படகில் பயணித்து கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வது,எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் குறை கேட்பது, ஏழ்மையில் இருக்கும் யாரேனும் குறித்து செய்தி தெரிந்தால் அவர்களுக்கு உடனே உதவுவது என்று ஒரு வித்தியாசமான மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.

நேற்று தனது ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெயக்குமார் சென்றிருந்தார்.

காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது சிறுவர்கள் சிலர் கேரம்போர்டு ஆடுவதை பார்த்தார். ஏற்கனவே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அமைச்சர் உடனே சிறுவர்களோடு சென்று அவர்களுக்கு இணையாக அமர்ந்து கொண்டு கேரம் விளையாடத் தொடங்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேரம் ஆடியதால் அவரால் எளிதாக காயினை போட முடியவில்லை.

ஐந்தாவது முயற்சியில் நாணயத்தை கேரம் பாக்கெட்டில் போட்டார். இதைப்பார்த்த சிறுவர்கள் அமைச்சர் தங்களோடு விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது அவர்களைப் பார்த்து மூன்று நான்கு முறை முயற்சி செய்தும் என்னால் காயினை போடமுடியவில்லை, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

இதே போல நீங்களும் எந்த விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் சிறுவர்கள் அமைச்சரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.

புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சிறுவர்களிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்றார் அவர். எந்த நேரத்திலும் மக்களோடு மக்களாகவே பயணிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

Minister Jeyakumar played carrom with children in Royapuram

தயாரிப்பாளரானார் நடிகை மம்தா மோகன்தாஸ்

தயாரிப்பாளரானார் நடிகை மம்தா மோகன்தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mamta mohandasவிஷால் நடித்த சிவப்பதிகாரம் மற்றும் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.

இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்க்கை கசந்துவிடவே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக மாறவுள்ளார் மம்தா மோகன்தாஸ்.

மம்தா மோகன்தாஸ் புரடக்சன் என்ற பெயரில் படங்களை தயாரிக்கவுள்ளார்.

தனது நண்பரான நோயல் பென் என்பவருடன் இணைந்து இந்த தயாரிப்பில் இறங்கியுள்ளார் இந்த சிவப்பதிகார நடிகை.

Actress Mamta Mohandas turns producer

யோகராஜ் பட் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா சிவராஜ்குமார்

யோகராஜ் பட் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா சிவராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shivarajkumar Prabhu devaபிரபல கன்னட இயக்குனரான யோகராஜ் பட்.

இவரின் அடுத்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தின் கதை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்க பிரபுதேவாவை கேட்டதாகவும் அவரும் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வரும் 2021ல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

Shivarajkumar and Prabhudeva to collaborate for a Kannada film

STR46… விஜயதசமியில் பர்ஸ்ட் சைட் & மோசன் போஸ்டர் வெளியிடும் சுசீந்திரன்

STR46… விஜயதசமியில் பர்ஸ்ட் சைட் & மோசன் போஸ்டர் வெளியிடும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செக்கச் சிவந்த வானம் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிம்பு.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.

ஆனால் சில பிரச்சினைகளாலும் கொரோனா ஊரடங்காலும் இப்பட சூட்டிங் நிறுத்தப்பட்டது.

‘மாநாடு’ சூட்டிங்கில் கலந்துக் கொள்வதற்குள் குறுகிய கால படமாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வருகிற விஜயதசமியன்று 26.10.2020 அன்று மதியம் 12.12 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் சைட் மற்றும் மோசன் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது சிம்பு நடிப்பில் 46வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Ready for THE #FIRSTSIGHT of #SilambarasanTR46 on #Vijayadashami 26th October 2020 @ 12:12 pm

STR 46 first look on october 26

STR 46

பீகாரில் பாஜக வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி..; மத்திய நிதியமைச்சரின் மெகா ப்ளான்

பீகாரில் பாஜக வென்றால் இலவச கொரோனா தடுப்பூசி..; மத்திய நிதியமைச்சரின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nirmala seetharamanபீகார் மாநிலத்தில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

நவம்பர் 10-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால் , பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

As soon as #COVID19 vaccine will be available for production at a mass scale, every person in Bihar will get free vaccination. This is the first promise mentioned in our poll manifesto: Union Minister Nirmala Sitharaman at the launch of BJP Manifesto for #BiharPolls pic.twitter.com/x4VjVmkA3Q

BJP promises free Covid 19 vaccination in manifesto

More Articles
Follows