தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா என்பவர், ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிப்புரிந்து வந்துள்ளார்.
இவர் நடிகர் ஆர்யா மீது கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
அதாவது நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகாரளித்தார்
அந்த பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தும் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.
இதனால் விசாரணை மேலும் விறுவிறுப்பானது்.
சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் ஒருவர் போலி வலைத்தளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
அந்த நபரை (சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக்) போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா,
“சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
Actor Arya thanks cops for nabbing conmen who duped a woman using his name