குரங்கு மாடு நாய்களுக்கு உணவளித்த நடிகர் அபி சரவணன்

குரங்கு மாடு நாய்களுக்கு உணவளித்த நடிகர் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan donates food to animals at Madurai இது மதுரைக்கு சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம்.

ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரை திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திருவிழா நிறுத்தம் மக்கள் மகிழ்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. மதுரை அழகர்மலையிலும் அங்கு சுற்றி இருக்கும் வாயில்லா பிராணிகளையும் வாட்டி எடுத்து கொண்டு இருக்கிறது.

ஆம் .. மதுரை அழகர்மலை வாழ் வானரங்கள் பக்தர்களால் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே உண்டு பழக்கப்பட்டவை.

கொரோனாவினால் கோயில் நடை அடைப்பு காரணமாக வானரங்கள் பசியால் வாடி வருவதாக அபி சரவணன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக நடிகர் அபி சரவணன் அவரது நண்பர்கள் பாலகுரு, ராஜ்குமார் ஏகே ரெட்டி மற்றும் ஜெகன் அவர்களுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கனிகளுடன் அழகர்மலைக்கு சென்று அங்கிருக்கும் வானரகங்கள், பசு மற்றும் நாய்களுக்கும் உணவளித்தனர்.

முன்னதாக ஊரடங்கு காரணமாக மதுரை காக்கை பாடினார் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வரும் இருநூறு ஆதரவற்றோர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கினர்.

இந்த ஊரடங்கு முடியும் வரை தன் நண்பர்கள் மூலம் இங்கு வாழும் வாயில்லா பிராணிளுக்கு உணவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்களும் தங்களால் முடிந்த உணவினை தங்கள் பகுதியிலுள்ள வாயில்லா பிராணிகளுக்கு பாதுகாப்புடன் வழங்குங்கள் எனவும் அபிசரவணன் கேட்டு கொண்டார்.

Actor Abi Saravanan donates food to animals at Madurai

BREAKING கொரோனா கூட சாதி மதம் பார்க்காது.. ஆனால்…; அரக்கர்களை கண்டித்த கமல்

BREAKING கொரோனா கூட சாதி மதம் பார்க்காது.. ஆனால்…; அரக்கர்களை கண்டித்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about Corona died patients and burial place issueஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் எண்ணற்ற பல உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடலை தங்கள் வசிக்கும் பகுதிகளில் புதைப்பதால் அந்த வைரஸ் தங்களுக்கு தொற்றக்கூடும் என்ற அறியாமையால் இவ்வாறு போராடி வருகின்றனர்.

இதனையறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த இறந்தவர்களின் உடலை புதைக்க தனது ஆண்டாள் அழகர்
கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களின் அறியாமையை கண்டித்து கமல் ட்வீட் செய்துள்ளார்.

கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal talks about Corona died patients and burial place issue

விஷ்வ-குருவாக மாறுவோம்.; கொரோனாவுக்கு பின் இந்தியாவை புனரமைக்க கமல் ஐடியா

விஷ்வ-குருவாக மாறுவோம்.; கொரோனாவுக்கு பின் இந்தியாவை புனரமைக்க கமல் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reveals How to Reconstruct India after Corona Lock downகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கை அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைத்தல் எப்படி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்… சுகாதாரத்துறையே புதிய பாதுகாப்புத்துறை, உழவுக்கு வந்தனை செய்வோம்.

இப்போதாவது, அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள், வருமான சமத்துவமின்மையை சீர்செய்தல் மற்றும் வறுமை ஒழிப்பு என்ற தலைப்புகளில் பல திட்டங்கள், கோரிக்கைகளை பற்றி தெரிவித்துள்ளார்.

மேலும் , வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டுக் கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கி பயணிக்கும் நேரம் இது. உலக நாடுகள் அனைத்துக்கும் முன் மாதிரியாக, நம்பிக்கையின் முன்னோடியாக சிலருக்கு புரியும்படி சொல்வதென்றால் சரியான காரணங்களுக்காக விஷ்வ-குருவாக மாறுவோம்..

என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..

Kamal reveals How to Reconstruct India after Corona Lock down

 

https://twitter.com/ikamalhaasan/status/1252047160721342465?s=08

நடிகர் ப்ளாக் பாண்டியை இசையமைப்பாளராக்கிய கொரோனா

நடிகர் ப்ளாக் பாண்டியை இசையமைப்பாளராக்கிய கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Black Pandi became Music composer for Corona songநடிகர் பிளாக் பாண்டி தமிழக காவல் துறையினருகாக கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார்.

இதனைப் பற்றி நடிகர் பிளாக்பாண்டி கூறுகையில்….

இந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது நமது காவல்துறையும், துப்புரவு தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.

அவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்த வைரஸை விரட்ட முடியும் என்பதாலும் “விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா” என்ற வரிகளை மையமாக வைத்து ஒரு பாடலை நானும் எனது நண்பன் திரு.ராஜாமுகமதுவும் சேர்ந்து எழுதியுள்ளோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.

இதற்கு உதவிய திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திரு. பிரகாஷம் தலைமை காவலர் முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில் நாம் விலகி கூடுவோம்
நம்மையும் பாதுகாத்து
நம்மை தனிமைப்படுத்தி
நாட்டையும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

ஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்” என்றார்.

Actor Black Pandi became Music composer for Corona song

65 வருசம் சம்பாதித்த பால்கனி பையன் கமல்.. இப்ப வந்துட்டாரு… – ராஜா

65 வருசம் சம்பாதித்த பால்கனி பையன் கமல்.. இப்ப வந்துட்டாரு… – ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balcony Boy Kamal earned for 65 years says BJP H Rajaகொரோனா ஊரடங்கு விஷயத்தில் பிரதமர் மோடி எடுத்த பல நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

மேலும் மோடிக்கு தன் கண்டனங்களை நீண்ண்ண்ண்ட கடிதம் எழுதியிருந்தார்.

மோடியின் அரசு பால்கனி அரசு. அடித்தட்டு மக்களை கண்டுக்கொள்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு சில தினங்கள் கழித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

பால்கனி அரசு? இந்த அரசு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு பால்கனி பையன், தனது 65 ஆண்டு வரை பிஸியாக பணம் சம்பாதித்துவிட்டு தற்போது திடீரென ஏழை மக்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டுகிறார். வெட்கம்’ என்று கூறியுள்ளார்.

Balcony Boy Kamal earned for 65 years says BJP H Raja

https://twitter.com/HRajaBJP/status/1251359891848978434

பஞ்சாயத்து பண்ணல ஆனா…; விஜய்-அஜித் ரசிகர்களை சமாதானம் செய்யும் சாந்தனு

பஞ்சாயத்து பண்ணல ஆனா…; விஜய்-அஜித் ரசிகர்களை சமாதானம் செய்யும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shanthanu advice to Thala and Thalapathy fans to stop fightவிஜய் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

விரைவில் வெளியாகவுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தில் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ட்விட்டர் மோதல் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

‘இங்க நான் ஒண்ணும் பஞ்சாயத்து பண்ண வரல்ல. அது என் வேலையும் இல்லை.

ஆனால் இருதரப்புக்கும் என்னால் முடிந்த ஒரு அறிவுரை. யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ட்ரோல்லை ஆரம்பித்து இருந்தால், தல ரசிகர்களுக்கு எனது வேண்டுகோளாக அதை கண்டுகொள்ளாமல் மறந்துவிடும்படி கேட்டு கொள்கிறேன்.

அதேபோல் ஒருவேளை தல ரசிகர்கள் ஆரம்பித்து இருந்தால், தளபதி ரசிகர்கள் அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடவும். பதிலுக்கு பதில் கூறினால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் போகும்’ என்று கூறியுள்ளார்.

Shanthanu advice to Thala and Thalapathy fans to stop fight

https://twitter.com/imKBRshanthnu/status/1251433554531270656

More Articles
Follows