இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abi saravananஊரடங்கு எதிரொலியாக வறுமையில் வாடிய இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு 13 வகையான காய்கறிகளை வழங்கிய நடிகர் அபி சரவணனுக்கு குவியும் பாராட்டு.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடுவதாக நடிகர் அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து அபி சரவணன் அவருடைய நண்பருடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த வாரம் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்ட வற்றை வழங்கினார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு தேவையான 13 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு இன்று வழங்கினார்.

இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் மற்றும் திருநங்கைகளுக்கும் உதவி பொருட்களை நடிகர் அபி சரவணன் வழங்கினார்.

வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக உதவி பொருட்களை வழங்கிய அபி சரவணனை செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid-19 கிருமி இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் உலகில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஒரு அழகிப்போட்டி நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின் பற்றி வரும் இந்நிலையில் இது எப்படி சாத்தியம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் Madras institute of hotel management வழங்கிய ‘Quarantine Queen’ என்னும் அழகிப் போட்டியை FFace Creators நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் இந்தப் போட்டி முற்றிலும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த அழகிப் போட்டியில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே கலந்து கொண்டனர்.

Quarantine Queen முற்றிலும் பெண்களுக்கானது. இந்தப்போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹரியானா, மும்பை என பல்வேறு இடங்களிலிருந்து பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி ஏப்ரல் மாதம் 22 துவக்கப்பட்டது. இந்த அழகிப்போட்டி பல்வேறு சுற்றுகளை உள்ளடக்கியது.

“தன்னைத்தானே அறிமுகப்படுத்துதல்”(Self introduction)
“கலாச்சார உடை சுற்று” (Traditional)
“பெண்ணுக்குள் ஆண் சுற்று”(Women in Men)
” உடல் பயிற்சி சுற்று”(Workout Shape up)
” நவரசம் சுற்று”(Navarasam)
” திறமை வெளிப்படுத்துதல் சுற்று”(Talent)
” இருதி சுற்று”

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மே மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூரை சேர்ந்த காவியா சௌந்தர்ராஜன் Quarantine Queen பட்டத்தை தட்டிச் சென்றார். அஸ்வினி இரண்டாம் இடத்திலும், கீர்த்தனா கிருஷ்ணன் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டிக்கு திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

F Face Creators இன்னும் இதுபோன்று போட்டிகளை நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

https://drive.google.com/file/d/1_T2aeEsCbv6pS_MLcITkO2g-wfdow638/view?usp=drivesdk

image 01

image 02

image 03

கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது.

திரைத்துறையும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் அதாவது ஆன்லைனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு படம் ரிலீசாகி 100 நாட்கள் ஆன பின்னரே ஆன்லைனில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அடுத்த ஜீன் மாதம் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் வெளியான போது பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrestedநம்ம ஊரு ஹீரோ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசினார். அப்போது ஒரு குட்டி கதை சொன்னார்…

“சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக விஜய்சேதுபதி மீது பல புகார்கள் கூறப்பட்டன.

காவல் துறையில் இந்து மகா சார்பில் புகாரளிக்கப்பட்டது என்பதையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன் ட்விட்டரில் விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

அதில்…. தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்துமத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

என பதிவிட்டுள்ளார்.

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrested

கொரோனாவை விட கொடிய சாதிய நோயின் கோரத்தாண்டவம்.. – ரஞ்சித்

கொரோனாவை விட கொடிய சாதிய நோயின் கோரத்தாண்டவம்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Caste violence in Tamilnadu during Corona lock down sayd Ranjithகொரோனா காலத்தில் மட்டும் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ”உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.

நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம்.

அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, “நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்” என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள்.

ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் டி.கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம்.

திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கொரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது? என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்ற தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.

இந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும்.

இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு நாம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Caste violence in Tamilnadu during Corona lock down says Ranjith

விஜய்சேதுபதி நற்பெயருக்கு கேடு; சமுதாய சீர்குலைவு.. போலீசில் புகார்

விஜய்சேதுபதி நற்பெயருக்கு கேடு; சமுதாய சீர்குலைவு.. போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi fans filed complaint against Hindu Maga Sabha சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விஜய்சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனத்தை இங்கு பேசினார்.

இந்த நகைச்சுவை வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் விஷமிகள் சிலர் பரப்பி உள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே உடனடியாக விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில், “சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது” என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசியதற்கு இந்து மகா சார்பில் புகாரளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi fans filed complaint against Hindu Maga Sabha

More Articles
Follows