பரவை முனியம்மா நலம் பெற்று வருகிறார்..; வதந்திகளை நம்பாதீர்

பரவை முனியம்மா நலம் பெற்று வருகிறார்..; வதந்திகளை நம்பாதீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress and Singer Paravai Muniyamma recovering fastமதுரையை சேர்ந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, தூள் முதல் மான் கராத்தே வரை பல படங்களிலும் நடித்து பிரபலமானார்.

83 வயதான அவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறது.

இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வருகிறார்.

சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை. நேற்று மதியம் ‘பரவை’ முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்டார்.

இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் விசாரித்தனர்.

அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையில் ஒரு சில பிரபல பத்திரிகைகளை பரவை முனியம்மா இறந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அது வதந்தி என பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress and Singer Paravai Muniyamma recovering fast

ரஜினி ஆசியுடன் AVM நிறுவன MS குகனின் மருமகன் நடிகராகிறார்

ரஜினி ஆசியுடன் AVM நிறுவன MS குகனின் மருமகன் நடிகராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini released Aryan Shaam starring Andha Naal first lookஇந்திய சினிமாவில் பழம்பெரும் நிறுவனமான ஏ.வி.எம்., புரொடக்ஷன்ஸ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ஏவிஎம் வழங்க, கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‛அந்த நாள்’. இப்படத்தை விவீ இயக்குகிறார்.

இதில் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் என்பவர் நடிக்கிறார். இவர் ஏவிஎம்.ன் எம்.எஸ்.குகனின் மருமகன் ஆவார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை, ரஜினி வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விரைவில் மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகவுள்ளது.

Rajini released Aryan Shaam starring Andha Naal first look

 

Rajini released Aryan Shaam starring Andha Naal first look

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kuberan postersமம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரன்’.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.

என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அஜய் வாசுதேவ்.. மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குனர் இவரே.மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.

இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இந்த படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று (01.11.2019) காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளிப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். திரைப்பட தயாரிப்பாளர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குனர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சத்யா, சைத்தான் புகழ்) இயக்கி, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் நந்திதா, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

படக்குழு இன்று (நவம்பர் 1, 2019) முதல் முழு வீச்சில் படப்பிடிப்பு நிகழ்த்தி, ‘கபடதாரி’யை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் வெளியிடவுள்ளது.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” !

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi ramakrishnanதமிழின் பல்துறை வல்லமைகளில் ஒருவராக போற்றபடுபவர் லக்‌ஷ்மி ராமகிருஷணன். இணையம், தொலைக்காட்சி, திரைகளில் நடிப்பால் மட்டுமன்றி, சொல்வெதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியது, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அவரது சமீபத்திய படமான “ஹவுஸ் ஓனர்” தமிழ் ரசிகர்கள் கடந்து உலகெங்கும் அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்திய தேசிய திரைப்படவிழா 2019 ல் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இணைய யூடுயூப் தளத்தில், வாழ்வில் கொடுமைகளை சந்தித்து வாழ்வில் மாற்றக் வேண்டி நிற்கும் மனிதர்களை சந்தித்து உதவி வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார்.

இது குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….

முதலில் பல்துறைகளிலும் என் வேலைகள் அனைத்தையும் கவனித்து, பாராட்டி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடிப்பு, இயக்கம், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குதல் என எந்த வேலையையும் நான் நல்லபடி செய்ததற்கு நீங்கள் அளித்த ஆதரவே காரணம். சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி மூலம் பலர் உந்தப்பட்டு தங்கள் வாழ்வில் தெளிவடைந்ததை கூறும்போது அது பெரு மகிழ்ச்சி அளிக்கும். பலரும் என்னை நேரிலும் இணையம் வழியும் தங்கள் பிரச்சனைகளை என்னை உறவாய் நினைத்து கூறுவதும், தீர்வு கேட்பதும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தினால் நான் தற்போது எனது நான்காவது படைப்பான ஹவுஸ் ஓனர் படத்திற்கு பிறகு “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளேன். இது முற்றிலும் நம் வாழ்வியலை மேம்படுத்தும், மதிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சி என்னை சந்தோஷப்படுத்தும் அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரின் வாழ்வை மாற்றக்கூடியதாக இருக்கும் என தீவிரமாக நம்புகிறேன். இந்நிகழ்ச்சி பார்க்கும் உங்களையும் ஒரு மாற்றத்திற்குள் ஈர்த்து மகிழ்விக்கும். இந்நிகழ்ச்சியை சமுதாயத்திற்கு என் வழியில் நான் செய்யும் நன்றிக்கடனாக நினைக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவையும் எப்போதும் போல் அளிக்க வேண்டுகிறேன்.

அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh my kadavuleநகைச்சுவை கலந்த காதல் சித்திரமான ‘ஓ மை கடவுளே’ தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.

ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில்

“ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன.

ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஓ மை கடவுளே படம் இளைஞர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆர்வம் மிக்க படத்தின் தொழில் நுட்பக் குழு மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக செய்திருக்கின்றது. பாடல் மற்றும் முன்னோட்டத்தை வெளியிடும் தேதியையும் திரைக்கு வரும் தேதியையும் வெகு விரைவில் அறிவிப்போம்” என்றார்.

ஹேப்பி ஹை நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் அபிநயா செல்வம் கூறியதாவது…

“படப்பிடிப்பு நிறைவடைந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது எங்கள் முதல் தயாரிப்பு என்பதால் அனைத்தும் கனவுபோல் இருக்கிறது. பின் தயாரிப்புப் பணிகளும், வெளியீட்டு திட்டமிடலும் இருக்கிறது என்றாலும், டில்லி பாபு சாருடன் படத்தயாரிப்பில் இணைந்திருப்பதால், மிகச் சரியான நேரத்தில் சரியான முறையில் படத்தை அவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, விது அய்யணா ஒளிப்பதிவு செய்கிறார். வாணி போஜன் மற்றும் சாரா முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி ராம் திலக்குடன் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

More Articles
Follows