முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை!

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்..அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..

ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு…

இந்த பதிவு

பாரதபிரதமர்
உயர் திரு. #நரேந்திரமோடிஜீ அவர்கள்

இந்திய குடியரசுத்தலைவர்
உயர் திரு. #ராம்நாத்கோவிந்த் அவர்கள்

தமிழக முதல்வர்
உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர்
உயர்திரு. #விஜயபாஸ்கர் அவர்கள்

தமிழகஅரசு தலைமைசெயலர்
திரு. சண்முகம் அவர்கள்

சுகாதாரதுறை செயலர்
திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்

மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதர துறை உயரதிகாரிகள்

முக்கியமாக

அனைத்து மீடியா பத்திரிக்கை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும்

அனைவருக்கமானது…

நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ உள்ளது… “108 ” என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்..

உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில்.அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம் பட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறேன்.

இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன்..தவிர யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல…

மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ கால் சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது

எந்த மாவட்டம்…எந்த தாலுகா…என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள்…இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது…

எனது மனதில் தோன்றிய எண்ணம்…

அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா…

இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது .

எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருததுவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால் ஜி.பி.எஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு வண்டியில் உள்ள ஜி பி எஸ் கருவி மூலம் தெரிவிக்ககூடாது?

இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.?

உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்…

ஏனெனில் கண்முண்ணே ஒரு உயிர் போரடி கொண்டிருக்கம் போது தாலுகா.. வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாக கூறமுடியாது….அல்லவா…

தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்….

அல்லது

இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கு இதே நிச்சயம் சாத்தியமே…

மேலும்

கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைல் கட்டாய செயலியாக அறிமுகபடுத்தலாமே..

இது எனது எண்ணம் மட்டுமே… இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?

மனவலிகளுடன்
அபிசரவணன்…

Calls

BREAKING முன்னாள் ஜனாதிபதி ‘பாரத ரத்னா’ பிரணாப் முகர்ஜி காலமானார்

BREAKING முன்னாள் ஜனாதிபதி ‘பாரத ரத்னா’ பிரணாப் முகர்ஜி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pranab Mukherjee former President of India and Bharat Ratna passed away at 84இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அவருக்கு வயது தற்போது 84.

அவருக்கு மூளையில் சிறுகட்டி இருந்ததாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

எனவே இவர் கடந்த (ஆகஸ்ட்) 10ஆம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக நியூ டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது.

அப்போது நடந்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது. நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்தது.

சில தினங்களில் கோமா நிலைக்கு சென்றார்.

அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இத் தகவலை அவரது மகன் அபிஜிட் முகர்ஜி ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி, இராகுல் காந்தி உளளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானதை அறிந்து, இந்தியா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவர் நம் தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தினார்.

ஒரு அறிஞர் சமமானவர், ஒரு உயர்ந்த அரசியல்வாதி, அவர் அரசியல் ஆளுமை மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளாலும் போற்றப்பட்டார் பிரணாப்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு தனிப்பட்ட முறையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற புகைப்படத்தையும் பிரதமர் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில்…

மிகவும் துயரத்துடன் துரதிருஷ்டவசமாக பிரணாப் முகர்ஜி காலமான தகவல் தேசத்துக்கு வந்துள்ளது. அவரது மறைவுக்கு நாட்டு மக்களுடன் சேர்த்து நானும் எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Pranab Mukherjee former President of India and Bharat Ratna passed away at 84

BREAKING இ-பாஸ் ரத்து.; சூட்டிங் நடத்தலாம்.; பஸ் ரெடி.. செப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு

BREAKING இ-பாஸ் ரத்து.; சூட்டிங் நடத்தலாம்.; பஸ் ரெடி.. செப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் முறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு.

செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்.

தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்

வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.

கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு

75 பணியாளர்களுடன் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்.

தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும்.

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. ஆனால் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது.

தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி

ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.. இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்.

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் முறை ரத்து.

செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.

ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.

மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் அனுமதி. மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்.15 வரை அனுமதி கிடையாது.

டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி.

திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.

நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும்.

E Pass Cancel Shooting Start TN Govt extends lockdown till Sept 2020

விளம்பரங்களில் முதலாளியே நடிக்கலாம் என ஆரம்பித்தவர்.; வசந்தகுமார் மறைவுக்கு சிம்பு இரங்கல்

விளம்பரங்களில் முதலாளியே நடிக்கலாம் என ஆரம்பித்தவர்.; வசந்தகுமார் மறைவுக்கு சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu vasantha kumarமறைந்த காங் எம்.பி. தொழிலதிபர் வசந்தகுமாருக்கு சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்…

உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்.

விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.

கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்.

குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர்.

சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை.

ஏற்க முடியாத இழப்பு இது. நண்பன் விஜய் வசந்தின் குடும்பம் இந்த பேரிழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.

திரு வசந்த குமார் அவர்களை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

அஞ்சலிகள்!

– சிலம்பரசன் TR

BREAKING கொரோனா அன்லாக் 4; செப் 7ல் மெட்ரோ… செப். 21ல் தியேட்டர்; தளர்வுகள் இருக்கா..?

BREAKING கொரோனா அன்லாக் 4; செப் 7ல் மெட்ரோ… செப். 21ல் தியேட்டர்; தளர்வுகள் இருக்கா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unlock 4’கொரோனா அன்லாக் 4.o: செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கில் 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு.. அந்த தளர்வுகள் என்ன..?

நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது

செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல.

செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் – மத்திய உள்துறை

திறந்த வெளி திரையரங்கம் (டிரைவிங் தியேட்டர்) செப்.21ம் தேதி முதல் செயல்படும்.

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க தடை. மேலும் மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது எனவும் உத்தரவு.

போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. மத்திய அரசு மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது.

நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர்கள் செப்டம்பர் இறுதி வரை மூடப்பட்டிருக்கும்.

ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட வெப் சீரிஸ்..; சிக்குவாரா சீயான்..?

ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட வெப் சீரிஸ்..; சிக்குவாரா சீயான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiyaan vikramகொரோனா காலத்தில் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ ஆன்லைன் இணையத்தளங்கள் நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர்.

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போட்டிக் போட்டுக் கொண்டு பெரிய படங்களை வாங்கி ஆன்லைன் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

பொன்மகள் வந்தாள், பெண்குயின், ஒன்பது குழி சம்பத் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.

எவரும் எதிர்பாராத வகையில் தன் சூரரைப் போற்று படத்தை அக்டோபர் 30ல் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று பிரம்மாண்ட வெப்சீரிஸ் தொடரை தயாரிக்கவுள்ளதாம்.

இதில் நடிக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சீயான் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows