விஜய் பெயரை தன் பெயருடன் இணைத்து பெயரை மாற்றிக் கொண்ட அபி சரவணன்

விஜய் பெயரை தன் பெயருடன் இணைத்து பெயரை மாற்றிக் கொண்ட அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vishwaகேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன்.

இதில் ‘மாயநதி’ படத்தில் அபி சரவணன் & வெண்பா ஜோடியாக நடித்திருந்தனர்.

இதில் எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டரை செய்திருந்தார் அபி் சரவணன்.

தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது பெயரை *’விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa )* என்று மாற்றி கொண்டுள்ளார்.

இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.

*VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES*

https://www.instagram.com/vijayvishwaofficial/

https://www.facebook.com/VijayVishwaOfficial

https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES

https://www.instagram.com/vijayvishwaofficial/

https://www.facebook.com/VijayVishwaOfficial

https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

Actor Abi Saravanan changed his name

உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin vijayஜேம்ஸ் பாண்ட் என்றால் நம் நினைவில் வருவது… கோட் சூட், துப்பாக்கி, கூலிங் கிளாஸ்.. கம்பீரமான ஒரு உருவம்.

இதற்கான இலக்கணத்தை வகுத்தவர் தான் ஷான் கானரி.

7 பாண்ட் படங்களின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் சிலர் நடித்தாலும் ஷான் கானரிதான் இதுவரை பெஸ்ட் என ரசிகர்களே சொல்கின்றனர்.

‘டாக்டர் நோ’ படத்தில் ஷான் கானரி பேசிய அந்த ‘பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்’ வசனம் உலகம் முழுக்க பிரபலமானது.

ஷான் கானரி தனது 90வது வயதில் கடந்த 2020ல் காலமானார்.

இவர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்க மறுத்த பிறகு டேனியல் க்ரெய்க் உள்ளிட்டவர்கள் நடித்தனர்.

இதுவரை 4 ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துள்ளார் டேனியல் க்ரெய்க்.

உலகையே மிரள வைத்த பேச வைத்த இந்த ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை தற்போது நடிகர் விஜய்க்காக உருவாக்கி வைத்திருக்கிறாராம் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்

அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில்.. தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு *ஜேம்ஸ் பாண்ட்* என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின்

மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குனர் மிஷ்கின் *பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரீயா தேசிய விருதை வாங்குவார்* என்றார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார்.

Mysskin talks about working with Vijay

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa in addressதனது முதல் பட டைரக்‌ஷனான “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை இயக்கினார்.

இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவருகிறார் இராஜமோகன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார்.

உண்மை சம்பவத்தில்.. முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடித்துக் கொடுத்துள்ளார், அதர்வாமுரளி.

இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா,
தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்:சினேகன்,மோகன் ராஜன், ‘கானா’ ஹரி, எடிட்டிங்:தியாகு,
ஸ்டில்ஸ்: குமார், சண்டைப்பயிற்சி:சில்வா,
மக்கள் தொடர்பு: ஜான்சன்

இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது.

கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று பரபரப்பாக வெளியாகியது.

youtu.be/zK4ClPU7GOg

Atharvaa’s next film is titled as Address

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இன்று விஜய்யின் பிறந்த நாள் (ஜூன் 22ஆம் தேதி) ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசானது.

தளபதி 65 படத்திற்கு BEAST என தலைப்பு வைத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன. தமிழே காணவில்லை.

சமீபகாலமாக விஜய் தன் படங்களுக்கு மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் என வேற்று மொழி பெயர்களையே வைத்தார்.

இப்போதும் தன் படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தன் ட்விட்டர் பதிவில்…

“நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய் மொழியான
#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? Master, Bigil, படங்களை தொடர்ந்து #Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?
@actorvijay https://t.co/VoqtagIqDY

என விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

VCK party condemns Vijay’s new movie title Beast

சூப்பர் ஸ்டார் இடத்திற்கு தனுஷ் & விஜய்சேதுபதி ஆசை.? இப்படி பேசமா இருந்தா அதானே அர்த்தம்.?!

சூப்பர் ஸ்டார் இடத்திற்கு தனுஷ் & விஜய்சேதுபதி ஆசை.? இப்படி பேசமா இருந்தா அதானே அர்த்தம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay sethupathiதிரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் தான்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு.

ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘பைரவி’ படம் வெளியானது முதல் இந்த பட்டத்தை அவருக்கு தமிழ் திரையுலகமும் தொடர்ந்து கொடுத்தது.

ரஜினியும் அந்த பட்டத்திற்கேற்ப நடந்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர். – சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த போதே ரஜினி சினிமாவில் நுழைந்தார்.

1970-80 களில் இரவு பகல் பாராமல் மற்ற மொழி படங்களில் நடிக்க வானில் பறந்தப்படியே இருப்பார்.

இடைவிடாமல் ஒரே வருடத்தில் 20 படங்களில் நடித்துக் கொடுத்தும் இருக்கிறார். இதனால் தன் ஆரோக்கியம் பாதிக்க அவரே காரணமாகாவும் இருந்ததாக ரஜினியே சொல்லியிருக்கிறார். மறைந்த மனோரமா ஆச்சியும் மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாக்கள் எல்லாம் பல சூப்பர் ஸ்டார்களை கடந்த 40 ஆண்டுகளில் பார்த்துவிட்டது.

ஆனால் எவர்க்ரீன் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த். பாலிவுட் கான்களும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போட்டி போட்டாலும் ரஜினியை நெருங்க முடியாத தூரத்திலேயே உள்ளனர்.

இந்த நிலையில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ & விஜய்சேதுபதியுன் க/பெ ரணசிங்கம் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.

இவர்களின் படங்களை வெளியிடும் ஓடிடி தளங்கள் அது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது சூப்பர் ஸ்டார் தனுஷ் & சூப்பர் ஸ்டார் விஜய்சேதுபதி என பட்டப் பெயரிட்டு பிரஸ் ரிலீஸ் செய்கின்றனர்.

இதை தனுஷ் & விஜய் சேதுபதி கவனித்தார்களா? அவர்களது கவனத்துக்கு போனதா? என்பதும் தெரியவில்லை.

ஒருவேளை கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. இந்த தகவலைப் பார்த்த பிறகாவது கவனத்தில் கொள்ளட்டும்.

Will Dhanush and Vijay Sethupathi wants Super Star title?

ரசிகர்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னிங் கொடுக்கும் அல்லு சிரிஷ்

ரசிகர்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னிங் கொடுக்கும் அல்லு சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

allu sirishஅல்லு சிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது.

இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களை தனது ஃபேஸ்புக் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் அல்லு சிரிஷ்.

இதற்காக ‘ட்ரெயினிங் டே’ எனத் தலைப்பில் அன்றாடம் தனது ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ‘ட்ரெயினிங் டே’ சீரிஸின் முதல் வீடியோ அல்லு சிரிஷ் ஜிம்மில் எப்படி அன்றாட பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை விளக்கியிருக்கிறது.

அந்த வீடியோவில்… அல்லு முதலில் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பின்னர் ஒரு கையில் டம்பிள்ஸ் தூக்குகிறார்.

அதை முடித்துக் கொண்டு ஸ்டெர்னம் புல் அப் எனப்படும் பயிற்சியை செய்கிறார். வைட் க்ரிப் லேட் புல்டவுன் பயிற்சி என மொத்தம் 30 நொடிகளுக்கு அவர் விதவிதமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகர் அல்லு சிரிஷ்,…

“நான் எனது உடற்தகுதி இலக்குகளை இன்னும் எட்டவில்லை. எனது இந்தப் பயணத்தை சிறு வீடியோக்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அல்லு சிரிஷ் தனது ‘ட்ரெயினிங் டே’ சீரிஸில் அன்றாடப் பயிற்சிகள் மட்டுமல்லாது யோகா, பாக்ஸிங் பயிற்சிகள் அடங்கிய வீடியோக்களையும் வெளியிடவிருக்கிறார்.

தனது ஃபிட்னஸ் ரகசியங்களை ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

Allu Sirish fitness training to his fans

More Articles
Follows