அர்ஜுன் கட்டிய கோயிலில் உலகில் முதன்முறையாக 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை

அர்ஜுன் கட்டிய கோயிலில் உலகில் முதன்முறையாக 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjunஅனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார்.

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் அர்ஜூன் கூறுகையில்…

“ இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது.

இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவி திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது.

கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜூன் கூறினார்.

Action King Arjun built Anjaneyar temple in chennai

ஜனநாயக பெருமையை இந்தியா இழக்கும்..; காந்தி மண்ணுக்கு தலைக்குனிவு ஏற்படும் – அமீர் ஆவேசம்

ஜனநாயக பெருமையை இந்தியா இழக்கும்..; காந்தி மண்ணுக்கு தலைக்குனிவு ஏற்படும் – அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ameerபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீர் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

வாழ்க ஜனநாயகம்.!
ஒழிக சர்வாதிகாரம்!!
ஜெய் தமிழ்நாடு!!!

இந்தியா.

பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ”உலகின் மாபெரும் ஜனநாயக நாடு” என்பதால் மட்டுமே, சர்வதேச அரங்கில் மிகப்பெரும் மரியாதையையும், பெருமையையும் பெற்றுத் திகழ்கிறது.

இந்த மரியாதையையும், பெருமையையும் தகர்க்கும் விதமாக, தேசப்பற்று என்கின்ற ஒரு போலியான பிம்பத்தின் மூலம் நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே, மொழி வாரி மற்றும் மதவாரி சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள், ஒடுக்குதல்கள், தாக்குதல்கள் நடந்து வருவதோடு, அதற்கு உறுதுணை செய்யும் CAA, NPR, NRC போன்ற சட்டங்கள், விவசாயிகளை ஒடுக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை நடைமுறைப் படுத்தியும் வருகிறது.

மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களோடு நேரடியாக மோதிக் கொண்டும், மக்களை அலைக்கழித்துக் கொண்டும் இருக்கிறது.

மேலும், மக்களின் உரிமையைப் பறிக்க புதிய சட்டங்களைக் கொண்டு வருவதும், அதை எதிர்த்து மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி – நெருக்கடிக் காலத்தைப் போல ஒரு புதிய வகையான அனுபவத்தை இந்தியத் துணைக் கண்ட மக்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசு தந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

பாசிச ஒன்றிய அரசின் முகமூடியைக் கிழித்தெறிய முற்பட்ட முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப் பட்டதற்கே இன்னும் முடிவு தெரியப்படாத நிலையில்,
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாற்றியும், பாடத்திட்டங்களின் மூலம் புதிய கட்டுக்கதைகளை புகுத்தியும், தமிழர்களின் போராட்ட வரலாற்றைத் திரித்துச் சொல்லும் “பேமிலிமேன்2” போன்ற திரைப்படங்கள் வெளிவர அனுமதித்தும், தற்புகழ்ச்சி பாடும் வகையில் மாண்புமிகு பிரதமர் மோதியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், இனிவரும் காலங்களில் இந்தியத் திரைப்படங்களின் மூலமாக நாட்டின் உண்மைத் தன்மையையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் பதிவு செய்துவிடக்கூடாது என்கின்ற சர்வாதிகார நோக்கத்தோடு ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021”-ஐ ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இப்புதிய சட்டத்திருத்த மசோதாவின் சரத்துகளில், முக்கியமாக ”மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை, ஒன்றிய அரசு நினைத்தால் ரத்து செய்யலாம்” என்ற திருத்தம் ஆளும் பா.ஜ.க., அரசின் சர்வாதிகாரத் தன்மையை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது.

ஏற்கனவே, அரசுத்துறைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதும், கருப்புச் சட்டங்களை மக்கள் மீது திணிப்பதும், பாதாள, பதுங்கும் அறைகளுடன் கூடிய ”சென்ட்ரல் விஸ்டா” என்ற புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை கட்டுவதும், அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறையை நோக்கிய நகர்தலே என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும்.

இதுபோன்ற செயல்கள் தொடருமானால், உலக அரங்கில் ”மாபெரும் ஜனநாயக நாடு” என்ற பெருமையை இந்தியா இழப்பதோடு, அன்பையும் , அஹிம்சையையும் சொன்ன மகாத்மா காந்தி பிறந்த மண்ணுக்கு மாபெரும் தலைக்குனிவையும் ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.

எனவே, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021”-ஐ, திரைப்படங்களில் அநீதிக்கு எதிராக வசனம் பேசிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும், அவற்றை எழுதிக் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுமை மிக்க இயக்குனர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்

தயாரிப்பாளர்களும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இந்நேரத்தில்,
அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை.

பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும்
தொழிற்சங்கவாதிகளையும் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ, தொழிற்சங்கவாதியோ அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை.

பின்னர் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நானோ ஒரு யூதன் அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை

கடைசியில் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இருக்கவில்லை
– மார்டின் நியெ மொல்லெர்

என்று ஹிட்லரின் கொடுங்கோல் அரசுக்கு எதிராக போர்ச்சூழலில் எழுதப்பட்ட கவிதையைப் புரிந்து கொள்ளவும், அதே போல நாமும் இங்கே எழுத வேண்டியதும் அவசியமாகிறது.
எனவே, இப்போதாவது ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்.! போராடுவோம்.!
வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம் .!!
ஜெய் தமிழ்நாடு.!!!

– இயக்குனர் அமீர்.

சென்னை

Statement from Director Ameer regarding Amendment of Cinematograph Act Bill 2021

அருவி ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை..; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தடாலடி

அருவி ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை..; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தடாலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sr prabhuபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.

எனவே கமல் சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன் ட்விட்டர் பதிவில்..,

“ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது.

இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!! என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தன் ட்விட்டரில்…

While draft measures to curb piracy are commendable, it is highly undesirable to strangle freedom of expression in a civilized society as ours. Therefore request the goverment to heed our request.

#CinematographAct2021 #FreedomOfExpression

Producer SR Prabhu against for Cinematograph act 2021

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு கமல் சூர்யா விஷால் எதிர்ப்பு.; ரஜினி விஜய் அஜித் மௌனம்

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு கமல் சூர்யா விஷால் எதிர்ப்பு.; ரஜினி விஜய் அஜித் மௌனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Suriya Vishalபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தச் சட்டத்தின்படி ஒருமுறை சென்சார் (தணிக்கைக்கு) ஆளான படங்களை மறு தணிக்கை செய்ய கோர முடியும்.

மேலும் திரைப்பட கதைத் திருட்டு போன்றவற்றுக்காக கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க இச்சட்டம் வகை செய்யும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய வரைவு மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஏனைய பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், உள்ளிட்ட 1400 கலைஞர்கள் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் & கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் மௌனம் காக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Suriya Vishal against on Cinematograph act 2021

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன.? திரையுலகினர் எதிர்ப்பது ஏன்..?

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன.? திரையுலகினர் எதிர்ப்பது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematograph act 2021கடந்த சில தினங்களாக திரையுலகினரால் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பு என்றால் அது..”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021″ தான்.

அதை திரையுலகினர் எதிர்க்க காரணம் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்.

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021

பொதுவாக ஒரு திரைப்படம் மக்கள் பார்வைக்கு வரும் முன் சென்சார் செய்யப்படும்.

அந்த படத்திற்கு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ சான்றிதழை தணிக்கை குழு கொடுக்கும்.

தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும்.

தணிக்கை குழு வழங்கும் சான்றிதழ்களோடு சேர்த்து வயது வாரியாகவும் சான்றிதழ்கள் அதாவது ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இருக்கிறது இந்த புதிய சட்டம்.

அதாவது சென்சார் வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்ய முடியும்.

இன்னும் சொல்லப்போனால் அந்த தணிக்கை சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா மூலம் அதிகாரம் கிடைக்கும்.

மேலும், இதில் படத்தின் கருவோ அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோ மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.

இந்த சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் இந்திய அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது.

(கருத்து கேட்புக்கு கடைசி நாள் நேற்று ஜூலை 2.)

இதுபோன்ற பல திருத்தங்களை இந்த சட்டம் முன் மொழியவுள்ளதால் தங்கள் கருத்துச் சுதந்திரம் தடைப்படும் என படைப்பாளிகள் அச்சம் கொல்கின்றனர்.

எனவே தான் இந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரையுலகினர் எதிர்க்கின்றனர்.

Celebs against cinematograph act 2021

‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyமாடலிங் நடிகை என பெயர் பெற்றவர் நடிகை ஷனம் ஷெட்டி.

இவர் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவரை காதலிப்பதாக கூறினார்.

இவரும் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக காதலனை பிரிந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கமலுக்கு ஆதரவாக சில மாதங்களுக்கு முன்பு பேசினார்.

அதாவது சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை கடுமையாக சாடியிருந்தார்.

இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அடிக்கடி அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இவரின் புகாரினை பெற்றுக் கொண்ட திருவான்மியூர் போலீசார், சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Sanam shetty filed police complaint against her follower

More Articles
Follows