“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி

“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦’ என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும்.. நான் அப்படித்தான்.. என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்..

எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும்.. சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்தபடியே அமேசான், நெட்பிளிக்ஸ ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும்.. ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்.. வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும்.. இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்’ என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘படத்தின் ஆர்ட் டைரக்டர் டாஸ்மாக் போல தத்ரூபமாக செட் போட்டதாகவும் உண்மையிலேயே அதை டாஸ்மாக் கடை என நினைத்துக்கொண்டு சிலர் தண்ணியடிக்க வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.. இதற்கு இவ்வளவு செட் எல்லாம் போட தேவையில்லை.. டாஸ்மாக் என்று ஒரு போர்டு வைத்தாலே போதும்.. உடனே உள்ளே வந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் க்யூவில் நின்று மதுவை வாங்கி குடிக்கிறார்கள்..

இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் ரித்தேஷ், ஸ்ரீதர் இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போல புகழ் பெறுவார்கள்.. இதில் விஸ்வநாதன் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்.. ராமமூர்த்தி பேசமாட்டார் என்று சொல்வார்கள்.. அதேபாணியை நீங்கள் இருவரும் கடைபிடிக்க வேண்டும்.. வீராபுரம் 220 என பின்கோடு சேர்த்து டைட்டில் வைத்துள்ளது பாராட்டுக்குரியது.. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற முருங்கைக்காய் மேட்டரால், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் லாபம் பார்த்தனர்.. ஆனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.. எங்களது தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களை கொண்டு போய் விற்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம்..

சந்திராயன்-2 விண்கலம் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.. அதில் தற்போது சிறிய பிழை மட்டும் நிகழ்ந்துவிட்டது.. அதற்காக அதை கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. சந்திராயன்-2 நம் இந்தியாவின் கெளரவம்.. பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு செல்வதை கூட நீங்கள் கிண்டல் செய்து கொள்ளுங்கள்.. சந்திராயன் நிலவுக்கு செல்வதை தயவுசெய்து விமர்சிக்காதீர்கள்” என்றார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை.. அதனால் தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை.. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான்.. இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து தாங்களாகவே நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.

ஹாலிவுட் ஹீரோக்கள் சம்பளம் வாங்குவது போல ஆரம்பத்தில் 10% தொகையை வாங்கிக்கொண்டு பின்னர் படம் வெளியாகி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள்.. ஆனால் அதுவே அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.. இது உண்மையிலேயே நடிகர்களுக்கு ஏற்ற திட்டம்தான்.. அதற்கு நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்தான் சினிமா நல்லபடியாக இருக்கும்.. என் வீட்டினர் தியேட்டருக்கு போய் க்யூவில் நின்று படம் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு நெட்பிளிக்ஸில் தான் படம் பார்க்கிறார்கள்..

சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வியாபார புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதன் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையை விட தியேட்டர்கள் வினியோக உரிமை மூலம் கிடைத்த தொகை குறைவு.. இதிலிருந்து பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது. எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக பாக்யராஜ் வந்த பிறகுதான் அதன் பவர் என்னவென்று முழுவதுமாக தெரியவந்துள்ளது” என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்ட கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.. சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..

இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.. ஆர்வி.உதயகுமார் சொன்னதை கெட்டு சிரிப்புத்தான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது.. நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அது நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும். இதற்கு முந்தைய விழாவில் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப்போக அது வேறு விதமாக பரவிவிட்டது.. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதை பற்றி சொன்னேன்” என்று கூறினார்.

சிம்புக்கு பதிலாக புளு சட்டை மாறன்; ‘மாநாடு’ பதிலாக மகா கொடுமை..?

சிம்புக்கு பதிலாக புளு சட்டை மாறன்; ‘மாநாடு’ பதிலாக மகா கொடுமை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Blue Sattai Maaran replaces Simbu in Maanadu movieசிம்பு நடிப்பு, வெங்கட்பிரபு இயக்கம், சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என பரபரப்பாக அறிவிக்கப்பட்ட படம் மாநாடு.

இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளும் நடைபெற்றது. மலேசியாவில் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை நீக்கவிட்டதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

ஆனால் அதே மாநாடு தலைப்பில் சிம்புவுக்கு பதில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பார் என கூறப்பட்டது

சிம்புவுக்கு பதிலாக தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் யாராவது நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி புதிய படமொன்றின் பூஜையை பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் முன்னிலையில் நடத்தியுள்ளார்.

இதில் பிரபல திரைப்பட யூடிப் விமர்சகர் புளூ சட்டை மாறன் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிக்கிறாரா? அல்லது தொழில்நுட்ப கலைஞரா? என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர்தான் படத்தின் இயக்குனர் எனத் தெரிகிறது.

ஆனால் இது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 5வது படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள்  ’மாநாடு’ படமாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை எழுப்பி சிம்புக்கு பதிலாக மாறன் நடிக்கிறாரா? எனவும் பேசி வருகின்றனர்.

மாநாடு போச்சு.. இப்போ மகா கொடுமை நடக்குதோ எனவும் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

விரைவில் மற்ற தகவல்களை படக்குழு அறிவிக்கவுள்ளதால் அதுவரை பொறுமையாக காத்திருப்போம்..

Blue Sattai Maaran replaces Simbu in Maanadu movie

Blue Sattai Maaran replaces Simbu in Maanadu movie

‘செகண்ட் ஷோ’வில் இணையும் ஜோடிகள் அஜ்மல் & பல்லவி சுபாஷ்

‘செகண்ட் ஷோ’வில் இணையும் ஜோடிகள் அஜ்மல் & பல்லவி சுபாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajmal and Pallavi Subash starring Second Showஅஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் நாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.

முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – Darkroom Creations
இயக்கம் – A.T.ஞானம்
ஒளிப்பதிவு – L.K.விஜய்
படத்தொகுப்பு – ரங்கிஸ்
பாடல் – பா.விஜய்
நடனம் – சூரஜ் நந்தா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Ajmal and Pallavi Subash starring Second Show

பெண்களை ஏமாற்றும் ‘மிருகா’ ஸ்ரீகாந்த் Vs துணிச்சல் பெண் ராய்லட்சுமி

பெண்களை ஏமாற்றும் ‘மிருகா’ ஸ்ரீகாந்த் Vs துணிச்சல் பெண் ராய்லட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Srikanth and Rai Lakshmi starring Mirugaa directed by J Parthibanஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான்.

அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது.

ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

ஸ்ரீகாந்த்
ராய் லக்ஷ்மி
தேவ் கில்
நைரா
வைஷ்ணவி சந்திரன் மேனன்
த்விதா
பிளேக் பாண்டி
தயாரிப்பு: ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின்
இயக்கம்: ஜே பார்த்திபன்
கதை, திரைகதை, ஒளிப்பதிவு: எம் வி பன்னீர்செல்வம்
கிரியேடிவ் புரொட்யூசர்: எம் நரேஷ் ஜெயின்
வசனம்: ஏ.ஆர்.பி.ஜெயராம்
படத்தொகுப்பு: சுதர்சன்
இசை: அருள் தேவ்
கலை: மிலன் & எஸ் ராஜமோகன்
சண்டை பயிற்சி: தளபதி தினேஷ், ஸ்ரீதர்,விஜய்
வி எஃப் எக்ஸ்: நேக் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகம்: பழனியப்பன்
ஸ்டில்ஸ்: மோதிலால்
விளம்பர வடிவமைப்பு மற்றும் மோஷன் தீசர்–ஆர்-ஆர்ட் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Srikanth and Rai Lakshmi starring Mirugaa directed by J Parthiban

Srikanth and Rai Lakshmi starring Mirugaa directed by J Parthiban

காதலர்களை குறி வைக்கும் SJ சூர்யா-ராதா மோகன்-யுவன் கூட்டணி

காதலர்களை குறி வைக்கும் SJ சூர்யா-ராதா மோகன்-யுவன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Radhamohan team up with SJ Suriya for new movieதன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது.

‘வாலி’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிய SJ சூர்யா ‘நியூ’ மூலம் ஹிரோவனார். மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இப்போது ‘மான்ஸ்டர்’ மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறியிருப்பவர் தன் அடுத்த பயணத்தை தமிழின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகனுடன் ஆரம்பித்துள்ளார்.

இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.

இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’ கலை இயக்குனர் இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார்.

படக்குழுவினர் கலந்துக்கொள்ள மிக எளிய முறையில் இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைப்பெற்றது. சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராதா மோகன், SJ சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரமாண்ட கூட்டணி 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

தற்போது SJ சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

Director Radhamohan team up with SJ Suriya for new movie

Director Radhamohan team up with SJ Suriya for new movie

வயது தடையில்லை; எனக்கான இடம் சினிமாவில் இருக்கு.. – GM சுந்தர்

வயது தடையில்லை; எனக்கான இடம் சினிமாவில் இருக்கு.. – GM சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathya fame actor GM Sundar talks about his cinema experienceசினிமா பல விசித்திரமான குணங்களைக் கொண்டது. முரண்பாடுகளையும் கொண்டது.

நாம் திரையில் பார்க்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர மற்றவர்கள் நம் நினைவுகளில் பதிவதில்லை.

கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர , அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை.

அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம் .சுந்தர்.

இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர் .இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ‘ புன்னகை மன்னன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்.

கமலின் ‘சத்யா’ படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான்.
அண்மைக் காலங்களில் வந்த ‘காதலும் கடந்து போகும்’ படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான ‘மகாமுனி’ படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம்.

இனி ஜி.எம். சுந்தரின் முன்கதைச் சுருக்கம் :

“எனக்குப் பூர்வீகம் திண்டுக்கல் தான் என்றாலும் அப்பாவின் வேலை நிமித்தமாக சென்னை வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டது குடும்பம். எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை.

அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன் .நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள் .

படித்து முடித்து திரைப்பட வாய்ப்புக்காக கவிதாலயா அலுவலகம் சென்றபோது எழுத்தாளர் அனந்து அங்கே இருந்தார் .அவர் மூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ‘புன்னகை மன்னன்’ . அதன் பிறகு கமல் சாரின் நட்பு கிடைக்க அவரது ‘சத்யா’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர் தயாரித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் .அதன் பிறகு ‘கிழக்குக்கரை’, ‘பொன்னுமணி’, ‘அதர்மம்’, ‘தொட்டி ஜெயா’ , ‘எங்க ஊரு காவல்காரன்’ போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது.

திரைப்படக் கல்லூரியில் உலக சினிமாக்கள், நடிப்பின் இலக்கணம் போன்றவற்றை அறிந்த பிறகு, ஓரளவுதெளிந்த பிறகு மேடை நாடகங்களிலும் நடித்து வந்தேன். கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் ‘ நாற்காலி மனிதர்கள்’ நாடகத்தில் நான்தான் நாயகன்.

அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன்.

ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவின் நாடகங்களிலும் நான் தவறாமல் இடம் பெற்றுவிடுவேன். இப்படி மேடையிலும் நடித்து என் நடிப்பு பசியைப் போக்கிக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது .இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை .

ஆனால் வாய்ப்பு கேட்டுச் செல்லும் வேளைகளில் எல்லாம் நான் துவண்டு விடவில்லை. காரணம் குடும்பம் ஆதரவாக இருந்தது.

தோல்வி வேளைகளில் எல்லாம் வெற்றிச் சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்றால் முயற்சியின் சதவீதம் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையும் வேகமும் தான் எனக்குள் இருந்தன.

அதற்கான விளைவுதான் சற்றே காலம் கடந்து வந்தாலும் ‘காதலும் கடந்து போகும் ‘படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி .

‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது ‘மகாமுனி’ படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் . இதுஎனது சமீபத்திய சந்தோஷம்.

திரைப்படங்களில் என்னை அழைத்து நடிக்க வைக்கும் வாய்ப்பு எங்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த தேவையுள்ளவர்களின் கதவைத் கட்டவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.அப்படித்தான் வாய்ப்புக்கான என் போராட்ட காலத்தைப் புரிந்து கொள்கிறேன் .

எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது. அதனால் எனக்கு வயது ஒரு தடை இல்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் .பாசிடிவ், நெகடிவ் என்ற பேதம் எனக்கு இல்லை. அதனால் சரியான அங்கீகாரம் மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்போது நான் நடித்து ‘மண்டேலா’ என்ற ஒரு படம் வரவிருக்கிறது .அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார் . ‘சைரன்’ என்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

திரைப்படக் கல்லூரியில் 1982ல் படித்த எனக்கு 2019 -ல் வாய்ப்பு வந்திருக்கிறது என்கிறபோது எனக்கான இடம் தேவை இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது .”இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.

Sathya fame actor GM Sundar talks about his cinema experience

More Articles
Follows