கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

கோலிவுட்டின் டாப் டைரக்டர்கள் இணையும் ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’..; என்னமோ திட்டமிருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களைப் போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளனர்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

A production house has been launched by 10 directors named Rain on films

தடுப்பூசி செலுத்திய விவேக் மரணம்.; புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

தடுப்பூசி செலுத்திய விவேக் மரணம்.; புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980கள் இறுதியில் தொடங்கி இந்தாண்டு 2021 வரையிலும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தன் நகைச்சுவையாலும் சிந்திக்க வைக்க காமெடியாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விவேக்.

இறப்பதற்கு முன் முதன்முறையாக கமலுடன் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் இன்னும் முடிவடையவில்லை.

மேலும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் உடனும் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அந்த படமும் இன்னும் ரிலீசாகவில்லை.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கருத்துகளை தீவிரமாக பின்பற்றி வந்தவர் இவர்.

ஒருமுறை அப்துல் கலாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து லட்சக்கணக்கான செடிகளை தன் வாழ்நாளில் நட்டுவந்தார் விவேக்.

கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் அச்சம் இருந்த வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 15-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு அடுத்த நாள் உயிரிழந்தார்.

இது தடுப்பூசி அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது.

எனவே விவேக்கின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

அந்த சமயத்தில் ‘தடுப்பூசி போட்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

ஆனாலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

The national human rights comission to investigate actor Vivek’s death

யூடியூபர்களை கலாய்க்கும் யோகி பாபு.; வீரப்பன் குடும்பத்தாரால் படத்தலைப்புக்கு வந்த வில்லங்கம்

யூடியூபர்களை கலாய்க்கும் யோகி பாபு.; வீரப்பன் குடும்பத்தாரால் படத்தலைப்புக்கு வந்த வில்லங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக
இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பனின் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர்
வேடத்தில் நடிக்கிறார்.

எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க
சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயராகி விட்டார்.

யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும்
அமைக்கப்பட்டுள்ளது.

மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள்
ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாம்.

இப்படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளது. ஆம், ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

காடுகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதுவும் குழந்தைகள் என்றால், காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு காட்டு விலங்குகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

விலங்கு நல அமைப்பின் வழிகாட்டின் பேரில் படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் விலங்குகள் வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகளை குஷிப்படுத்தும் என்பது உறுதி.

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன்,
யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனின் காம்போவால் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து
தரப்பினரும் பார்த்து மகிழும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

அடர்ந்த காடுகளிலும், காடுகள் சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, தளக்கனம்,
நாகர்கோவில் உள்ளிட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடைபெற்றது.

தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன. கலகலப்பான காமெடி
படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Yogi Babu’s new film title gets changed

தமிழக விஐபிக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் வீட்டை மாற்றிய கமல்ஹாசன்

தமிழக விஐபிக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் வீட்டை மாற்றிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கும் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இன்று கமலுடன் படப்பிடிப்பில் நரேன் இணைந்துள்ளார். அந்த படங்கள் வைரலாகி வருகிறது.

கமல் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்வார் பேட்டையில் வசித்து வந்தார். இதனாலேயே இவரை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

இப்போது அதை அலுவலமாக மாற்றி விட்டார் கமல்ஹாசன்.

இந்நிலையில் சென்னையின் போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது வீட்டை கமல்ஹாசன் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பகுதியில்தான் பிரபல தொழில் அதிபர்களான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், சன் டிவி கலாநிதி மாறன், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்ரீனிவாசன், உள்ளிட்ட பல தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan shifts his house into Boat Club area

ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா காமெடியன்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில காலமாக நடிப்பதை நிறுத்தி விட்டார் கவுண்டமணி.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளமாட்டார்.

இறுதியாக மறைந்த நடிகர் விவேக் இறுதி சடங்கில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் கவுண்டமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன்.

“லெஜண்ட் உடன், பல மகிழ்ச்சிகளை கொண்ட சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும் நாள் ஆல் டைம் பேவரைட்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் சிவகார்த்தியன் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sivakarthikeyan meets legendary comedian Goundamani

ராஜமௌலிக்காக விட்டுக் கொடுத்து காத்திருக்கும் ஷங்கர்

ராஜமௌலிக்காக விட்டுக் கொடுத்து காத்திருக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது டைரக்டர் ஷங்கர் தான்.

இவரது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசானாலும் இவர் நேரிடையாக மற்ற மொழி படங்களை இயக்கவில்லை.

(ஹிந்தியில் மட்டும் ஒரு படம்)

தற்போது முதன்முறையாக தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்பட படப்பிடிப்பை செப்டம்பர் 10 முதல் ஆரம்பிக்க இருந்தனர்.

ஆனால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் விடுப்பட்ட காட்சிகளை ராம் சரணை வைத்து 3 வாரங்கள் எடுக்கவுள்ளாராம் ராஜமவுலி.

மேலும் ‘ஆச்சார்யா’ படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டி காட்சிகள் மீதம் உள்ளதாம்.

எனவே அந்த இரு படங்களையும் முடித்துவிட்டு வாருங்கள் என ராம்சரணிடம் சொல்லிவிட்டாராம் ஷங்கர்.

அதன்படி தற்போது அக்டோபர் மாதம் முதல் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Ram Charan – Shankar film gets delayed

More Articles
Follows