தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று (ஜனவரி 17) தன் இல்வாழ்க்கையில் இருந்து தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ்.
இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினி மகளின் வாழ்க்கை இப்படியானதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவாகரத்து என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். கணவன் மனைவி இடையில் தலையிட நாம் யார்.? தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. தற்போது விஷயம் அதுவல்ல.
தனுஷின் சமீபகால கடிதம் மற்றும் அறிக்கைகளை பார்த்தால் தன் முழுப்பெயரை குறிப்பிடமாட்டார். அதில் வெறும் D என்ற எழுத்து மட்டுமே இருக்கும்.
மேலும் தவறாமல் ஓம் நமசிவாயா.. என்ற வார்த்தையும் அத்துடன் SPREAD LOVE என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும்.
நேற்றை விவாகரத்து அறிக்கையில் கூட இறுதியாக SPREAD LOVE என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.
SPREAD LOVE… SPREAD LOVE… என மூச்சுக்கு 300 முறை சொல்லும் நீங்கள் அதை பாஃலோ செய்யாமல் தானே இப்படி ஒரு விவாகரத்து உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது.
அப்படியென்றால் அதை மீண்டும் மீண்டும் நீங்கள் ஏன்? சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்..?
நீங்கள் சரியாக SPREAD LOVE செய்திருந்தால் உங்கள் விவகாரம் விவாகரத்து வரை வந்திருக்குமா? ப்ரோ..
எனவே அட்வைஸ் யாரு வேணாலும் செய்யலாம்.. ஆனால் அதை பாஃலோ செய்வது ரொம்ப கஷ்டம். மிஸ்டர் .டி.
எனவே இனிமேலாவது அதை தவிர்த்துவிடுங்கள் தனுஷ்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் …
சொல்லிய வண்ணம் செயல்
A common man doubt on Dhanush’s decision