தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு அதிகாலை 9:00 மணிக்கு தான் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம்.
அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.. 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசை தயாரிப்பு நிறுவனம் நாடலாம் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் இது தொடர்பான ஆலோசனை ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர்கள் கூறியதாவது..
“அக்டோபர் 20ஆம் தேதி முதல் லியோ டிக்கெட் விற்பனைகளை ஏற்கனவே புக்கிங் செய்து விட்டோம்.
19ஆம் தேதிக்கு சில திரையரங்குகளில் 9 மணி காட்சிகள் புக்கிங் செய்யப்பட்டு விட்டன. இப்போது திடீரென அரசு 7:00 மணி காட்சிக்கு அனுமதி அளித்தாலும் அது முடியாது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உருவாகும்” என அவர்கள் தெரிவித்தனர்.
7am shows not possible for Leo movie