உன்ன மிஸ் பண்ணுவேன் ப்ரோ..; 4G டைரக்டர் வெங்கட் பக்கர் மரணம் குறித்து ஜிவி. பிரகாஷ்

உன்ன மிஸ் பண்ணுவேன் ப்ரோ..; 4G டைரக்டர் வெங்கட் பக்கர் மரணம் குறித்து ஜிவி. பிரகாஷ்

4g director Venkat pakkarகாலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார்.

‘4G’ கதையை அவர் என்னிடம் சொல்லும் போது, உடனே ஒப்புக் கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்த கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது. வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. சொன்ன கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்து கொடுத்துவிட்டார். ‘4G’ கதைக்களம் பற்றி படம் தயாரானவுடன் சொல்கிறேன். அந்தக் கதையோடு அவர் அந்தளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார். அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை ‘4G’ படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும் போது வெங்கட் பக்கர் பற்றி இன்னும் நிறையச் சொல்வேன்.

கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ…

கண்ணீருடன்
ஜி.வி.பிரகாஷ்

BREAKING அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.. – கமல்

BREAKING அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.. – கமல்

actor kamal haasanகொரோனா பொது முடக்கத்திலும் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.

இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.

இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்..

ஆனால், ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.

ஆனாலும் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.

ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மநீம தலைவர் கமல் இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது.
திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில்.
அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது..

எனப் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

சரக்கடிக்க 7 நாள் 7 கலர் டோக்கன்..; மதுக்கடையை திறக்க மல்லு கட்டி வென்ற அரசு

சரக்கடிக்க 7 நாள் 7 கலர் டோக்கன்..; மதுக்கடையை திறக்க மல்லு கட்டி வென்ற அரசு

TN liquor shopsகொரோனா பொது முடக்கத்திலும் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.

இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.

இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்..

ஆனால், ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.

ஆனாலும் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.

ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் சரக்கடிக்க புது வழிமுறைகளை வகுத்துள்ளது அரசு.

அதாவது… மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது.

சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், காக்கி, வைலட், பிங்க் ஆகிய 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம்.

மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Attachments area

BREAKING வாரத்தில் 6 நாட்கள் வேலை; 2 நாட்களுக்கு 1 நாள் வேலை..; தமிழக அரசு உத்தரவு

BREAKING வாரத்தில் 6 நாட்கள் வேலை; 2 நாட்களுக்கு 1 நாள் வேலை..; தமிழக அரசு உத்தரவு

TN Governmentகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த முடக்கம் வரும் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

அத்துடன், மே 17ஆம் தேதிக்கு முன்பு பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் மே 18 திங்கட் கிழமை முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனத் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர்.

வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும்..

தலைமைச் செயலகம், மாவட்ட அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் செயல்படும்.

பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்குப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குரூப் ஏ’ அதிகாரிகள் அனைத்து நாட்களும் அலுவலகத்திற்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் பணியில் இல்லாத ஊழியர்கள் தேவைப்படும்போது பணிக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தலைவருடன் மோத ‘வலிமை’யுடன் தயாராகும் தல

மீண்டும் தலைவருடன் மோத ‘வலிமை’யுடன் தயாராகும் தல

rajini ajithகடந்த 15 வருடங்களாக ரஜினிகாந்த் படங்கள் ரிலீசாகும் போது மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாது. காரணம் ரஜினி படத்துடன் மோதி வசூலை எதிர்பார்க்க முடியாது என்பதே.

ஆனால் சில ஹீரோக்கள் எப்படியாவது ரஜினியுடன் மோதியாக வேண்டும் என காத்திருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் சந்திரமுகி படத்துடன் மோத தன் சச்சின் படத்தை வெளியிட்டார் விஜய்.

அதுபோல் கடந்தாண்டு 2019ல் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீசான போது தன் விஸ்வாசம் படத்தை வெளியிட்டார் அஜித்.

தற்போது மீண்டும் ரஜினி படத்துடன் மோத 2021 பொங்கலுக்கு தயாராகி வருகிறாராம் நடிகர் அஜித்.

அதாவது ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் போது அஜித்தின் வலிமை படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

வலிமை படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு மட்டுமே நியாயம் ஆகாது.. – MS பாஸ்கர்

ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு மட்டுமே நியாயம் ஆகாது.. – MS பாஸ்கர்

ms baskarதிருவெண்ணெய்நல்லூரில் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை குடும்ப பகை காரணமாக மனித மிருகங்கள் கொடூரமாக எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும் , அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்?.

ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு?

முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவி பெண் ஜெயஶ்ரீக்கும் , மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும்.

அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows