‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை.. 45 Years of Mohanism.; ரசிகர்களுடன் மோகன் உற்சாகம்

‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை.. 45 Years of Mohanism.; ரசிகர்களுடன் மோகன் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் ஒருவர் மோகன்.

இவர் நடித்த இதயக் கோயில், விதி, 100வது நாள், உருவம், உதயகீதம், குங்குமச்சிமிழ், பயணங்கள் முடிவதில்லை, மெல்ல திறந்தது கதவு, மௌனராகம் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரது படங்களில் பெரும்பாலும் மேடை கச்சேரி இடம் பெறும். அதுபோல இவரது படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.

எனவே இவருக்கு மைக் மோகன் என்ற செல்ல பெயரும் உண்டு. இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களுக்கு இவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பெண்கள் மத்தியிலும் இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இவரது படங்கள் குறைந்தபட்சமாக 100 நாட்களை தாண்டி தான் ஓடும். பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளிவிழா நாயகன் (சில்வர் ஜூப்ளி ஸ்டார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவரது படங்கள் வெளியாகி 30 – 35 வருடங்களை கடந்து விட்டாலும் தற்போதும் இரவு நேரங்களில் இவரது பாடல்களை கேட்கும் ரசிகர்கள் ஏராளம். அதுபோல ரேடியோ / டிவிக்களிலும் இரவு நேரங்களில் இவரது பாடல்கள் தான் ஒலித்து வருகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தன்னுடைய பாடல்கள் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி என்பதால் அவரது இறுதிச் சடங்கில் கொரோனா காலத்திலும் கலந்து கொண்டார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த மைக் மோகனை திரும்பவும் நாயகனாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

இவர் இயக்கி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன் குஷ்பூ யோகி பாபு மொட்ட ராஜேந்திரன் ரயில் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மோகன் சினிமாவில் பயணித்து வரும் 45 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மோகன் ரசிகர்கள் இன்று அக்டோபர் 7ல் விழா எடுக்கின்றனர்.

‘கோகிலா’ முதல் ‘ஹரா’ வரை என்ற பெயரில் 45 இயர்ஸ் ஆப் மோகனிசம் (45 Years of Mohanism) என்ற இந்த நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர்.

இதில் லீயாண்டர் லீ மார்ட்டி இசையில் ‘ஹரா’ படத்தில் இடம்பெற்றுள்ள கயா முயா என்ற பாடலை ரிலீஸ் செய்யவிருக்கிறார் விஜய் ஸ்ரீ.

இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கோவை மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

‘ஹரா’ படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி, ஒளிப்பதிவாளர் மனோ & பிரஹத், கோவை நடிகர் சங்கத் தலைவர் சாகுல் மற்றும் நமஸ்காரம், அலெக்ஸ், அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

மீண்டும் பின்னணி பாடகராக மாறிய கார்த்தி – அதிகாரப்பூர்வ விவரங்கள்

மீண்டும் பின்னணி பாடகராக மாறிய கார்த்தி – அதிகாரப்பூர்வ விவரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தியின் அடுத்த படமான ‘சர்தார்’ அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவிருப்பதால், கார்த்தி ரசிகர்கள் பிரம்மாண்டமான தீபாவளி விருந்துக்கு தயாராகி வருகின்றனர். .

கிராமப்புற நாட்டுப்புற பாடலான “ஏறுமயிலேறி” என்ற முதல் பாடலை சர்தார் படத்திற்காக கார்த்தி பாடியுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிஸியான நடிகராக வலம் வரும் கார்த்தி ஏற்கனவே ‘சகுனி’, ‘பிரியாணி’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களிலும், சமீபத்தில் வெளியான ‘கனம்’ படத்திலும் பாடல்கள் பாடியுள்ளார்.

நடிகர் அர்னவ் மீது கர்ப்பிணி நடிகை திவ்யா அடிச்சு துன்புறுத்துவதாக புகார்

நடிகர் அர்னவ் மீது கர்ப்பிணி நடிகை திவ்யா அடிச்சு துன்புறுத்துவதாக புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர்.

திவ்யாவின் வற்புறுத்தலின் பேரில் அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து, அர்னவ் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜூன் மாதம் இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது திவ்யா தனது கணவர் அடிப்பதால் எந்த நேரத்திலும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தான் முஸ்லிமாக மாறியது மட்டுமின்றி, தற்போது வேலையே இல்லாத அர்னவ் கடன்களை அடைத்து வருவதையும் தெரிவித்துள்ளார்.

‘காட் ஃபாதர்’ முதல் நாளிலேயே பெரிய வசூலை ஈட்டியது

‘காட் ஃபாதர்’ முதல் நாளிலேயே பெரிய வசூலை ஈட்டியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவான ‘காட்ஃபாதர்’ (அக்டோபர் 5 இல்) திரைக்கு வந்தது. இது மலையாளத்தில் ஹிட் அடித்த லூசிஃபர் படத்தின் அதிகார பூர்வ ரீமேக் ஆகும்.

படம் முதல் நாளில் 38 கோடி ரூபாய் (உலகம் முழுவதும்) வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று வருவதால் வரும் நாட்களிலும் படம் அதன் வேகத்தை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் மோகன் ராஜா திறமையுடன் சில பகுதிகளை மாற்றியமைத்ததற்காக நேர்மறையான கருத்துகளைப் பெறுகிறார்.

PS1 பூங்குழலியின் அடுத்த அவதாரம் ‘அம்மு’.; கைகொடுத்த 3 டாப் ஹீரோயின்ஸ்

PS1 பூங்குழலியின் அடுத்த அவதாரம் ‘அம்மு’.; கைகொடுத்த 3 டாப் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

6 அக்டோபர் 2022 – ப்ரைம் வீடியோ, இன்று, அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்முவின் உலகளாவிய பிரீமியர் அக்டோபர் 19 அன்று வெளியிடப்படும் என அறிவித்தது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கல்யாண் சுப்ரமணியன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸின் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளனர்.

சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும்.

குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது உள் மோதல்களைக் கடந்து, அவளது உள வலிமையைக் கண்டறிந்து, அவளது துஷ்பிரயோகம் செய்யும் கணவனுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு, அம்மு சிலிர்ப்பான மாற்றத்தைக் காண்கிறாள்.

இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி டைட்டில் ரோலில் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ், வினீத் ஸ்ரீனிவாசன், கிரண்ராஜ், தருண் பாஸ்கர் போன்ற முன்னணி இயக்குநர்களால் முதல் பார்வை வெளியிடப்பட்டது மற்றும் அம்முவின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை நடிகைகள் சாய் பல்லவி, மஞ்சு வாரியர், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் வெளியிட்டனர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில்…

“அம்மு ஒரு பழிவாங்கும் த்ரில்லர் என்பதை தாண்டி அற்புதமான படைப்பு. திரைப்படம், நாடகத்தில் வேரூன்றியுள்ளது.

வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் . இது ஐஸ்வர்யா, நவீன் மற்றும் சிம்ஹா ஆகியோருடன் தொழில் ரீதியிலான மிகச்சிறந்த கலைஞர்களால் அற்புதமாக நிகழ்த்தப்பட்டது.

சாருகேஷ் சேகரின் உணர்வுப்பூர்வமான மையக்கருவை அப்படியே வைத்துக்கொண்டு இந்த உணர்வுபூர்வமான முக்கியமான கதையை கொண்டு வந்ததற்காக நான் பாராட்டுகிறேன்.

மேலும் பிரைம் வீடியோ மூலம் இந்த திரைப்படத்தை 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

PS1 Poonguzhali fame Aishwarya Laxmi next movie titled Ammu

நடிகர் எடிட்டர் ஒளிப்பதிவாளர் இணைந்து தயாரித்த ‘எமகாதகி’ படத்திற்கு ராஷ்மிகா ஆதரவு

நடிகர் எடிட்டர் ஒளிப்பதிவாளர் இணைந்து தயாரித்த ‘எமகாதகி’ படத்திற்கு ராஷ்மிகா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர்.

சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்

தயாரிப்பாளர்கள் வெங்கட்ராகுல், சுஜித்சாரங் ஸ்ரீஜித்சாரங்
இயக்கம்- பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்

தொழில் நுட்ப குழுவினர்

ஒளிப்பதிவு – சுஜித் சாரங்
எடிட்டர் & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங்
இசை – ஜெசின் ஜார்ஜ்
கலை – ஜோசப் பாபின்
சவுண்ட் டிசைன் – Sync Cinema
சவுண்ட் மிக்ஸிங் – அரவிந்த் மேனன்
VFX. Paperplanevfx
ஸ்டண்ட் – முரளி G
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் (Sivadigitalart)

Rashmika reveals first look of super natural thriller Yamakaathaghi

More Articles
Follows