ஹீரோக்களில் சிவகார்த்திகேயனுக்கு 4வது இடம்; ரசிகர்களுக்கு நன்றி

ஹீரோக்களில் சிவகார்த்திகேயனுக்கு 4வது இடம்; ரசிகர்களுக்கு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஹீரோக்களின் நடிப்பையும் அவர்களின் ஸ்டைலையும் பின்பற்றிய ரசிகர்கள் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களை பாலோ செய்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது 4வது இடத்தில் இருக்கிறார். அதாவது 2 மில்லியன் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

அதற்காக தன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோக்கள் யார்?

1) ரஜினி 3.39 மில்லியன்

2) தனுஷ் 3.17 மில்லியன்

3) சித்தார்த் 2.28 மில்லியன்

இவர்களை அடுத்து மற்ற இடங்களை பிடித்துள்ள ஹீரோக்கள் யார்?

5. மாதவன் – 1.54 million

6. ஜி.வி.பிரகாஷ் – 1.37 million
7. சிம்பு – 1.34 million
8. பிரகாஷ்ராஜ் – 1.33 million
9. ஜெயம் ரவி – 1.21 million
10. சூர்யா – 1.12 million

(இத்தகவல் ஆகஸ்ட் 18, 2016 வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது)

கொடி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

கொடி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanushதனுஷ் நடித்துள்ள தொடரி படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள கொடி படத்தின் வெளியீட்டு தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் தனுஷ்.

இப்படத்தை தீபாவளி விருந்தாக தன் ரசிகர்களுக்கு தரவிருக்கிறாராம்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரஜினி ரூ. 1 கோடி கொடுக்கனும்… எச்சரிகை செய்யும் விவசாயிகள்

ரஜினி ரூ. 1 கோடி கொடுக்கனும்… எச்சரிகை செய்யும் விவசாயிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநதி நீர் இணைப்பு திட்டத்துக்கு தான் அறிவித்தப்படியே ரூ. 1 கோடியை ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், ரஜினியை சந்திக்க, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சட்டையை கழற்றி எரித்துவிட்டு, சாலையில் போராடுவோம் என்று போலீசாரிடம் கூறினர்.

பின்பு அனுமதி அளிக்கப்படவே ரஜினியின் உதவியாளரிடம் கடித்தை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நதிகள் இணைப்பு சாத்தியமாகும் என்றார் நரேந்திர மோடி.

மேலும் இத்திட்டத்திற்கு தன் பங்காக, ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

இதுவரை இரண்டும் நடைபெறவில்லை.

எனவே, விவசாயிகளின் நல்லெண்ண துாதராகச் சென்று, ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியை சந்தித்து, ஒரு கோடி ரூபாயை ரஜினிகாந்த் வழங்க வேண்டும்.

அவர் அதற்கான நிதியை வழங்காவிட்டால், அவர் வீட்டின் முன், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்றார்.

மீண்டும் ஓர் எழுத்து தலைப்பை தேர்ந்தெடுத்த ஜீவா

மீண்டும் ஓர் எழுத்து தலைப்பை தேர்ந்தெடுத்த ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kee movie poojaஜீவா நடித்துள்ள திருநாள் படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ஜீவா.

சிம்பு நடித்துவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வரும் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கீ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இதற்கு முன்பே ஈ என்ற ஓர் எழுத்து தலைப்பில் ஜீவா நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கீ என்ற இந்த புதிய படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ஆர்ஜே பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீராகிருஷ்ணன் உள்ளிடோர் நடிக்கவுள்ளனர்.

செல்வராகவனின் உதவியாளர் காலீஸ் இயக்க விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

அனீஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் வீட்டில் நடைபெறும் திருமண ஏற்பாடு

கீர்த்தி சுரேஷ் வீட்டில் நடைபெறும் திருமண ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh sister marriage going to happen sept 8th 2016டாப் ஹீரோக்களுடன் நடித்து, தமிழக இளைஞர்களை கிறங்கடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவரது தாயார் மேனகாவும் முன்னாள் நடிகை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மலையாளத்தில் பல படங்களிலும் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவரது மூத்த மகள் ரேவதிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம்.

வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி ரேவதி சுரேஷ்க்கும் நிதின் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 9ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் 11ஆம் தேதி சென்னையிலும் (திருமால் திருமகள் வசந்த மஹால், பாடி) திருமண வரவேற்பு நடைபெறுகிறதாம்.

தனுஷுக்கு வழிவிட்டு தள்ளிப்போகும் விக்ரம்

தனுஷுக்கு வழிவிட்டு தள்ளிப்போகும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram dhanushவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படம் செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் பெரும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படமும் வெளியாக இருந்தது.

இரு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்த்தோம்.

இந்நிலையில் சில காரணங்களால், தொடரிக்கு வழிவிட்டு இருமுகன் தள்ளி போகிறதாம்.

அதாவது ஒரு வாரம் விட்டு, செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows