தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலான தனியார் & அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தி வருகின்றனர்.
செல்போன் & லேப்டாப் வாங்கிட வசதியில்லாத மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளில் கூட சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதால் சமீபத்தில் தமிழக அரசு விதிமுறைகள் விதித்து அறிக்கை வெளியிட்டது.
பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் கண்ணியமாக உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்பு நிகழ்வை முழுமையாக பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.
பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் பள்ளி சாரா வெளிநபர் ஒருவரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆன்லைன் வகுப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்…
“வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.
2 GB free data scheme should be implemented says Kamal Haasan