தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியை ஏஆர் முருகதாஸ் இயக்க மாட்டாரா? கமலை பாலா இயக்க மாட்டாரா? அஜித்தை ஷங்கர் இயக்க மாட்டாரா? விஜய்யை மணிரத்னம் இயக்க மாட்டாரா? என இம்மாதிரியான கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடப்பார்கள்.
ஆனால் இதையெல்லாம் மீறி ரசிகர்கள் எதிர்பாராத ஒரு கூட்டணியை உருவாக்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள் சினிமாக்காரர்கள்.
அப்படியான ஒரு ஷாக்தான் இன்றைய செய்தியாக கிடைத்துள்ளது.
பிரபல இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரை இயக்கவிருக்கிறார் பேரரசு.
இந்த கூட்டணிக்கு இன்னும் பல சேர்க்கும் விதமாக இதில் விஷாலும் இணைந்திருக்கிறார்.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.








